என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label நேர்காணல்-சொற்பொழிவு. Show all posts
Showing posts with label நேர்காணல்-சொற்பொழிவு. Show all posts

Tuesday, April 14, 2020

ஆழ்மன ஆற்றல் குறித்து 15.04.2020 அன்று என் பேச்சும், கலந்துரையாடலும்!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நாளை, 15.04.2020 புதன் கிழமையன்று, மாலை ஐந்து மணிக்கு ஆழ்மன சக்தி ஆற்றல் குறித்து zoom app (செயலி) மூலமாக என் பேச்சும், அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.


Date 15.04.2020
Time 5.00 PM
Meeting ID 477-589-6897
Password 20021998

ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாசகர்கள் இந்த நிகழ்வில் ஆழ்மனசக்தி, தன்னம்பிக்கை குறித்த கேள்விகள் கேட்கலாம். Zoom app இல்லாதவர்கள் முன்கூட்டியே  கூகுள் ஸ்டோர்ஸிலிருந்து லேப்டாப்பிலோ, மொபைல் போனிலோ டவுன்லோடு செய்து கொண்டால் மேற்கண்ட மீட்டிங் ஐ.டி, பாஸ்வர்டு போட்டு எங்கிருந்தும் கலந்து கொள்ள முடியும்.  டவுன்லோடு செய்வதில் பிரச்னை அல்லது சந்தேகம் இருந்தால் நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர்கள் உதவ இசைந்துள்ளார்கள். அவர்கள் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அறிவிப்பு அட்டையில் உள்ளன.

Click https://us04web.zoom.us/j/4775896897 to start or join a scheduled Zoom meeting.
15.4.2020 மாலை 5 மணி அளவில்
இந்த இணைப்பைத் தொட்டாலே போதும் ....

இன்றைய கூட்டத்திற்கு
அப்படியே உள்ளே வரலாம் ..

நன்றி.


அன்புடன்
என்.கணேசன்

Friday, January 24, 2020

என் வாசகர்கள் குரல் - 2

அன்பு வாசகர்களுக்கு

வணக்கம்.

சென்னை புத்தகக் காட்சியில் என் புத்தகங்கள் குறித்துப் பேசிய சில வாசகர்கள் குரல் ....



இங்கு பேசியவர்களுக்கும், இதே எண்ணப் போக்கைக் கொண்டவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள். ஒரு எழுத்தாளனை ஊக்குவிப்பதும், உயர்த்துவதும் உண்மையில் அவனது வாசகர்களே! எனவே அனைத்துப் பெருமையும் உங்களுக்கே.

அன்புடன்
என்.கணேசன்

Tuesday, October 2, 2018

வாழ்க்கை வாழ்வதற்கே- என் உரையின் மூன்று காணொளிகள்

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்த ஞாயிறன்று கோவையில் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பில் நான் ஆற்றிய சொற்பொழிவின் மூன்று காணொளிகளை நான் இங்கே இணைத்துள்ளேன்.

வாழ்க்கையை சிந்தித்து வாழ்கிறோமா? எப்படி வாழ்கிறோம்? நாம் எப்படி வாழ வேண்டும், செய்யக்கூடிய தவறுகள் என்ன? சரிப்படுத்திக் கொள்வது எப்படி? எது வெற்றி? எது நிறைவு? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அமைந்துள்ளவை முதலிரண்டு காணொளிகள்.

முதல் பகுதி-




இரண்டாம் பகுதி -





மூன்றாவது காணொளி என் சொற்பொழிவில் முரண்பட்டு ஒரு நண்பர் கேட்ட கேள்வியும் எனது பதிலும்.




அன்புடன்
என்.கணேசன்


Saturday, September 22, 2018

கோவையில் என் சொற்பொழிவு - வாழ்க்கை வாழ்வதற்கே!



வணக்கம் வாசகர்களே!

வரும் ஞாயிறு 23.9.2018 அன்று நூலக இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கோவைப்புதூர் பொது நூலக வளாகத்தில் ”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கிறேன்.

நாம் முறையாகத் தான் வாழ்கிறோமா? நம் வாழ்க்கையில் அர்த்தமும், அமைதியும், ஆனந்தமும், உற்சாகமும், துடிப்பும் இருக்கின்றனவா? இல்லை நாம் அதை இழந்து விட்டிருக்கிறோமா? இழந்திருந்தால் அதை எப்படி இழக்கிறோம்? திரும்பவும் அவற்றைப் பெறமுடியுமா? அதற்கான வழிகள் என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக என் பேச்சு இருக்கும்.

கோவையில் உள்ள வாசக நண்பர்களில் முடிந்தவர்கள் வருகை புரியுமாறும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  

வாழ்க்கையைக் குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அர்த்தமின்மையில் இருந்து அர்த்தத்திற்கும், எந்திரத்தன்மையிலிருந்து உயிரோட்டத்திற்கும், பலவீனத்திலிருந்து மகாசக்திக்கும் மாற்ற, இந்தச் சொற்பொழிவுக்கு வாங்க! சிந்திக்கலாம்!


நாள்: 23.9.2018 (ஞாயிறு)
நேரம்: மாலை 6.00 – 7.30
இடம்: கோவைப்புதூர் நூலக வளாகம், (நாகப்பிள்ளையார் கோயில் பின்புறம்)  கோவைப்புதூர். கோயமுத்தூர் 641042

அன்புடன்
என்.கணேசன்