சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 7, 2008

படித்ததில் பிடித்தது - பாதச்சுவடுகள்

கஷ்ட காலங்களில் கடவுள் நம் வாழ்க்கையில் இருந்து முழுவதும் விலகி காணாமலேயே போய் விடுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. அதுவும் தொடர்ந்து கஷ்டங்கள் வரும் போது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் யாருக்கும் வரலாம். அப்படி ஒரு சந்தேகம் வந்ததைப் பற்றிய கவிதை இது. முதன் முதலில் ஆங்கிலத்தில் படித்த போது மனதை வெகுவாகக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் எழுதியது யார் என்று தெரியவில்லை. Anonymous என்று போட்டிருந்தது. அதை தமிழில் வெ.அனந்தநாராயணன் என்பவர் மொழிபெயர்த்ததை நீங்களும் படியுங்களேன்.

பாதச்சுவடுகள்

அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில்
வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன்.
எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன.
ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது.
எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல்
மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.
ஓ! இதென்ன?
எனது பாதச் சுவடுகளின் அருகில்
யாருடையவை இம்மற்றொரு ஜோடிசுவடுகள்?
உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!
புல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை!
என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா
உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.
ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்?
அதுவும் என் வாழ்க்கையின் மிகவும்
சோதனையான காலங்களின் போது....
எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை.
தேவா, இவ்வளவு தான் உன் கருணையா?
உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது
கை விட்டு விட்டாயே என்னை
கூக்குரலிட்டேன் நான்.
அசரிரீயாக பதில் கேட்டது-
அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்
உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை.
நடக்கவியலாத உன்னை நான்
சுமந்து வந்த சுவடுகள்!.

3 comments:

  1. ஏற்கனவே படித்திருந்தாலும் இப்போது படிக்கும் போது மனம் நெகிழ்கிறது. மகிழ்வான நேரங்களில் இறையை நினைப்பதில்லை. துன்பப்படும் நேரங்களில் இறையின் கருணை நமக்குப் புரிவதில்லை.

    //அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்
    உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை.
    நடக்கவியலாத உன்னை நான்
    சுமந்து வந்த சுவடுகள்!.
    //

    வைர வரிகள் - பாராட்டுக்குரியவை.

    ReplyDelete
  2. நிங்க எங்க இருந்து தேடிபிடித்து எழுதிகிறீர் களோ ?ஒவ்வரு வரியும் அருமை

    ReplyDelete
  3. nalla pathivu...definetely the author has touched the millions of pople who believe :GOD"... thru his post....thanks a lot...

    ReplyDelete