சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 2, 2013

ருத்ராட்சம் அணிவதன் பலன்கள்!



அறிவார்ந்த ஆன்மிகம் 27

சைவர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை-
1. சிவ நாமத்தினையும், பஞ்சாட்சரத்தையும் ஜபித்தல்.
2. மேனியில் திருநீறை தரித்தல்
3. சிவாம்சமாக உள்ள ருத்ராட்சம் அணிதல்.

இவற்றில் ருத்ராட்சம் மிக விசேஷமானது. இதை சைவர்கள் மட்டுமல்லாமல் வைணவர்களும் மற்றவர்களும் கூட இதன் நன்மைகள் கருதி அணிந்து கொள்கிறார்கள். சீக்கியர்கள், புத்த மதத்தினர்கள் கூட ருத்ராட்ச ஜபமாலைகளைத் தங்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்துகின்றனர்.

ருத்ரன்+ அட்சம் என்பதே ருத்ராட்சம். சிவனின் கண், அல்லது சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று பொருள் கூறுகிறார்கள்.

ருத்ராட்சம் உருவான விதம் குறித்து மூன்று விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களை வருத்திக்கொண்டிருந்த திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் ஸம்ஹாரம் செய்த போது,  சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து புறப்பட்ட நீர்த்திவலைகள் பூமியில் விழ அதிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது என்று ஒரு கதை சொல்கிறது.

ஒரு சமயம்,  உலகம் உய்ய பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்த சிவபெருமான்  தவம் முடிந்து கண் விழித்த சமயம்,  கண்களிலிருந்து வழிந்த நீரிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் எனவும் சொல்கிறார்கள்.
நெற்றிக்கண்ணின் மணியிலிருந்து சிவபெருமானால் தனது அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது ருத்ராட்சம் எனவும் சொல்கிறார்கள்.

ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவிபாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

ருத்ராட்சத்தின் வேதியியல் பெயர் எலெயோகார்பஸ் கேனிட்ரஸ் ராக்ஸ்ப் (Elaeocarpus ganitrus Roxb). நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் ருத்ராட்ச மரங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த மரங்கள் விளைகின்றன. இந்த வகை மரங்களில் சுமார் 36 உட்பிரிவுகள் இருந்தாலும் அவற்றில் மூன்று பிரிவுகள் மட்டுமே ருத்ராட்சமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகிய நிறங்களில் ருத்ராட்ச மணிகள் கிடைக்கின்றன.  ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு. அவற்றை முகங்கள் என்று சொல்கிறார்கள்.  ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும், ஐந்து கோடுகள்  இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுகிறார்கள். அதிகபட்ச முகங்கள் குறித்து பல கருத்துக்கள் உள்ளன. பெரும்பாலானோர் 21 முகங்கள் வரை ருத்ராட்சத்தில் உண்டு என்கிறார்கள். ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்களைச் சொன்னாலும் பக்தியுடன் அணிந்தால் எத்தனை முகம் உள்ள ருத்ராட்சமே ஆனாலும் நல்ல பலனையே கொடுக்கும்.

ருத்ராட்சத்திற்கு ஆற்றல் உள்ளது என்று நம் முன்னோர்கள் அனுபவம் மூலமாகக் கூறி வந்தனர். அது இப்போது விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அப்படிப்பட்ட இரண்டு முக்கிய ஆராய்ச்சி முடிவுகளைப் பார்ப்போம்.

வாரணாசியில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் டாக்டர் சுபாஷ் ராய் தலைமையில் உயிர் வேதியியல் துறை, மனநோய் மருத்துவத் துறை,  பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய  நான்கு துறை மருத்துவ அறிஞர்களும் இணைந்து ருத்ராட்சம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்கள் ருத்ராட்சத்திற்கு மூன்று சிறப்புத் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர். அவை-

*சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
*காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Paramagnetic)
*சக்திகளை கொண்டு சேர்க்கும் ஊடகத் தன்மை (Inductive)

இத்தன்மைகளின் மூலம் ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு  வாழ்க்கையை நோக்கும் தன்மை,  தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியவற்றில் முன்னேற்றம் கிடைக்கின்றது. மேலும் ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர். மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.

