31)
பணம் இல்லா விட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது. இருந்தாலோ உனக்கே உன்னைத் தெரியாது.
32)
செத்தது நாய் தான்.
ஆனால் சவ ஊர்வலம் மிக நீளம்.
33)
நீ மிக மென்மையாக
இருந்தால் உலகம் உன்னைக் கசக்கிப் பிழிந்து விடும். நீ மிக விறைப்பாய் இருந்தால்
உலகம் உன்னை தகர்த்து எறிந்து விடும்.
34)
சேற்றில் ஒரு அடி
வைப்பதை விட பத்து அடி சுற்றிப் போவது நல்லது.
35)
நண்பகலில் அரசன் அது
நடுநிசி என்றால் நீயும் நட்சத்திரங்களைப் பார்.
36)
தானாக ஓடும்
வண்டியைத் தள்ளிவிட ஆள் சேரும்.
37)
முன்னால் பணக்காரனாய்
இல்லாதிருந்தவனை தரித்திரம் பாதிக்காது.
38)
வெள்ளத்தோடு வந்ததெல்லாம்
வடியும் போது போய் விடும்.
39)
கவனம், மௌனம், பொறுமை
மூன்றும் நீ கேட்காமலே எல்லாவற்றையும் கற்பிக்கும்.
40)
மகிழ்ச்சி கொண்ட ஏழை
ஒரு கோடீஸ்வரன்.
தொகுப்பு: என்.கணேசன்
பழ மொழிகள் அனைத்தும் நன்று. வாஸ்தவ மானவை...! அதனால் தான் முன்பே சொல்லி இருக்கிறார்கள்.நிறைய பழ மொழிகள் அறிந்து கொண்டேன்.நன்றி.
ReplyDeleteஅனைத்தும் நன்று...
ReplyDelete