சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 6, 2022

யாரோ ஒருவன்? 88



போலீஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் “சரி... இங்க இருந்து இப்ப கிளம்புவோம். அரை மணி நேரம் கழிச்சு வருவோம்என்று சொல்லி எடுத்த கம்பியை அவசரமாக மறுபடி உள்ளே வைத்து விட்டு அவன் ஸ்கூட்டரை கிளப்ப முயன்றான். நிறைய நேரம் செயலற்று இருந்த அந்த ஸ்கூட்டர்  உடனடியாகக் கிளம்பாமல் முரண்டு பிடித்தது.

போலீஸ் ஜீப் அவர்கள் அருகே வந்து நின்றது.... இளம் போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியே தலையை நீட்டி அவர்களைச் சந்தேகத்தோடு பார்த்தார். “என்ன பிரச்னை

ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது சார்என்றான் தெருவைக் கடந்து அந்த ஃபேக்டரியை ஆராய்ந்தவன்.

அந்த போலீஸ் அதிகாரி ஜீப்பில் இருந்து இறங்கி இரண்டு பேரையும் தீவிர சந்தேகப்பார்வையோடு பார்த்தார். “எவ்வளவு நேரமா?”

இப்ப தான் சார்

நான் ட்யூட்டிக்கு சாயங்காலம் இந்த வழியா போறப்பவே நீங்க ரெண்டு பேரும் இங்கே நின்னு பேசிட்டு இருந்ததைப் பார்த்தேனே...”

ஸ்கூட்டரைக் கிளப்பிய சகா சமாளித்தான். “இவன் வீட்டுல எதோ பிரச்னை சார். அதான் என்ன பண்றதுன்னு பேசிட்டே இருந்தோம். நேரம் போனதே தெரியலை....”

அவன் சொன்னதில் திருப்தி அடையாத அதிகாரிஎங்களைப் பார்த்து அவசரமா எதோ உள்ளே வெச்ச மாதிரி இருந்துதே.”

அப்படியெல்லாம் இல்லை சார்

அதிகாரி அவன் ஸ்கூட்டரை பரிசோதித்து உள்ளே வைத்திருந்த வளைத்த கம்பியை வெளியே எடுத்தார். “என்ன இது?”

அவன் என்ன சொல்வதென்று யோசித்தான். அவர் அந்தக் கம்பியைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் பார்வை எதிரில் இருந்த ஃபேக்டரியில் தங்கியது.  “ஓ இதை நோட்டம் போட்டுகிட்டு தான் இங்கே நிக்கறீங்களா? பூட்டைத் திறக்க தான் இந்தக் கம்பியா?”

சார் சும்மா அபாண்டமா சொல்லாதீங்க... நாங்க அப்படிப்பட்ட ஆள்க எல்லாம் இல்லை.... லோகல் எம்.எல்.ஏ எங்க நண்பர் தான் சார்...”

எம்.எல்.ஏ ஓட்டு போட்ட எல்லாருக்கும் நண்பர் தான்.... ரெண்டு பேரும் உங்க ஐ.டி எடுங்க. நீங்க எந்த ஏரியா?”

கால் மணி நேரம் கழித்து விரிவாக விசாரிக்க அவர்களை அந்த அதிகாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். ஒரு பொதுநல அமைப்பின் தலைவரும், ஒரு வக்கீலும் இரண்டு மணி நேரம் கழித்து போலீஸ் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்கள். காலை ஆறு மணி வரை விசாரணையும், பேச்சு வார்த்தையும் நடத்தி சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்த இருவரையும் அந்தப் போலீஸ் அதிகாரி எச்சரித்து அனுப்பி வைத்தார்.

முதல் தடவைங்கற தால தான் வழக்கு பதியாமல் அனுப்பி வைக்கிறேன். இனிமே இந்த மாதிரி சந்தேகப்படற மாதிரி நடக்கக்கூடாது. புரிஞ்சுதா?”

