சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 3, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 3




இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்

அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.

தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.

வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.

ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.

காற்றில்லாமல் தூசு பறக்காது.

காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.

எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.

சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.

பனி பெய்து குளம் நிரம்பாது.

பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.

பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.

இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?

மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


தொகுப்பு: என்.கணேசன்

11 comments:

  1. அனைத்தும் அருமை நண்பரே!

    ReplyDelete
  2. நல்ல பொன்மொழிகள்.
    தொகுப்பிற்கு நன்றி சார்.

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு . நன்றி

    ReplyDelete
  4. நல்லதொரு தொகுப்பு... மிக்க நன்றி...

    ReplyDelete
  5. அருமை........அருமை......

    ReplyDelete
  6. அண்ணே எல்லா பழமொழியும் நல்லாருக்கு. நான் உங்க வலைப்பூ தொடர்ந்து படிப்பவன். பின்னூட்டம் இதுதான் முதல். :)

    ReplyDelete
  7. //சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
    மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது//

    எல்லாக் கணவர்களுக்கும் ஒரு அருமையான பழமொழி. ஹா ஹா

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு நண்பரே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. the right proverb is

    Pinne enbadum, Pesadiruppadum, illai enbadarkku adaiyaaLam.

    ReplyDelete
  10. வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.

    Ithukku enna artham ??

    ReplyDelete
  11. நன்றி.
    விளக்கமும் கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....

    ReplyDelete