அதே போல டாக்டர் ஜெயந்த குமார் சர்மா என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் கல்கத்தா மற்றும் பெல்காமைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ருத்ராட்சத்தினால் ஏற்படும் நல்ல விளைவுகளை ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள். ரத்த அழுத்தம் மட்டுப்படுத்தப்படுகிறது என்றும் மிதமிஞ்சிய மன உளைச்சல் குறைக்கப்படுகிறது என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது. மேலும் ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ருத்ராட்சம் மிகுந்த பக்தியுடன் அணியப்படும் போது ஒருவருக்கு சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது அணிபவர்களின் ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் இந்த நல்ல  விளைவுகளை உணர்ந்திருந்த முன்னோர்கள்  இம்மணிகள் தெய்வீகமானவை என்றும் இறைவனால் அனுப்பப்பட்டவை என்றும் கருதியதில் வியப்பில்லை.

உண்மையான ருத்ராட்சமணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான மக்கள், அவை தங்களுக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைத்ததாக நம்புகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ருத்ராட்சம் நமக்கு உடல் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தையும் அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. ருத்ராட்சத்தை அணிந்து உண்மையாக ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் தியான காலத்தில் சீக்கிரமே ஆல்பா மன நிலைக்கு (Alpha state of mind) செல்ல முடியும் என்றும் கூறுகிறார்கள்.


ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். அதனால் தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

பெண்கள் ருத்ராட்சம் அணிவது கூடாது என்று ஒரு கருத்து இருந்தாலும் அதற்கு சாஸ்திரங்களிலோ, ஆகமங்களிலோ ஆதாரம் இல்லை. தேவி அல்லது சக்திக்குரிய புராணங்களில், அம்பிகையானவள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டிருப்பதாக  குறிப்பிடப்படுகின்றது. எனவே இறை சிந்தனைகளில் ஈடுபாடுள்ள யாவருமே அணியத் தகுந்தது ருத்ராட்சம் என்று சொல்லலாம்.

ருத்ராட்சம் அணிபவர் இறை சக்தியை தன்னிடம் வைத்துள்ளோம் என்ற பிரக்ஞையுடன் முறையான வாழ்வை நடத்தினால் அந்த இறை சக்தி அவர்களுக்கு ஆரோக்கியம், மன அமைதி அளிப்பதுடன் அவர்களை அனைத்து சூழல்களிலும் முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்லும் என்பது நிச்சயம்!

-          என்.கணேசன்

-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 10-09-2013

(தினத்தந்தியில்  தொடராக வந்த  “அறிவார்ந்த ஆன்மீகம்” தற்போது நூலாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நூலை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.)

48 comments:

  1. மிகவும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. Nanga thirunelveli nellaiappar kovil ponapa , kopayran sanathil vachi uthiracham vangikom , athan kailil katta soinanga , katala ma? and gents entha hand la katta vendum , pl let me know

    ReplyDelete
    Replies
    1. காலில் ருத்ராட்சம் அணிவது குறித்து நான் அறியேன். கையில் கட்டுவதானால் வலது கையில் கட்டுவது நல்லது. ருத்ராட்சம் கழுத்தில் அணிவது சிறப்பு. இது நான் அறிந்தது.

      இது குறித்து ஆழமாக அறிந்த அறிஞர்கள் நமக்கு அதிகமாய் தெளிவுபடுத்தலாம்...

      Delete
  4. அருமையான பகிர்வு...
    பகிர்வு நன்றி.

    ReplyDelete
  5. rutratham aninthu non-veg sappitalama

    ReplyDelete
    Replies
    1. ருத்ராட்சம் அணிபவர்கள் பெரும்பாலும் அசைவத்தை தவிர்க்கிறார்கள்.

      Delete
    2. i need clear answer

      Delete
    3. ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிட வேண்டாம்.

      Delete
    4. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சை அணியும் போது அசைவம் எடுத்து கொள்வது தவறல்ல என்று சிவன் கோவில் ஐயர் கூறினார்...இது பற்றி உங்கள் கருத்து?

      Delete
    5. மன சுத்தமே மிக முக்கியம். மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சமே. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சை அணியும் போது அசைவம் சாப்பிடுவது தவறல்ல என்ற கருத்து முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். எதை வைத்துச் சொல்கிறார் என்றும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

      Delete
  6. In ISHA yoge blog, more explanation is given for ruthraksha wearing..

