இந்த வார துக்ளக் (24.8.2022) இதழில் என் சாணக்கியன் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்-
நன்றி துக்ளக்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
நாளை பௌர்ணமி!
மைனிகாவும் அவளுடைய தாதியும் நாளை தட்சசீலத்தை
விட்டுப் போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் காலையில் இருந்தே செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மூட்டை முடிச்சுகளை மறைவாக வைத்து முடிக்கையில்
மாலை நேரமாகி விட்டது. குளித்து அலங்காரம் செய்து கொண்டு சேனாதிபதி சின்ஹரனின் வரவுக்காகக்
காத்திருக்கையில் சின்னதாய் ஒரு வருத்தம் அவள் மனதின் ஒரு மூலையில் எழத்தான் செய்தது. சேனாதிபதி
சின்ஹரன் மிக நல்லவன். மாவீரன். ஆம்பி குமாரன் போல
அவன் தரம் கெட்டவனல்ல. அவளை ஒரு
தாசியைப் போல சின்ஹரன் எப்போதுமே நடத்தியதில்லை. ஒரு காதலியைப்
போலத் தான் நினைத்திருந்தான். அப்படித்தான் அவளிடம் அவன் பழகவும் செய்தான். அவள் நாளை
போனபின் அவள் அவனை ஏமாற்றியதற்கு அவன் கண்டிப்பாக வேதனை அடைவான். அவளை அவன்
வெறுக்கவும் செய்வான். அதை நினைக்கையில் அவளுக்குச் சிறிது வருத்தமாகத் தான் இருந்தது
என்றாலும் அவள் இதைச் செய்யாமல் இருக்க முடியாது. அவளுடைய
தாய்நாட்டை விட எதுவும் அவளுக்குப் பெரிதல்ல. தாசியாக
அவள் ஆனது விதி என்றாலும் அவளுடைய பெண்மையைத் தனிப்பட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல்
தாய்நாட்டுக்காகப் பயன்படுத்துவதில் அவள் பெருமையையே உணர்கிறாள்.
இன்று இரவு எதாவது காரணம் சொல்லி அவன்
அவள் வீட்டுக்கு வராமல் போனால் அவர்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆனால் எத்தனை நேரமானாலும் அவன் வராமல் இருக்க மாட்டான். அந்த அளவு
அவள் அவனை மயக்கி இருக்கிறாள்.
கேகய அரசர் புருஷோத்தமன் தன் அமைச்சர் இந்திரதத்திடம் சந்தேகத்துடன்
கேட்டார். “இந்தச் சிறிய படை போதுமா இந்திரதத்?”
காந்தார நாட்டின் படை பலம் கேகய நாட்டின்
படைபலத்திற்குச் சரிசமமானது தான். அதனால் பெரிய படையுடன் போய்ப் போராடுவது தான் சரியாக இருக்கும்
என்று அவருக்குத் தோன்றியது. இந்தப் போரே அவர் சிறிதும் விரும்பாதது தான். காந்தார
அரசர் அவருக்கு நண்பர். ஆம்பி குமாரன்
ஆட்சி விஷயங்களில் தலையிடாத வரை அந்த இரு நாடுகளுக்கு இடையே எந்தப் பெரிய பிரச்சினையும்
வந்ததில்லை. சில சில்லறைத் தகராறுகள் அண்டை நாடுகளுக்கு
இடையே வருவது சகஜம். அந்தச் சில்லறை விஷயங்களை அவர்கள் பேச்சு வார்த்தைகளிலேயே
சரி செய்து வந்திருந்தார்கள். ஆம்பி குமாரன் நடந்து கொண்ட முதலிரண்டு அத்துமீறல்களை சிறுபிள்ளைத்தனமாகவே
எடுத்துக் கொண்டு அவர் பெரிதுபடுத்தாமல் இருந்தார். ஆனால் இனியும்
பொறுத்துக் கொண்டே போனால் அது கோழைத்தனமாகத் தோன்ற ஆரம்பித்து விடும் என்பதால் தான்
அவர் அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தார். அமைச்சர்
இந்திரதத் போட்டிருக்கும் திட்டம் மிக புத்திசாலித்தனமாகவே இருக்கிறது என்றாலும் இந்திரதத்
அழைத்துப் போகும் சிறிய படை போதுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.
