சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 10, 2022

சாணக்கியன் நாவல் இன்று வெளியீடு!




அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

சாணக்கியன் வரலாற்று நாவல் இரண்டு பாகங்களில் இன்று வெளியாகி இருக்கின்றது. இந்த நாவல் சத்ரபதி நாவலையும் விட அதிகப் பக்கங்களில்  நீண்டதால் (மொத்தம் 880 பக்கங்கள்) வாசகர்களுக்கு மிகத் தடிமனான ஒரே நாவலாகக் கையில் வைத்துப் படிக்க சிரமமாக இருக்கும் என்று எண்ணி இரண்டு பாகங்களாக வெளியிட்டு இருக்கிறேன். ஒரே தலைப்பில் இரண்டு பாகங்களாக ஒரே சமயத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நாவல் இது தான்.  

இந்த வரலாற்று நாவல் இன்னொரு புதிய வரலாறையும் உருவாக்கி இருக்கிறது. இந்த நாவல் என்.கணேசன் புக்ஸ் (N.Ganeshan Books) என்ற புதிய பதிப்பகத்தின் மூலமாக வெளியாகியுள்ளது. இனி வரும் புதிய நூல்களும், பழைய நூல்களின் அடுத்த பதிப்புகளும் இந்தப் புதிய பதிப்பகத்தாலேயே வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் புதிய பதிப்பகத்தின் துவக்கத்திற்கு உறுதுணையாக இருந்த என் பழைய பதிப்பாளர் யாணன் (ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்) அவர்களுக்கு இந்த நாவலை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.


இந்த வலைப்பூவில் இல்லுமினாட்டி முடிவடைந்த பின் ஏப்ரல் 21 முதல் ஒவ்வொரு வாரமும் சாணக்கியன் நாவலின் அத்தியாயங்கள் அப்டேட் ஆகும். மொத்தம் 195 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை வெளியாகும். 

இப்படி மூன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்து சிறிது சிறிதாகப் படிப்பதற்குப் பதிலாக இந்த சுவாரசியமான, கருத்தாழம் மிக்க  நாவலை நீங்கள் உடனடியாகவும்  வாங்கிப் படிக்கலாம். 

சாணக்கியன் இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ900/-


நாவலின் குறிப்பு: 


தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல் தடுத்து, முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மாணவன் சந்திரகுப்தனை மகத அரியணையில் அமர்த்தி, பின் ஒன்றிணைந்த பாரதம் உருவாக்குவது என்று ஒரு ஏழை ஆசிரியன் முடிவெடுத்தது கற்பனையிலும் சாத்தியமாக வாய்ப்பில்லை தான். ஆனால் எண்ணத்தில் வலிமையும், அறிவில் உச்சமும் கொண்டிருந்த சாணக்கியன், இது வரை உலகில் யாரும் சாதித்திராத சரித்திரம் படைத்தது எப்படி? ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியது எப்படி? விறுவிறுப்புக்காகவும், சுவாரசியத்திற்காகவும் மட்டுமல்லாமல், மகத்தான வெற்றியைப் படிப்படியாக அடைவது எப்படி என்பதை அறியவும் சாணக்கியனைப் படியுங்கள்!


நாவலை  ஆன்லைனில் வாங்கலாம். 

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அன்புடன்
என்.கணேசன்


8 comments:

  1. Best Wishes for the new venture sir👍

    ReplyDelete
  2. வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. Not only this novel, I am observing you for the past 12 years and how consistently you are making efforts and progressing. It is really amazing to see your consistency where in I end up loosing my goals and dreams every other week. I fell in love for the Prama Ragasiyam and Amaanusiyan and bit of Iruveru Ullagam. The way you insist on the thoughts and the power of thoughts and the humbleness is so lovely and a treasure to pass on. Thank you for the all work you are doing and may the God bless you Sir. Thanks, Nathiya.

    ReplyDelete
  4. என்.கணேசன் பதிப்பகம்... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🙏🤝

    ReplyDelete
  5. Sir I am ur big fan ❤️ எனது அப்பாவின் வேண்டுகோள் தங்கள் இராஜேந்திர சோழன் அவர்களை பற்றி எழுத வேண்டும் ஐயா ,

    ReplyDelete
  6. வரலாற்று நாவல்கள் படைத்து தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள், பிடித்துவிட்டீர்கள் என்று கூடச் சொல்லலாம்.
    அந்த வகையில் நீங்கள் இன்னும் ஒரு படி மேலே. அறிவியல் சமூகம் சரித்திரம் ஆன்மீகம் என் அனைத்து தளங்களிலும் கால் பதித்து வெற்றிகரமாக வரும் தங்களின் எழுத்து பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!! தங்களின் இந்த எழுத்துப் பணி!!!

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா,வெளிநாட்டு வாசகர்கள் நூல்கள் வாங்க வழிமுறை சொல்லுங்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

      Delete