    ReplyDelete
  7. கணேசன் சார்., கட்டுரை அருமை ...,

    தாங்கள் கூறியது போல் பெரும்பாலும் நல்ல ருத்திராட்சங்கள் தற்போது கிடைப்பதில்லை.., கிடைத்து நாம் அணிவதாகிடில்...,
    பரிபுரண ஆச்சார அனுஷ்டானங்களை பின்பற்றாவிட்டாலும்..., ஒரளவேனும் கட்டுபாடுகள் அனுஷ்டானங்களை பின்பற்றுதல் வேண்டும் .., ஓரளவேனும் என்றால் . (தவிர்க்க முடியாத சுழ் நிலை தவிர)வெளில் இடங்களில் உண்ணுதல் கூடாது..., ஆடை நியதி ., பாதணி நியதி .., எல்லாவற்றையும் விட எண்ணத்தில் மாசு ஏற்படுதல் கூடாது..., நாம் நல்ல எண்ணம் கொண்டிந்தாலும் .., அபச்சார வார்த்தையை ., காட்சியை தற்போதைய ஆனாச்சார சமுதாய சுழலில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.., ஏனெனில் அணிந்து கொண்டு சபல எண்ணம் மனதில் எழுந்தால் கூட அது அந்த புனித பொருளை மாசுபடுத்தியதற்கு சமம் .,

    எளிமையான உதாரணத்தில் கூறவேண்டும் என்றால் .., சாதரணமாக ஓர் நங்கையை நோக்குவதற்க்கும் ..பிறர் மனைவி என்று தெரிந்து நோக்குவதற்கும் .., பாவ வீகிதம் இருப்பது போல ..,

    மந்திரங்கள் ., மூலிகைகள் ., யந்திரம் .., ருத்திராட்சம் .., சங்கு ., இன்னும் இது போன்ற சில பொருட்கள் இவை எல்லாம் மின்சாரம் போல சரி விகித்தில் பயன்படுத்தினாலும் பலன் . நேர்மறைக்கும் பலன் [ புண்ணியமும் கோடிமடங்காக பெருகும் .., பாவமும் கோடிமடங்காக பெருகும் ].

    ***தற்போதைய சமுதாய சுழலில் முடிந்தவரை ஸ்தலயாத்திரை செய்யும் போது மட்டும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளுதல் சிறப்பு ..., மற்ற நேரங்களில் வீட்டில் தூப தீபத்துடன் அபிஷேக ஆராதனை செய்யாலம் .., வலம் வந்து வணங்கலாம் இது அணிவதை விட சிறப்பு என்பது எமது கருத்து..

    ReplyDelete
  8. Ruthraksha is not advised to be wore on legs..
    It is been advised to wear in necks and Non-veg is not restricted only because of ruthraksha. You may look the below links where people told about ruthraksha
    http://tamilblog.ishafoundation.org/oru-pennukukedarkku-rudraksham/
    http://ayurvedaforwomen.wordpress.com/2012/07/26/rudraksha-the-holy-bead-for-women-myths-facts-and-benefits/

    ReplyDelete
  9. பக்கவாதம் வந்தவர்களுக்கு ருத்ராட்சத்தால் தடவிக்கொடுப்பது சுகமடையவைக்கிறது..! நரம்புகளுக்கு பலம் அளிக்கிறது..!

    சிவலிங்கங்களின் மேலும் , நந்திகளுக்கு மேலும் ருத்ராட்சப்பந்தல் அமைத்து அதன் நிழலில் வழிபடும் பக்தர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது...

    ReplyDelete
  10. katturai nadraga ullathu malum thodara anbudan vandugeran. by thayumanavan

    ReplyDelete
  11. Thank you so much for your every info again thank u

    ReplyDelete
  12. sir please explan .... oru mugam aniya vendum yandru manathil asai varugirathu.. but athai aniya sariyana valikatuthal vendum nu solranga.. ne oru mugam pathi konjam detail la sola mudiuma.. nan aninthu kolgiran.. please explain..

    ReplyDelete
  13. இனிய நண்பரே!
    ருத்திராட்ச மணிகள்(போலிகள் தவிர்த்து) கிடைக்கமிடம் தெரிவித்தால் மிக்க வந்தனமாக இருக்கும். எனது கைபேசி எண்: 91 9363220286.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, ருத்ராட்சத்தில் போலி நிஜம் பிரித்தறிய நானும் அறியேன்.

      Delete
  14. கிடைக்குமிடம் அறிய ஆவலாயுள்ளேன். தெரிவித்தால் நலதாமாயிருக்குமே நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ருத்ராட்சம் குறித்து நிறைய படித்தறிந்ததை இதில் பகிர்ந்துள்ளேனே ஒழிய நிஜ ருத்ராட்சம் கிடைக்கும் இடங்கள் பற்றி தெரியவில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் விற்பதே ஒரிஜினல் என்கிறார்கள். சரியான ஆளின் வழிகாட்டல் கிடைத்தால் தான் நமக்கு உதவியாக இருக்கும்.

      Delete

    2. !