“அவர்கள்
தயார் நிலையில் இல்லாத சமயம் இது என்பதால் இச்சிறு படை கண்டிப்பாகப் போதும் அரசே. என்ன நடக்கிறது
என்று புரிந்து தலைமை பொறுப்பேற்கக் கூடியவர்கள் தயாராவதற்குள் நம் படை அனைத்தையும்
சாதித்து விடும். சின்ஹரன் களத்திற்கு வர மாட்டான். ஆம்பி குமாரன்
தயாராவதற்குள் நம் ஆக்கிரமிப்பு பூரணமாகி விடும். மேலும்
பெரிய படையுடன் போவதானால் வேகமாகப் போகவும் முடியாது. காந்தார ஒற்றர்கள்
அதை அறியாமல் இருக்கும் வாய்ப்பும் குறைவு. அதனால்
தான் இந்தத் திட்டத்தைப் போட்டோம்...”
கேகய அரசர் இந்திரதத்தை மனதிற்குள்
பாராட்டினார். இந்திரதத் மிகச் சிறந்த அறிவாளி. அறிவாளி
என்று நினைக்கையில் இந்திரதத் தட்சசீல கல்விக்கூடத்தில் படித்தவர் என்பதும் நினைவுக்கு
வந்தது. ”கல்வி கற்ற நகருக்குப் படையோடு போரிடப் போவது உனக்குச் சங்கடமாக
இல்லையா இந்திரதத்?” என்று அவர் புன்னகையோடு கேட்டார்.
“ஆம்பி குமாரன்
சமாதான வழிக்கு உடன்பட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே அரசரே. என்ன செய்வது” என்று இந்திரதத்
புன்னகையுடன் பதில் அளித்தாலும் மனதில் அவருக்கு ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது. அவருடைய
நண்பர் விஷ்ணுகுப்தருக்கு இந்தச் செயல் அதிருப்தியைத் தரும் என்பதில்
சந்தேகமேயில்லை. விஷ்ணுகுப்தர்
காந்தார நாட்டுக்கும் கேகய நாட்டுக்கும் இடையே தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இதைப்
பார்க்க மாட்டார். பாரதம்
என்ற தேசத்தின் இரு பகுதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அந்த தேசத்தைப் பலவீனப்படுத்தும்
என்று தான் பார்ப்பார். நண்பரை எண்ணுகையில் மனம் லேசானது.
அவர் நண்பர் சாதாரண மனிதர் அல்ல. அறிவின் உச்சத்தை எட்டியவர். அதுமட்டுமல்ல. விஷ்ணுகுப்தரைப் போல அறிவின் உச்சத்தின்
படியே முழுக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள முடிந்த ஒரு மனிதனை இந்திரதத்
இது வரை பார்த்ததில்லை. எத்தனை பெரிய அறிவாளியையும் சமயங்களில் மனம் கவிழ்த்து
விடும். ஆனால் விஷ்ணுகுப்தருக்கு அறிவும், மனமும் ஒன்று தான். தனிப்பட்ட
லாபம் அடைய நினைத்தால் என்னவாகவும் உயர முடிந்த அந்த மனிதர் தனக்காக
எதையும் விரும்பி இந்திரதத் கண்டதில்லை. நண்பனை அவர் சந்தித்துப்
பல காலம் ஆகிறது. இந்தச் சூழலில் சந்திக்க நேர்வது துர்ப்பாக்கியம்
தான்....
சேனாதிபதி சின்ஹரன் வானில் ஜொலித்த முழு நிலவின் அழகை அண்ணாந்து
ரசித்துப் பார்த்தான். வழக்கத்தை விட நிலவு கூடுதல் அழகோடு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
நிலவை நன்றாக ரசித்து விட்டு மைனிகாவைச் சந்திக்கக் கிளம்பிய அவன் மனதில் எதோ ஒரு நெருடல் ஏனோ திடீர் என்று எழ
ஆரம்பித்தது. போகாதே என்று எதுவோ தடுப்பது போலத் தோன்றியது. ஏன் இந்தத் திடீர் உணர்வு
என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனால் மைனிகாவை இன்று சந்திக்காமல் இருக்க முடியாது.
இன்று ஏதோ ஒரு விசேஷ விருந்து படைப்பதாக அவள் சொல்லி இருந்தாள். அது என்ன என்று அவன்
கேட்ட போது அதை முன்கூட்டியே சொல்ல மாட்டேன் என்று அவள் சொல்லி விட்டாள். அது என்னவாக
இருக்கும் என்று யோசித்தபடியே போர்வையைப் போர்த்திக் கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான்.
மைனிகாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விருந்து குறித்த கற்பனைகளையும் விரிய விட்ட பிறகு
அந்த நெருடல் உணர்வு உள்ளே தள்ளப்பட்டது.
அது மைனிகாவின்
வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு முன் மறுபடி ஒரு முறை மேல் எழுந்து எச்சரித்தது. மறுபடியும்
ஏன் இந்த உணர்வு என்று அவன் யோசித்தாலும் அவன் கை அவள் வீட்டுக் கதவைத் தட்டுவதை அது
நிறுத்தவில்லை.
கதவைத் திறந்த மைனிகா
அவன் ஏதோ யோசனையுடன் உள்ளே நுழைவதைப் பார்த்து ”என்ன யோசனை என் காதலரே” என்று கொஞ்சும்
குரலில் கேட்டாள்.
அவளைப் பார்த்தவுடன்
அவள் அழகில் மயங்கி அவளை அணைத்தவனாக அவன் சொன்னான். “ஏனென்று தெரியவில்லை மைனிகா. வீட்டிலிருந்து
கிளம்பும் போதே இனம் புரியாத
ஒரு நெருடல். எதையோ எச்சரிப்பது போல் ஒரு தோன்றல்….”
ஒரு
கணம் மைனிகா திகைத்தாலும் அவள் மறு கணம் சுதாரித்துக் கொண்டாள். “பௌர்ணமி, அமாவாசை இரண்டு நாட்களின் நெருக்கத்திலும்
இப்படி நமக்குத் தோன்றுவதுண்டு அழகனே. எனக்கும் சில முறை அப்படித் தோன்றியிருக்கிறது.
ஆனால் மறுநாளே அதற்கு அர்த்தமில்லை என்று நான் உணர்ந்திருக்கிறேன்…”
“எனக்கு
இது தான் முதல் முறை” என்று சொன்ன அவனை அவள் அதற்கு மேல் சிந்திக்க விடவில்லை. அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தவள் அவனை எல்லாவற்றையும்
மறக்க வைத்தாள்.
விடிவெள்ளி
கீழ்வானில் பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்த வேளையிலும் அதிகமாக அருந்திய மதுவின்
போதையாலும் அவள் அந்த மதுவில் கலக்கியிருந்த மயக்க மருந்தினாலும் சேனாதிபதி சின்ஹரன்
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். எவ்வளவு தாமதமானாலும் அவன் இந்த நேரம் கண்டிப்பாக
அங்கிருந்து கிளம்பி விடுவான். சூரிய உதயத்திற்குள் தன் மாளிகையை அவன் எட்டி விடுவான்.
ஆனால் இன்று மட்டும் இருட்டும் வரை அவன் மயக்கம் தெளிந்து எழப்போவதில்லை..
அவன் தலையை அன்போடு
கோதி விட்ட மைனிகா மெல்ல முணுமுணுத்தாள். “நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. என்னை மன்னித்து
விடு”
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
கதவைத் திறந்து விட்ட அழகு மங்கை கோபத்துடன்
முகத்தைத் திருப்பிக் கொண்டதைப் பார்த்தவன் தன் இரண்டு கைகளாலும் அவள் முகத்தைத் தன்
பக்கம் திருப்பிக் கொண்டு கேட்டான். “என் இதய ராணிக்கு
ஏன் இன்று என் மேல் கோபம்?”
அப்போதும் அவனைப் பார்க்க விரும்பாதவள்
போல் கண்களை மூடிக்கொண்ட அந்த மங்கை “பேச்சில் இருக்கும்
கரிசனமும், அன்பும் நடத்தையில் இல்லையே சேனாதிபதி” என்றாள்.
“ஏன் அப்படி
கடூரமான வார்த்தைகளைச் சொல்கிறாய் மைனிகா?” என்று சேனாதிபதி
சின்ஹரன் கேட்டதற்கு மைனிகா “நேரம் என்ன ஆகிறது சேனாதிபதி?”
“நடுநிசியாகி
விட்டது என்பது உண்மை தான் மைனிகா. ஆனால் தாமதத்திற்கான
காரணம் என் அலட்சியம் அல்ல. அரசர் என்னையும் அமைச்சரையும் நகர விடாமல் பேசிக் கொண்டே
இருந்தார். அரசர் பேசிக் கொண்டிருக்கையில் எழுந்து வர முடியுமா?””
மைனிகா இது உண்மை தானா என்பது போல்
அவனைச் சந்தேகப்பார்வை பார்த்தாள். ”இது என்ன போர்க்காலமா? உங்களை
நடுநிசி வரையில் அமர வைத்து அரசர் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதற்கு?”
