என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, February 17, 2018

தினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக வெளியிட்டிருக்கிறது.

அமானுஷ்ய சக்திகளும், ஆன்மிகமும் பண்டைய காலத்திலேயே பின்னிப் பிணைந்தவையாக இருந்தன. தங்களுக்கு மீறிய சக்திகளை எல்லாம் இறைசக்தியாகவே பார்த்து, இறைவன் தந்ததாகவே பாவித்து அமானுஷ்ய சக்திகளை ஆன்மிகத்தின் ஒரு முக்கிய பாகமாகவே அக்காலத்தில் இருந்தே மனிதர்கள் கருதி வந்தார்கள். ஆபத்துக் காலங்களில் தங்களைக் காப்பாற்றவும், தேவையான சமயங்களில் தங்களை வழிநடத்தவும், இறைவழிபாடு நடத்தி அந்தச் சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள். உலகின் பல பகுதிகளிலும் பெயர்கள், முறைகள், வழிகள் வேறுபட்டாலும் ஆன்மிகமும், அமானுஷ்ய சக்திகளும் அவற்றின் அடிப்படை அம்சங்களாக இருந்தன. இந்த அமானுஷ்ய ஆன்மிகம் நூல் அவற்றில் மூன்று ஆன்மிக வழிமுறைகளையே விரிவாக விளக்குகின்றது.

இந்த நூலில் விளக்கப்படும் வூடூ, அகோரி, ஷாமனிஸம் என்ற மூன்றைக் குறித்தும் தமிழில் சிறு கட்டுரைக் குறிப்புகள் இருக்கலாமே ஒழிய, விரிவாக இது வரை எழுதப்பட்டதில்லை.  இவை பொருள் பொதிந்தவை, மிக சுவாரசியமானவை, இந்த வழிமுறைகளில் சிந்திக்க வைக்கும்  மெய்ஞானமும், வாழ்க்கைக்கு உதவும் அம்சங்களும், உளவியல் ரீதியான உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. இது தினத்தந்தியில் தொடராக வெளிவந்த போது பல தரப்பு மக்களின் பாராட்டைப் பெற்றது. இந்த அரிய கட்டுரைகளை ஆன்மிகத்திலும் அமானுஷ்ய சக்திகளிலும் ஈடுபாடுள்ள அனைவருக்கும் என்றென்றும் பயன்படும்படியாக நூலாகவும் வெளியிட முன்வந்த தினத்தந்தி பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

நூலின் விலை ரூ.100/- 


நூல் தங்கள் பகுதியில் எங்கே கிடைக்கும் என்றறிய தினத்தந்தி பதிப்பகத்தை 044-25303336, 044-25303000, 72999 90399 எண்களிலோ, mgrthanthipub.dt.co.in மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஆர்டர் செய்ய- http://publication.dailythanthi.com/amanushya-anmiham

நன்றி.

அன்புடன்
என்.கணேசன்
5 comments: