சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 3, 2014

உலகப் பழமொழிகள்-2





11)      எந்த நிறம் சேர்ந்தாலும் கறுப்பு நிறம் மாறாது.

12)      கடவுளைத் தொழு. ஆனால் பாறைகளைக் கவனித்து படகை ஓட்டு.

13)      கடவுள் பொறுமையாக இருக்கிறார். ஏனெனில் அவர் நித்தியமானவர்.

14)      ஒவ்வொரு நாளும் தனது ரொட்டித்துண்டைக் கொண்டு வருகிறது.

15)      ஒரு பெண்ணையோ, பஸ்ஸையோ தொடர்ந்து ஓட வேண்டாம். பின்னால் வேறு கிடைக்கும்.

16)      உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி.

17)      வீட்டைக் கட்டிப் பார்க்காதவன் மண்ணில் இருந்து தான் சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான்.

18)      அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் பிரிக்கும் குறுக்குச் சுவரை இடித்து விடாதே.

19)      நன்றியற்ற  மகன் தந்தை முகத்தில் உள்ள பரு; அதை விட்டு வைத்தால் விகாரம். கிள்ளி எறிந்தால் வலி.

20)   குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் இருந்து கற்றவை.

தொகுப்பு: என்.கணேசன்


3 comments: