என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, October 29, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 4எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.

என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?

கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?

எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?

கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?

பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?

சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?

வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.

தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.

தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.

பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

உடையவன் பாராத வேலை உருப்படாது.

தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.

எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை

ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


தொகுப்பு: என்.கணேசன்

4 comments:

 1. அண்ணை இதையும் சேர்த்துக்குங்க முட்டையில முடி புடுங்கி செட்டையோடு கோழி திண்டானாம்(வீண் முயற்சிக்கு யாழ்ப்பாணத்தில் கூறுவார்கள்)

  ReplyDelete
 2. //என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?//

  தெலுங்கில்- "மாதே மாதி,மீதே மாதி"

  கேள்விப்பட்டதுதான். நான் தெலுங்குக்காரன் இல்லை.

  ReplyDelete
 3. மிக நன்றாக உள்ளது.......அனைத்து பழமொழிகளும்
  அப்படியே இரண்டு வரிகளில் சில விளக்கங்களும் குடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே....!! இல்லையெனில் சிலவற்றிற்கேனும் விளக்கங்கள் குடுப்பது நன்றாக இருக்கும்

  ReplyDelete
 4. velai illadha ambattan
  pondati mayirai sayraikka porannaanam

  Add this also

  ReplyDelete