அஜீம் அகமதுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்தது. அவனுக்குள் மெல்ல ஒரு சந்தேகம் எழ ஆரம்பித்தது. ”என்ன நடந்துச்சு, எப்ப எப்படி அவங்கள அந்தப் போலீஸ்காரன் விசாரணைக்கு அழைச்சுகிட்டுப் போனான்... விரிவா சொல்லு”  என்று தன் ஆளிடம் சொன்னான்.

அந்தக் கட்டிடத்துக்கு ஆள் யாரும் போகல, வரலைன்னு ஆனவுடனே என் கிட்ட போன் பண்ணி கேட்டாங்க. நான் பதினொன்றரை மணிக்கு உள்ளே போய் ஒரு தடவை பார்த்துடுங்கன்னு சொன்னேன். அவனுகளும் சரின்னானுக. பூட்டைத் திறக்க கம்பி எடுத்த சமயத்துல தான் போலீஸ் ரோந்து ஜீப் போயிருக்கு. அந்தப் போலீஸ் அதிகாரி சாயங்காலம் வேலைக்குப் போகிறப்பவே நம்ம ஆள்களைப் பார்த்துட்டதா சொல்றார். மப்டியில் இருந்ததால நம்ம ஆளுக அவரைக் கவனிக்காம இருந்திருக்கலாம். ராத்திரி ரோந்து வர்றப்பவும் இவனுக இருந்ததும், அந்தக் கம்பியை வெச்சிருந்ததும் சந்தேகத்தைக் கிளமப்பி, விசாரணைக்குக் கூட்டிகிட்டு போயிருக்காரு.... வக்கீலும் நம்ம ஆளும் போய் பேசினதுக்கப்பறம் அனுப்பி வெச்சிட்டாரு... வழக்கெல்லாம் ஒன்னும் பதியலை

எல்லாம் இயல்பாக இது போன்ற சமயங்களில் நடக்கும் நிகழ்வு போலவே தோன்றினாலும்  அஜீம் அகமது மனதில் எழுந்த சந்தேகம் ஒரேயடியாய் விலகிவிடவில்லை.  ’போலீஸ் ரோந்து ஜீப் இயல்பாகவே அந்தப் பக்கம் வந்ததா இல்லை, மகேந்திரன் மகன் அனுப்பி வைத்து அங்கே வந்ததா?’

சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டுச் சொன்னான். “நாளைக்கு வேற யாராவது ரெண்டு பேரை ராத்திரி நேரத்துல உள்ளே போய் பார்த்துடச் சொல். போலீஸ் ரோந்து போற நேரம் தெரிஞ்சுகிட்டு வேற நேரத்துல போகச் சொல். கண்காணிக்கிற வேலையே வேண்டாம். ஒரேயடியாய் பார்த்துட்டு வந்துட்டா போதும்


ள்ளிரவு 1.50க்கு ஒரு மாருதி வேனில் மணியும் அவன் சகாக்களும் வந்தார்கள். நாகராஜின் வீட்டுக்கு நூறு மீட்டர் முன்பே வேனில் இருந்து பழனி என்பவன் இறங்கிக் கொண்டான். பின் நூறடி தாண்டிய பின்னர் மணியும், வேறு நால்வரும் இறங்கிக் கொண்டார்கள். பின் துரை என்பவன் மாருதி வேனோடு அங்கிருந்தும் நகர்ந்து போய் நாகராஜின் வீடு தாண்டி நூறு மீட்டர் தள்ளி ஒரு இடத்தில் வேனை ஒரு ஒதுக்குப் புறமாக நிறுத்தி உள்ளிருந்தபடியே கண்காணிக்க ஆரம்பித்தான். மணியும் மற்றவர்களும்  நாகராஜ் வீட்டை சத்தமில்லாமல் அடைந்த போது மணி 1.55.


