பெண்மை.காமில் என் பேட்டியின் பகுதி 6
கார்த்திகா: Well Said Sir... மிகவும் தெளிவாகவும் விரிவாகவும், ரொம்ப
Practical - ஆகவும் சொல்லி இருக்கீங்க... வேற எந்த
புத்தகத்திலும் படித்து தெரிந்து கொள்ளமுடியாத நடைமுறைப்படுத்தக் கூடிய எளிமையான
ஆலோசனையை எங்களுக்கு கொடுத்து இருக்கீங்க. மிக்க நன்றி சார்.
எங்களோட அடுத்த கேள்வி சார்.
தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? அவற்றை எப்படி நம் வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?
நான்: தோல்வி என்பது இடைவேளை என்ற தலைப்பில் புத்தகம் எழுதியது மட்டுமல்லாமல் அது உண்மை என்றே ஆழமாக நம்புபவன் நான். தோல்வி நிறைய கற்றுத் தரும். நம்மை சரிப்படுத்தும். மெருகுபடுத்தும். அடக்கத்தைக் கற்றுத் தரும். எனவே தோல்வி வரும் போது அது சொல்லித் தரும் பாடங்களை அலட்சியப்படுத்தி விடாமல் கற்று நம் அடுத்த முயற்சிகளில் சரி செய்து கொள்ள வேண்டும். எல்லா மகத்தான வெற்றியாளர்களும் ஆரம்ப காலங்களில் நிறைய தோல்விகள் கண்டவர்களே. அதனால் தோல்வியில் துவள வேண்டாம்.

எல்லோரிடமும் சர்டிபிகேட் வாங்க நாம்
பிறக்கவில்லை. அப்படி எல்லோரையும் திருப்திப்படுத்த யாராலும் முடியவும் முடியாது.
அதனால் புறக்கணிப்பவர்களைப் புறக்கணியுங்கள். நிம்மதியாக இருப்பீர்கள்.
சரவணகுமார்: வணக்கம் கணேசன் ஜி,
சமீபகாலமாக உங்களுடைய வெளியுலக முன்னேற்றத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்த்தியாகவும் உள்ளது. தங்களின் ஒவ்வொரு பதிலும் உங்கள் படைப்புக்களை போன்றே தெளிவாக உள்ளது.
எனக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள் உள்ளது. அது என்னவென்றால் " குழந்தைகளை நற்குணங்களுடன் வளர்ப்பது எப்படி ? குழந்தைகளின் வயது, அப்பொழுது அவர்கள் உள்ள மனநிலை, அவர்களை வளர்க்கும் விதம், எதுபோன்ற குணங்களை அவர்களிடம் ஆழபடுத்த வேண்டும், எந்த செயல்களை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும்" போன்றவற்றை உங்கள் எழுத்துக்களில் ஒரு தொடரை எதிர்பார்க்கிறேன்.
அமானுஷ்யன் தொடரில் அக்ஷயும் வருணும் வரும் பதிவுகளை படித்து வியந்துள்ளேன். ஆகவே இதுபோன்ற தொடரை எழுதினால் நல்ல குணமுள்ள வருங்கால இளைஞர்களை உருவாக்குவதில் உங்களின் பங்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
எனது கேள்வி.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய லட்சியம் அல்லது இறுதிநிலை என்ன ? என்பதை பற்றி உங்களுடைய கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
நான்: குழந்தை வளர்ப்பும், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்களும் மிக முக்கிய சப்ஜெக்ட் தான். உங்கள் ஆலோசனையை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன். பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் அறிவுரைகளை விட்டு விட்டு நாம் நல்ல ரோல் மாடல்களாக இருந்தாலே போதும். இளைய தலைமுறை எங்கேயோ போய் விடும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய
இலட்சியம் அவரவர் மனதின் ஆழத்தில் பதிந்தே இருக்கிறது. அதை அவன் அடையும்
முயற்சிகளில் ஈடுபடும் வரை அவன் உண்மையான சந்தோஷத்தை உணர முடியாது. அந்த உண்மை
இலட்சியத்திற்குப் பதிலாக பதிலாக அவன் வேறு என்ன பெரிய சாதனைகள் செய்தாலும் உள்ளே
ஒரு வெறுமை மிஞ்சவே செய்யும். அதனால் அவன் தன் இதயத்தின் ஆழத்தில் உள்ள தனக்கே
உரித்தான தனிக்கடமையை உணர்வதும் அதை நிறைவேற்றுவதுமே அவன் செய்ய வேண்டியது.
(தியானம், ஆத்மசிந்தனை, சுயபரிசீலனை ஆகியவை அவன் இதயத்தின் ஆழத்தில் உள்ள
இலட்சியத்தை அவனுக்கு அடையாளம் காட்டும்.)
கார்த்திகா: நம்மை நாம்
எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும்..??
நான்: எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க நான்கு விஷயங்கள் மிக அவசியம் என நினைக்கிறேன். அவை நல்ல உறக்கம், அளவான உணவு, பாசிடிவ் எண்ணங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கு உள்ள வாழ்க்கை.
நான்: எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க நான்கு விஷயங்கள் மிக அவசியம் என நினைக்கிறேன். அவை நல்ல உறக்கம், அளவான உணவு, பாசிடிவ் எண்ணங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கு உள்ள வாழ்க்கை.
