· 21.செவிட்டுக் கணவன்,
குருட்டு மனைவி- இவர்கள் வாழ்க்கை இன்பமாய் இருக்கும்.
· 22. வீட்டுத் தலைவன் மீது
தான் வீட்டில் உள்ளோரது குப்பைகள் கொட்டப்படும்.
· 23. மரணம் – கடைசி வைத்தியர்.
· 24. குருடனை
விருந்துக்கழைத்தால் கூட ஒருவன் வருவான்.
· 25. கிழவிகளை நீ ஏமாற்ற
முடிந்தால் சைத்தானையே ஏமாற்றி விடலாம்.
· 26. நோயைக் கொன்றாலும்
ஆளைக் கொன்றாலும் வைத்தியருக்கு ஃபீஸ் உண்டு.
· 27. ஆறடி நிலம்
அனைவரையும் சமமாக்குகிறது.
· 28. நண்பனை ஆபத்தில்
அறியலாம். யோக்கியனைக் கடனில் அறியலாம். மனைவியைத் தரித்திரத்தில் அறியலாம். உறவினனை
கஷ்டகாலத்தில் அறியலாம்.
· 29. பண்டைக் காலம் முதல்
மாறாமல் இருப்பவை நீரின் ஓட்டமும், காதலின் போக்கும்.
· 30. முகமலர்ச்சி, நிதானமான
வாழ்க்கை, மன அமைதி உள்ள இடத்தில் வைத்தியனுக்கு வேலை இல்லை.
தொகுப்பு: என்.கணேசன்
சமமாக்குகிறது உட்பட அனைத்திற்கும் நன்றி...
ReplyDeleteReal quotes
ReplyDeleteஎனக்கு நாவல் புத்தகம் படிக்கும் ஆர்வமோ அல்லது பழக்கமோ இதுவரை இருந்ததில்லை. ஆனால் "பரம(ன்)ரகசியம்" புத்தகம் படித்ததும் (ஒரே நாளில்,சாப்பிடுவதையும் துாக்கத்தையும் மறந்து முழுவதையும் படித்தேன்)உங்களுடைய எழுத்திற்கு நான் ரசிகனாக மாறிவிட்டேன்.
ReplyDelete