திகாலை ஐந்தரை மணிக்குத் தான் வேலாயுதம் அன்று கண்விழித்தார். கடிகாரத்தைப் பார்த்து பதற்றத்துடன் எழுந்து நின்றவர் அவசரமாக ஜன்னல் வழியே பக்கத்து வீட்டைப் பார்த்தார். பக்கத்து வீட்டில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நேற்று நள்ளிரவு வரை சற்று கண்ணயர்வோம் என்று நினைத்துப் படுத்த அவர் இப்படி காலை வரை உறங்கியிருப்பது அவருக்கே பொறுக்க முடியாத குற்றமாகப் பட்டது. இவ்வளவு நேரம் அவர் இன்று வரை உறங்கியதேயில்லை. ‘சே... முக்கியமான நாளில் இப்படித் தூங்கி விட்டோமேஎன்று தன்னையே கடிந்து கொண்டவராக வேகமாக அவர் அறையை விட்டு வெளியே வந்தார். வீடே அமைதியாய் இருந்தது. மருமகளும் பேத்தியும் ஏழு மணிக்கு தான் எழுந்திருப்பார்கள் என்றாலும் கல்யாண் பெரும்பாலும் விழித்திருக்கும் நேரம். அவனும் விழித்தெழுந்த அறிகுறியே இல்லை. ஒருவேளை நேற்று இரவு அவன் விழித்திருந்து அதிகாலை தான் தூங்கியிருப்பானோ, அதனால் தான் இன்னமும் எழுந்திருக்கவில்லையோ என்று எண்ணியபடி அவசரமாக வெளியே வந்தார். லேசாக விடிய ஆரம்பித்திருந்தது. வெளியே வாக்கிங் போய் வருபவர்களின் நடமாட்டம் தெரிந்தது.

நாகராஜும், சுதர்சனும் வாக்கிங் போயிருப்பார்களா இல்லையா? நாகராஜ் தன் வீட்டில் திருட்டுப் போயிருப்பதைக் கண்டுபிடித்திருப்பானா இல்லையா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமல் மண்டை வெடித்துவிடும் போல அவருக்கு இருந்தது. பதற்றத்துடன் முன்னாலிருந்த புல்வெளியில் அங்குமிங்கும் நடக்க ஆரம்பித்தார்.

என்னாச்சுகல்யாணின் குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்த அவர் மகனிடம் பரபரப்புடன் சொன்னார். “கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நேத்து ராத்திரி படுத்தவன் இப்ப தான் எழுந்திருச்சேன். நீ ஏதாவது கவனிச்சியா?”

நானும் உங்க மாதிரி தான். மேகலா அவளோட அமெரிக்கா ஃப்ரண்டோட அரட்டையடிச்சிட்டிருந்தா. அவ தூங்கற வரைக்கும் வாட்சப் பார்க்கலாம்னு பாத்துகிட்டிருந்தவன் அப்படியே அசந்து தூங்கிட்டேன்...”அவன் குரலிலும் வருத்தம் தெரிந்தது.

முக்கிய விஷயங்களில் என்றுமே அலட்சியமாக இருந்திராத இரண்டு பேரும் இப்படி அசந்து தூங்கினது வேலாயுதத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. மெல்ல ஒரு சந்தேகம் எழ அவர் மகனருகே வந்து தாழ்ந்த குரலில் கேட்டார். “அவனுக அந்த ரத்தினங்கள எடுத்துட்டுப் போயிருப்பானுக இல்லயா?”

அவர் அப்படிக் கேட்டதே கல்யாணுக்கு அடிவயிற்றைக் கலக்கியது.



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

2 comments:

  1. ஐயா... ராத்திரி திருட வந்தவங்க நிலைமை என்னானு சொல்லாம...கட் பண்ணிட்டு... வேலாயுதம் கண்விழிச்ச காட்சிய போட்டுடிங்களே.... இது கொஞ்சம் ஓவர் சஸ்பென்ஸ் தான்...

    ReplyDelete
  2. Each week dhik dhik. Super. Eagerly waiting for next Monday

    ReplyDelete