உஷாந்தி: ஆரம்ப காலங்களில் உங்களின் எழுத்துக்கு தகுந்த அடையாளம், வரவேற்பு & Demand (Both Printing Media & வாசகர்களிடம் இருந்து) கிடைக்கறதுக்கு முன்னாடி தொடர்ந்து உறுதியாக நீங்கள் முயற்சி பண்ணினது எப்படி??
ஒரு சரியான தூண்டுகோல், ஊக்குவிப்பு இப்படி எதுவும் இல்லாமல், நம்மளே நம்ம மேலும் நம் எழுத்து மேலும் உறுதியாக எதுவும் சொல்ல முடியாத சமயங்களில் உங்களை தொடர்ந்து எழுத வைத்ததது எது. எழுதணும் அப்படிங்கற Passion மற்றும் எழுத்து மேல இருக்கற காதல் இதையும் தாண்டி வேற எந்த விஷயம் உங்களை தொடர்ந்து எழுத வைக்கக் காரணமாக அமைந்தது.
எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு தகுந்த தங்களுக்கான அடையாளம் தேடற அந்த டைம். அப்பொழுது தினம் தினம் பல சவால்களையும், நிறைய ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கலாம். இதை எல்லாத்தையும் தாண்டி எப்படி அந்த சமயங்களை வெற்றிகரமாக உங்களால் கடந்து வர முடிந்தது?
எல்லா எழுத்தாளர்களும் கண்டிப்பாக அந்த Tough Time- ஐ Cross பண்ணி தான் வந்தாகணும் இல்லையா…. நீங்க எப்படி அந்த Period-ஐ சமாளிச்சு அதை கடந்து வந்தீங்கன்னு சொன்னீங்க ன்னா இப்ப வளர்ந்து வர இளம் எழுத்தாளர்களும் மிகவும் Helpful -ஆ இருக்கும்.
நான்: அந்த ஆரம்ப கட்டங்கள் ஒரு
எழுத்தாளனுக்கு மிக கடினமானவை தான். என் முதல் கதை ஆனந்த விகடனில் பிரசுரமாய்
படித்தவர்கள் எல்லாரும் பாராட்டினாலும் அடுத்த கதை அவ்வளவு சீக்கிரமாக விகடனில்
பிரசுரமாகவில்லை. அடுத்த சிறுகதை குமுதத்தில் பிரசுரமாகி அதற்குப் பணமும்
கொடுத்தார்கள். ஆனால் பாதி கதையை எடிட் செய்து அதன் தரத்தையே மோசமாக்கி
விட்டார்கள். பின் குமுதத்திற்கு அனுப்புவதை நிறுத்தி விட்டேன். பிறகு நீண்ட
இடைவெளி எழுத்தில் இருந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் தான் இந்துவில் எழுதினேன்.
பின் தொடர்ந்து இந்துவில் யங் வர்ல்ட் பகுதியில் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வந்தன.
பிறகு யங் வர்ல்ட் பகுதியில் மாற்றம் செய்தார்கள். அந்த மாற்றம் என் எழுத்துக்கு
அனுகூலமாய் இருக்கவில்லை. மறுபடி இடைவெளி.
இந்தக் காலக்கட்டத்தில் பத்திரிக்கைகளில்
வந்து கொண்டிருந்த சிறுகதைகளை எல்லாம் வாசிக்கும் போது பல சிறுகதைகள் சராசரிக்கும்
குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றும். நம் கதைகளை நிராகரித்து இந்த குப்பைகளை
எல்லாம் பிரசுரிக்கிறார்களே என்று திகைப்பாக இருக்கும். எந்த அடிப்படையில் இவர்கள்
கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்வி சீரியஸாக மனதில் எழும். (ஒருசில
கதைகள் மிகப்பிரமாதமாகவும், நான் எழுதியதை விட நன்றாகவும் இருப்பதையும் கண்டு
ரசித்தும் இருக்கிறேன். ஆனால் அவை அபூர்வமே).
அந்த மாதிரி சமயங்களில் கூட என்னால் தொடர்ந்து
எழுதாமல் இருக்க முடிந்ததில்லை. உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று வலுக்கட்டாயமாக
என்னை எழுத வைத்தது. பலர் எழுதுவதை விட நான் நன்றாக எழுதுகிறேன் என்ற நம்பிக்கை
இருந்தது. நான் இயல்பிலேயே விடாமுயற்சியும் பொறுமையும் உள்ளவன். என்னை அவ்வளவு
சீக்கிரம் தன்னம்பிக்கை இழக்க வைக்க நான் வெளி உலகை விட்டதில்லை. ஆனாலும் சில
சமயங்களில் மிகவும் சோர்வாக இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை ஊட்ட நிறைய
மேதைகள் இருந்தார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிப்பேன். மிகவும் பிடித்த
பகுதிகளை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருப்பேன். அதை எல்லாம் படித்து சோர்வை
விரட்டுவேன். மறுபடி எழுவேன். ஏதாவது எழுத ஆரம்பிப்பேன்.
இணையம் வந்தபின் நிறைய எழுத ஆரம்பித்த பின்
நான் திரும்பிப் பார்க்க வேண்டி இருக்கவில்லை. இன்றைய இளம் எழுத்தாளர்கள்
ஒருவிதத்தில் அதிர்ஷ்டசாலிகள். பத்திரிக்கைகளையே நம்பி இருக்க வேண்டிய அவசியம்
அவர்களுக்கு இல்லை. உண்மையில் திறமை இருக்குமானால் மின்னிதழ்களிலும், தங்கள்
ப்ளாகுகளிலும் எழுதி திறமையை வெளிப்படுத்த முடியும்.
(தொடரும்)