சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 21, 2020

யாரோ ஒருவன்? நாவல் இன்று வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த யாரோ ஒருவன்? நாவல் இன்று அச்சில் வெளியாகியுள்ளது. 142 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.650/- 


நூலின் பின்னட்டைக் குறிப்பு:


22 வருடங்களுக்கு முன் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தில் தமிழக இளைஞன் ஒருவன் இறக்கும் அதே சமயத்தில் ஒரு சர்வதேசத் தீவிரவாதியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ரா அதிகாரி தலைமறைவாகிறார். உண்மை அறிய அவரது மகனும் ஒரு ரா அதிகாரியாகி தந்தை ஈடுபட்டிருந்த கடைசி வழக்கைத் தூசி தட்டி எடுக்கும் அதே சமயத்தில், அந்த தமிழக இளைஞனின் நண்பனாகச் சொல்லிக் கொண்டு ஒரு மர்ம மனிதன் தமிழகம் வருகிறான். இளம் ரா அதிகாரி அந்தப் பழைய வழக்கில் பின்னப்பட்ட சதிவலை, சூழ்ச்சிகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட, இறந்த தமிழக இளைஞனின் நண்பர்கள் வாழ்வில் பரபரப்பான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள பின்னணியின் மர்மத்தை, காதல், நட்பு, பாசம், தீவிரவாதம், நாகசக்தி, அமானுஷ்யம் முதலான அம்சங்களுடன் விவரிக்கும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால் உங்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொள்ளும்.

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நாவல் வலைப்பூவில் வழக்கம் போல் திங்கள் தோறும் வெளியாகும். ஜுன் 2023ல் முடிவடையும்.


அன்புடன்

என்.கணேசன்


8 comments: