·
தெய்வம் காட்டுமே
தவிர ஊட்டாது.
·
தங்கச்
செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
·
காண ஒரு தரம்,
கும்பிட ஒரு தரமா?
(காணும் போதே கும்பிட
வேண்டியது தானே? காண ஒரு முறை போய் விட்டு கும்பிட ஒரு முறை போக வேண்டுமா?)
·
செக்கென்றும்
சிவலிங்கம் என்றும் தெரியாது நக்குகிற நாய்க்கு.
·
திகம்பர சாமியாருக்கு
வண்ணான் உறவு ஏன்?
(திகம்பர சாமியார்
ஆடைகளே அணியாமல் இருப்பவர். அவருக்கு ஏன் வண்ணான் உறவு தேவைப்படுகிறது?)
·
சாகிற வரையில்
வைத்தியன் விடான். செத்தாலும் விடான் பஞ்சாங்கக் காரன்.
·
தீயில் இட்ட நெய்
திரும்ப வராது.
·
துரும்பு தூண் ஆனால்
தூண் என்ன ஆகாது?
·
நல்ல வீடென்று
பிச்சைக்கு வந்தேன். கரியை வழித்து கன்னத்தில் தடவினார்கள்.
·
நாடு கடந்தாலும்
நாய்க்குணம் போகாது.
·
தேரோடு போச்சுது
திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
தொகுப்பு: என்.கணேசன்
எல்லாமே (எனக்குப்) புதுசு. எல்லாமே அருமை.
ReplyDelete