      ��ருத்ராட்சம்���� இலவசமாக உலகம் முழுவதும் அனுப்பி வைக்கின்றோம் இந்தியாவிற்குள் Professional courier கூரியர் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு இந்தியா போஸ்ட் INDIA POST ��
      மூலமாகவும் அனுப்பி வைக்கிறோம் இந்த எண்ணிற்கு உங்கள் முகவரியை Name Door No Street Name Post Box Name Taluka Name District Name Pin Code Number Please Full address and Mobile Numbers
      WhatsApp Message வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்
      �� 9442441111 �� வாட்ஸ்அப் மட்டுமே அனுப்ப வேண்டும்
      SMS அனுப்ப வேண்டாம், Comments அனுப்ப வேண்டாம். ‌‌

      ஐந்து முகம் ருத்ராட்சம்
      ஒருவருக்கு ஒன்று வீதம். யார் யார் அணிந்து கொள்வீர்கள், அணிந்து கொள்ளும் நபர்களின் பெயர், மற்றும் வயது.

      அவர்கள் ருத்ராட்சம் உயிர் பிரியும் வரை ஒரு வினாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதுமே... போட்டு (அணிந்து) கொண்டே இருக்க வேண்டும் இருப்பார்களா??? என்பதின் விபரத்தை அவர்களிடம் சொல்லி அவர்களுக்கு புரியவைத்து தெரியப்படுத்தவும்
      வாங்கிய பின் போடாமல் வைத்து இருந்தாலோ அல்லது கொஞ்ச நாள் போட்டு இருந்து விட்டு
      கழட்டி விட்டாலோ மகாபாவம்.

      ��இறைவனின் கருணையால் ருத்ராட்சம் சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்து வருகிறேன்.
      தயவுசெய்து ருத்ராட்சம் எப்பொழுதும் கழுத்தில் போட்டு கொண்டே இருப்பவர்கள் (இருப்பவர்களுக்கு) மட்டுமே வாங்கவும் வாங்கி தரவும்.
      தயவுசெய்து இந்த மெசேஜ் உண்மையா! பொய்யா! என்று சந்தேகம் கொண்டு ருத்ராட்சம் அணிந்து கொண்டு இருப்பவர்கள் மெஸேஜ் அனுப்ப வேண்டாம் இது இறைவன் சிவபெருமான் மீது ஆணையாக உண்மை. ருத்ராட்சம் ஒருவருக்கு ஒன்று வீதம் மட்டுமே அனுப்புவோம் சிலர் ருத்ராட்சம் மாலை கேட்கின்றனர் மாலை எங்களிடம் இல்லை கோவில்களுக்கு சாமி சிலைகளுக்கும் ருத்ராட்சம் கேட்காதீர்கள் ஆன்மீக ஆன்மா (மனிதர்களுக்கு) அன்பர்களுக்கு மட்டுமே அனுப்புவோம். உங்கள் முகவரியை அனுப்பிய நாட்களில் இருந்து 10 நாட்கள் இந்தியா வெளிநாடுகளுக்கு 18 நாட்கள் வந்து சேரும். அப்படி வந்து சேரவில்லை என்றால் தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தொலைபேசியில் பேச விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் 10.08 am முதல் மதியம் 01.08 pm வரை இந்த எண்ணில் 9442441111 தொடர்பு கொள்ளவும். ��தயவு செய்து�� இடையே தொடர்பு கொள்ள வேண்டாம். வாட்ஸ்அப் மெசேஜில் தொடர்பு செய்யவும்.

      ருத்ராட்சம் *மூன்று நபர்களுக்கு குறைவாக அனுப்ப மாட்டோம்* உங்களுக்கு
      எத்தனை நபர்களுக்கு வேண்டும் என்பதை உடனே தெரியப்படுத்தவும்.
      Reply immediately Reply

      *ருத்ராட்சம் எத்தனை நபர்களுக்கு வேண்டும் அவர்கள் பெயர் வயது உடனே தெரியப்படுத்தவும்* Reply immediately
      *ஓம் நமசிவாய*
      *திருச்சிற்றம்பலம்*
      ������������✅

      Delete
  15. மிக்க வந்தனங்களும், வாழ்த்துக்களும் அருமை நண்பரே, என்.கணேசன் அவர்களே! எனது தேடல் தொடரட்டும். அன்புடன் கே.எம்.தர்மாவாகிய கிருஷ்ணமூர்த்தி.

    ReplyDelete
  16. ருத்ராட்சத்தின் தன்மை நாள் ஆக ஆக குறையுமா?

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் குறையாது.

