சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, April 25, 2020

ஆழ்மனசக்தி இரகசியங்கள் - புதிய யூட்யூப் தொடர்



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஆழ்மனசக்தி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆழ்மனசக்தியின் சூட்சுமங்களையும், ஆழ்மனசக்தி அடையும் வழிகளையும் அவற்றில் தற்கால, பழங்கால ஆராய்ச்சிகளோடு விளக்கமாகத் தந்திருக்கிறேன். ஆனால் சில வாசகர்கள் மற்றும் ஆழ்மனசக்தியில் ஆர்வம் உள்ளவர்கள் அடிக்கடி என்னிடம் போன் செய்தும், மெயில் அனுப்பியும் இதன் சாராம்சங்களையும் வழிமுறைகளையும் பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கற்றுத் தர முடியுமா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவும் வகையில் பாமரனும் பின்பற்றக் கூடிய வகையில் முக்கிய நிகழ்வுகள், சாராம்சங்கள், வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் ஆகியவற்றை ஆழ்மனசக்தி இரகசியங்கள் என்ற காணொளித் தொடர் மூலமாக ஆர்வமுள்ளவர்களுக்குத் தரும் முயற்சியை அடியேன் யூட்யூபில் எடுத்துள்ளேன். முடிந்த வரை வாரா வாரம் சனிக்கிழமை அன்று காலை அப்டேட் செய்கிறேன். ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் இந்தத் தொடரைப் பயன்படுத்திக் கொள்ளவும். இதில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து அவர்களும் பயன்படுத்திக் கொள்ள உதவவும்.

அழ்மனசக்தி இரகசியங்கள் தொடரின் முதல் காணொளி இதோ -




என்.கணேசன்



6 comments:

  1. அற்புதமான தொடர்... தங்களின் சேவைக்கு நன்றி ஐயா... தாங்கள் எழுதிய "ஆழ்மனதின் அற்புத சக்திகள்" நூலில்... இது போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை படிக்கும் போது பிரமிக்காமல் இருக்க முடியாது...

    ReplyDelete
  2. welcome sir .very happy sir.thank you sir

    ReplyDelete
  3. The video was nice sir...please include your personal experience

    ReplyDelete