சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 14, 2021

அமேசான் கிண்டிலில் புத்தம் சரணம் கச்சாமி நாவல் வெளியீடு!

 


அன்பு வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!


என் நாவல்களில் பலரும் பாராட்டும் “புத்தம் சரணம் கச்சாமி” நாவல் அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகியுள்ளது. 


அமானுஷ்யன் அக்‌ஷயும், புத்தரின் அவதாரக் குழந்தையான மைத்ரேயனும் சேர்ந்து கலக்கும் இந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்பனையாகி தீர்ந்துள்ளது. பல காலமாக என் வாசகர்கள் உங்கள் நாவல்கள் அமேசான் கிண்டிலில் மின்புத்தகமாக வந்தால் வெளிநாடுகளில் வசிக்கும் வாசகர்களுக்கும், மின் புத்தகங்களுக்குப் பழகிப் போன இளைஞர்களுக்கும் பயன் தருவதாக இருக்கும் என்று சொல்லி வருகிறார்கள். அதனால் இந்த நாவலை அச்சில் இரண்டாம் பதிப்பாக வெளிக் கொண்டு வருவதற்குப் பதிலாக அமேசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 


மன அமைதி கிடைப்பதற்கும், வாழ்வில் பொருளை உணர்வதற்கும் இந்த நாவலை அடிக்கடி படிப்பதாக என் வாசகர்களில் சிலர் கூறுவார்கள். 


இந்த நாவலுக்கு நல்ல வரவேற்பிருந்தால் மற்ற நாவல்களில் சிலவற்றையும் அமேசான் கிண்டிலில் கொண்டு வர உத்தேசித்திருக்கிறேன். பார்ப்போம். 


புத்தன் சரணம் கச்சாமி நாவலின் அமேசான் கிண்டில் லிங்க் -


https://www.amazon.in/dp/B09NMHSGR3


நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

1 comment:

  1. வரதராஜன்December 15, 2021 at 8:15 AM

    மிக அருமையான நாவல் இது. நான் பல முறை படித்து ரசித்தது அமானுஷ்யனின் திபெத் பயண சாகசங்களும், மைத்ரேயனின் அருமையான ஞான வெளிப்பாடும். பாராட்டுகள்.

    ReplyDelete