      Delete
  17. Isha foundation is selling rudraksha ,order through this website(http://www.ishashoppe.com/in/)

    ReplyDelete
  18. மிக்க வந்தனங்கள் அன்பு நண்பரே! நிச்சயமாக இசா பவுண்டேசனைத் தொடர்பு கொள்கின்றேன்!!!

    ReplyDelete
  19. இல்லறத்தில் உள்ளவர்கள் அணியலாமா. தாம்பத்ய உறவு தவிர்க்க வேண்டுமா.. இந்த கேள்விக்கான பதில் பலருக்கும் பயன்தரும் என்று எண்ணுகிறேன். பலரும் இது போன்ற அச்சத்தால் அணிய விருப்பமிருந்தும் தவிர்த்து வருகின்றனர். தெளிவாக விளக்கம் கொடுத்தால் பயனுடையதாக இருக்கும். நன்றி ஐயா.

    ReplyDelete
  20. இல்லறத்தில் உள்ளோர் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது என்று சொல்வதால் தாம்பத்ய உறவுக்கு ருத்ராட்சம் எதிரானது என்கிற கருத்து வலுவிழந்து போகிறது. அதனால் தாம்பத்ய உறவை ருத்ராட்சம் அணிபவர்கள் தவிர்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  21. நல்ல ருத்ராட்சம் காஞ்சி சங்கமடத்தை தொடர்புக்கொண்டு வாங்கலாம். ஈஷா யோக மையத்தையும் தொடர்புக்கொண்டு வாங்கலாம். புத்தகத்தில் படித்தது. நன்றி

    ReplyDelete
  22. இருமுக ருத்ராட்சம் வெள்ளிவளையத்துடன் நடுவிலும் இருபுறங்களில் ஐந்து முக ருத்ராட்சம் இரண்டும் இணைத்து சிவப்பு நிற கயிற்றில் மூன்றும் சேர்ந்து அணிந்துள்ளேன். அவ்வாறு அணிந்துள்ளது நல்லதா கெட்டதா? தை செய்து விளக்கவும்

    ReplyDelete
    Replies
    1. நல்லது தான். தவறு இல்லை.

      Delete
  23. What a wonderful story? No words to express. I would like to say that Ganesan Sir, is a legend. He should be honored for this great book.

    This story brings us a live experience. I started to read from article 1 again.

    ReplyDelete
  24. good article. self discipline, self control is little by little improved. Thats is Rudraksha power.

    ReplyDelete
  25. அசைவம் சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை ஆனால் படிப்படியா குறைத்து கொள்வேன் அப்படியானால் ருத்ராட்சை அணியலாமா தயவு செய்து பதில் அளியுங்கள் அன்பர்களே

    ReplyDelete
  26. குறவன் குறத்தியர் வகுப்பைச்சேர்ந்தவர்கள் ஒருமுகம் முதல் ஆறுமுகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் விற்கிறார்கள் அவை உண்மையானவைதானா.

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை. அதில் நிபுணர்களே சரியாகச் சொல்ல முடியும்.

      Delete
  27. செந்தில், கோவைApril 28, 2016 at 7:48 PM

    நான் ருத்திராட்சத்தை கடந்த 4 வருடங்களாக அணிந்து வருகின்றேன். நான் அசைவம் சாப்பிடுவதில்லை. எனது கருத்து கேள்வி கேட்டு கொண்டிருப்பதை விட சோதித்து பார்த்துவிடுவது நல்லது. இதன் பலன் தெரிய ஒரு வருடம் ஆகலாம். இது எனது அனுபவம்.

    ReplyDelete
  28. நான்கு, ஐந்து, ஆறு முகம் ஆகிய மூன்றையும் இனைத்து வெள்ளி கொடியில் இனைத்து அனிந்துள்ளேன் சரி யா. ..

    ReplyDelete
    Replies
    1. Anaithu vagai ruthrachathaiyum korthu edupil kattikol.

      Delete
  29. மிக மிக அருமை திரு.கனேசன் அவர்களே...

    ReplyDelete
  30. Asaivam saapiduvathai Vida mudiya ilainu....Nan rudhratcham aniyalaama????

    ReplyDelete
  31. அசைவம் சாப்பிடும் போது மட்டும் கழற்றி விட்டு, பின் குளித்து விட்டு அணிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  32. ருத்திராச்சத்தில் வெள்ளி கப்பு போடுவது எதற்கு அந்த முறையே தீட்சை வாங்கியவர் மட்டுமே அணிய வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அது நல்லது என்கிறார்கள். அதை தீட்சை வாங்கியவர் மட்டுமே அணிய வேண்டும் என்பதில்லை.

      Delete