என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, January 14, 2022

அமேசான் கிண்டிலில் ‘வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூல் வெளியீடு!

 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


என் ’வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ நூல் நான்காவது பதிப்பு நூல்களும் விற்றுத் தீர்ந்த நிலையில் இந்த நூல் பொங்கல் வெளியீடாக அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. லிங்க் - 


https://www.amazon.in/dp/B09QCVG2HY


இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்கு என்று சில பாடங்கள் இருக்கின்றன. அந்தப் பாடங்களைக் கற்று மனதில் பதித்துத் தேர்ச்சி பெற்றால் ஒழிய வாழ்க்கைப் பரிட்சையில் அவன் தேறி விட முடியாது. அந்தப் பாடங்கள் சொல்லித்தர இங்கு தனிப் பல்கலைக்கழகம் இல்லை. அந்தப் பாடங்களை வாழ்ந்தே படிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கைப் பாடங்களில் பொதுவான பரிட்சைகள் முன்பே அறிவிக்கப்படுவதில்லை. நடந்த பிறகு முடிவுகளும் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் பரிட்சைகள் வாழ்வில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. பரிட்சை முடிவுகள் மன ஆழத்தில் உணரப்படுகின்றன.


எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித் தர முடியாத, வாழ்ந்து படிக்கும் பாடங்கள் இவை. இவற்றைக் கற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் வாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாது. இவற்றைக் கற்றுத் தேர்பவனே வெற்றி வாகை சூடுகிறான், வாழ்வில் நிறைவைக் காண்கிறான், காலமணலில் தன் காலடித் தடத்தை விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், குழம்பியும் வாழ்ந்து மடியும் போது இந்தப் பாடங்களை அறிந்து தெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து முழுமையாக வாழ்ந்து மனத்திருப்தியுடன் விடை பெறுகிறான்.

வாழ்ந்து படிக்கும் சிறந்த 32 பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக மிக எளிமையாகவும், வலிமையாகவும் இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்! வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்த நூலை வாங்குவது நல்ல மூலதனமாக இருக்கும். உங்கள் வசம் வைத்திருக்கவும், நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டும் மனிதர்களுக்கு நல்ல உபயோகமான பரிசளிக்கவும் தகுதியான சிறப்பான நூல் இது.  சில வருடங்களுக்கு முன் ஒரு பள்ளி தங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இந்த நூலை வாங்கிப் பரிசாகத் தந்திருக்கிறது. 

சுய முன்னேற்றத்திலும், வெற்றிகரமான வாழ்க்கையிலும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் படித்துப் பயனடைய வேண்டிய நூல் இது!

இது வரை இந்த நூலைப் படிக்காதவர்கள் அமேசான் கிண்டிலில் படிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

1 comment:

  1. வாழ்த்துக்கள் ஐயா... வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்று சொல்லித் தரும் அற்புத நூல்...

    ReplyDelete