“போர்க்காலம்
அல்ல தான். ஆனால் ஆம்பி குமாரன் போரை வரவழைத்து விடுவான் என்று அரசர்
பயப்படுகிறார்.”
மைனிகா சின்ஹரனை சந்தேகம் தீராமல் இப்போதும்
பார்த்துக் கொண்டு நிற்க சின்ஹரன் அவளைக் கட்டியணைத்துக்
கொண்டு சொன்னான். ”இன்னும் என் ராணிக்கு சந்தேகம் தீரவில்லை என்றால் நான் என்ன
செய்ய முடியும். முழுவதுமாகச் சொல்கிறேன் கேள். இன்று கேகய
நாட்டு தூதர் ஒருவர் அங்கிருந்து அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருந்தார்....”
அவன் சொன்னதை எல்லாம் மிகவும் கவனமாக
மைனிகா கேட்டுக் கொண்டாள். ”.... அரசர் தவறை ஒப்புக் கொண்டு ”கவர்ந்த
பசுமாடுகளை அந்தந்த எல்லைப் பகுதிகளிலேயே ஒப்படைப்பதாக நான் கேகய மன்னனுக்கு வாக்களித்திருக்கிறேன். உடனே அதைச்
செய்ய ஏற்பாடு செய்.” என்று ஆம்பி குமாரனிடம் சொன்ன போது அவன் கோபத்தோடு “என் உடலில்
உயிர் இருக்கிற வரை நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையே” என்று சொல்லி
விட்டுப் போய் விட்டான். அரசர் மகனின் போக்குக்கு வருத்தப்பட்டு எங்களிடம் பேசிக்
கொண்டே இருந்தார்.... இப்போதெல்லாம் பேச்சைத் தவிர அவரால் வேறெதுவும் செய்ய முடிவதில்லை. பார்க்க
மிகவும் பாவமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அமைச்சராவது
அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அமைச்சரும்
வயதானவர் என்பதால் அரசரைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்வது அவருக்கு எளிதாக முடிகிறது. ஆனால் எனக்கு
அதுவும் முடியவில்லை. அதிலும் பயன் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மனமோ ஒரு
கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி முன்பே இங்கே வந்து விட்டது. அதை நீ
உணராமல் என்னைத் தவறாக நினைக்கிறாயே என் கண்மணி....”
மைனிகா அவன் இதழ்களில் முத்தமிட்டபடியே
சொன்னாள். “என்னை மன்னித்து விடுங்கள் சேனாதிபதி. நீங்கள்
சொன்ன நேரத்தில் வராதவுடன் நான் அதை அலட்சியமென்று எண்ணி விட்டேன்....”
சேனாதிபதி சின்ஹரன் மைனிகாவின் வீட்டிலிருந்து
கிளம்பும் போது அதிகாலை நேரமாகி விட்டது. வந்தபடியே போர்வைக்குள்
தன்னை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அவன் வேகமாகச் செல்வதை எதிரே இருந்த ஒரு வைக்கோல்போரின்
பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்த ஒருவன் சிறிது நேரம் பொறுத்து விட்டு வந்து
மைனிகாவின் வீட்டுக் கதவைத் தட்டினான்.
அவனும் கதவு திறக்கப்பட்டவுடன் உள்ளே
நுழைந்து வேகமாகக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டுக் கேட்டான். “என்ன செய்தி
மைனிகா? காந்தார சேனாதிபதி என்ன சொல்கிறான்?”
மைனிகாவின் தோற்றமும் தோரணையும் தற்போது
முற்றிலும் மாறியிருந்தது. அலங்காரமும், உடைகளில் கவர்ச்சியும், மயக்கும்
பார்வையும் இல்லாமல் சாதாரணப் பெண்ணாகக் காட்சியளித்த அவள் சேனாதிபதி சின்ஹரன் சொன்னதையெல்லாம்
அந்த மனிதனிடம் அப்படியே தெரிவித்தாள்.
அந்த மனிதன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். “அப்படியானால்
காந்தாரத்தின் கிழட்டு அரசர் நம் மன்னருக்கு வாக்களித்திருந்தபடி எந்தப் பிராயச்சித்தமும்
நடக்கப் போவதில்லை...”
“அப்படித்தான்
தோன்றுகிறது. வேண்டுமானால் அவரிடமிருந்து நம் மன்னருக்கு வருத்தத்தோடு
மன்னிப்புக் கடிதம் வேண்டுமானால் வந்து சேரலாம்.”
