இன்று தினமணியில் வெளியான பரம(ன்) இரகசியம் விமர்சன்ம்
காதல், குடும்பம், பாசம், ஆழ்மன சக்தி, ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியில் ஆராய்ச்சிகள், தத்துவம், சஸ்பென்ஸ் என்று பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கிய கலவை நாவல் இது. இருப்பினும் இந்நாவலில் ஆன்மிக உணர்வே தூக்கலாகத் தெரிகிறது. நாவல் முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் காட்சி தந்து நமது மனதில் நிறைந்து விடுகிறது. அத்துடன் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தில் காண்பதைப் போல நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். இத்துடன் மாமியார்-மருமகள், தாய்-மகன், தந்தை-மகள், பாட்டன்-பேரன், பாட்டி-பேரன் என பல்வேறு கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கணபதியின் கதாபாத்திரமும், ஈஸ்வரின் கதாபாத்திரமும் மானுட மேன்மையை உணர்த்துவதாக உள்ளன. இத்தகைய மனிதர்கள் உலகில் ஆங்காங்கே பிறந்து வளர்ந்தால் உலகமே அன்பு மயமாகத் திகழும். சில மெகா தொடர்களில் ஏராளமான கதாபாத்திரங்களையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டு, சிக்கல்களை விடுவிக்கத் தெரியாத நிலையில் திடுதிடுப்பென சீரியலை முடித்துவிடுவார்கள். அதுபோலன்றி, இந்நாவலின் இறுதி முடிவு வாசகர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவலைப் படிப்பது ஓர் இனிய அனுபவம்.
நன்றி: தினமணி-நூல் அரங்கம் 19-05-2014

மிகச்சரியான விமர்சனம். உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களுடன் கதை கொண்டு சென்ற விதம் நேரில் அல்லது திரைப்படத்தில் பார்ப்பது போலத்தான் பரமன் இரகசியம் இருந்தது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் இப்பொழுது சமீபத்தில் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மிக மிக அருமையாக கொண்டு செல்லப்பட்டக் கதை. மானச லிங்கம் என்று ஒன்று இருப்பதாகவே நம்ப ஆரம்பித்து விட்டேன்.
ReplyDeleteஇது வெறும் கற்பனையாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். யாருக்காவது இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா? சித்தர்களை நமக்குக் கட்சி தருவார்களா? என்று என் மனதில் பல கேள்விகள். படித்துக் கொண்டிருந்த நானே ஆல்பா நிலைக்கு சென்று விடுவேனோ என்கிற அச்சம் கூட சில சமயங்களில் என்னுள் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.
அருமையான கதை. நிஜமாகவே மானச லிங்கம் என்று ஒன்று இருந்ததா? அல்லது இருக்கிறதா? விளக்கினால் நலம்.
பாராட்டுக்கள் ஒரு அருமையான நாவலைப் படைத்ததற்கு.
மிக்க நன்றி. மானச லிங்கம் என்ற சொல் பாகவதம் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாவலில் பயன்படுத்தப்படும் விசேஷ மானஸ லிங்கம் ஆரம்பத்தில் என் கற்பனையே. ஆனால் போகப் போக அது கற்பனையில்லை என்பதை நானே உணர ஆரம்பித்தேன்.
DeleteCongratulations and the novel deserves more complements
ReplyDeleteReally novel is very interesting to read till the end. Thanks sir for writing this kind of novels. After reading we feel the change in our thoughts also.
ReplyDeleteAwesome....