அந்த மனிதன் முகத்தில்
வறண்ட புன்னகை ஒன்று வந்து போனது. “இப்படி நடக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்தது
தான். காந்தார அரசர் எப்போதோ தன் அதிகாரத்தை இழந்து விட்டார். அந்தக் கிழவர் மகன் செயல்களுக்கு
வருத்தப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்... இப்போதெல்லாம்
ஆம்பி குமாரன் இங்கே அதிகம் வருவதில்லையா?”
மைனிகா அவன் பெயரைக்
கேட்டவுடன் முகம் சுளித்தாள். தாசியே ஆனாலும் அவளுக்குக் கூட அவனுடன் இருக்கையில் ஏற்படும்
அருவறுப்பைத் தவிர்க்க முடிந்ததில்லை. அவன் தோற்றத்திலும், அவன் ஆண்மையிலும் எந்தக்
குறையும் சொல்ல முடியாதென்றாலும் அவன் வாய்
திறந்து பேச ஆரம்பித்தால் ஏற்படும் உணர்வு அருவறுப்பாகவே இருந்தது. பேசுகையில் யாரையாவது
இழிவு படுத்துவது போல அவனால் பேசாமல் இருக்கவே முடியாது. மேலும் அவன் அடுத்தவர்கள்
உணர்வுகளை என்றுமே புரிந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை. தன்னைத் தவிர வேறு எதையும்
பெரிதாக நினைக்கும் பழக்கம் என்றுமே இல்லாதவன்.... அவள் சொன்னாள். “அவனுடைய அந்தப்புரத்தில்
அவனுடைய மனைவிக்குத் தோழியாக ஒரு புதிய பெண் வந்திருப்பதாய் செய்தி வந்திருக்கிறது.
இப்போது அவனுடைய முழுக் கவனம் அவள் மீது இருக்கிறதாம்”
அந்த மனிதன் சொன்னான்.
“நல்லது.”
மைனிகா கேட்டாள்.
“அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது தூதர் அங்கே போய் காந்தார அரசரின்
பதிலைச் சொன்ன பின் தான் முடிவு செய்யப்படுமா?”
“இல்லை மைனிகா.
இப்படித் தான் நடக்கும் என்பதை கேகய அமைச்சர் இந்திரதத் முன்பே அனுமானித்திருந்தார்.
ஆனாலும் முறைப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகத் தான் அந்தத் தூதரை
அனுப்பி இருந்தார். இந்திரதத் முன்பு தட்சசீல கல்விச்சாலையில் படித்தவர். அது காந்தார
விஷயத்தில் அவரைச் சிறிது மென்மைப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்... நாம் வரும்
பௌர்ணமி அன்று செயல்படப் போகிறோம்....”
மைனிகா சொன்னாள்.
“இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன”
“ஆம். அதிக காலம்
எடுத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. நம் திட்டத்தில் உன்னுடைய பங்கு மிக முக்கியமானது. சேனாதிபதி சின்ஹரனை உன் பொறுப்பில் விடுகிறேன்.
காந்தார அரசர் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. ஆம்பிகுமாரன் அந்தப் பெண் இருக்கிற வரை
அதற்குத் தயாராக இருப்பானே தவிர போருக்குத் தயாராய் இருக்க மாட்டான். நம் திட்டப்படி
எல்லாம் நடக்குமானால் எல்லாம் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விடும். ஆம்பி குமாரனுக்கு
ஒரு நல்ல பாடம் புகுத்துவது தான் நம் குறிக்கோள்... இனி அவன் கேகய நாட்டைக் குறைத்து மதிப்பிட மாட்டான்...”
மைனிகா சொன்னாள்.
“என்னை என் தாய்நாடு நினைவு அதிகம் வாட்டுகிறது. எல்லாம் முடிந்து இங்கிருந்து விடுபட்டால்
போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்...”
அந்த மனிதன் அவளை
எச்சரித்தான். ”ஆனால் தாய்நாட்டுக்குப் போகும் அவசரத்தில் பிழைகள் நேர்ந்து விடக்கூடாது
மைனிகா. எச்சரிக்கையை நீ குறைத்துக் கொள்ளக் கூடாது. நான் சொன்னது போல் உன் பங்கு மிக
முக்கியமானது...”
“எனது பங்கை நான்
கச்சிதமாக நிறைவேற்றி விடுவேன். கவலைப்படாதே...”
“வெற்றி வாகை சூடிய
பிறகு சந்திப்போம் மைனிகா. நான் கிளம்புகிறேன்....”
அவள் தலையசைக்க
அவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.