சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 22, 2012

என் புதிய நூல் - பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்




பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.

இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள்,  உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள்.  புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது

மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள்,  பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.

நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in ,   blackholemedia@gmail.com  மின்னஞ்சல்கள் மூலமாகவோ,  செல்பேசி:   9600123146,  மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். 

பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.

இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்

14 comments:

  1. குறித்துக் கொண்டேன்..

    மிக்க நன்றி...

    ReplyDelete
  2. வரதராஜன்October 22, 2012 at 6:50 PM

    புதிய நூல் வெளியிட்டமைக்குப் பாராட்டுகள். அதே போல் அமானுஷ்யன் நாவலையும், ஆழ்மனசக்திகள் தொடரையும் புத்தகமாகப் போட்டால் வாசகர்கள் நாங்கள் மிகவும் மகிழ்வோம். பயனடைவோம்.

    ReplyDelete
    Replies
    1. சுந்தர்October 23, 2012 at 2:20 PM

      நானும் இதை மறுமொழிகிறேன் கணேசன் சார். இரண்டும் வர வேண்டிய புத்தகங்கள். வந்தால் நல்ல வரவேற்பைப் பெறும். பரிசீலிக்கவும்.

      Delete
    2. நானும் இதை மறுமொழிகிறேன் கணேசன் சார்.

      Delete
  3. Congtatulation Mr.Ganeshan

    ReplyDelete
  4. புத்தாக்கதிர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சண்முகசுந்தரம், பூகம்ப ஆய்வாளர், கோவை.

    ReplyDelete
  5. இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதை பற்றி நானும் கேட்களாம் என்றிருந்தேன்.........இப்போது புத்தகமாக வெளிவந்ததை கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன் கணேசன் சார்.....

    வாழ்த்துகள்......!!

    ReplyDelete
  6. Congratulations and Wish you all the best. We are expecting to release the other of your earlier books.Vaazhga Valamudan

    ReplyDelete
  7. உங்களின் புதிய புத்தக வெளியீடு "பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்”, அனைவரையும் கவரும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    நித்யன்.

    ReplyDelete
  8. bought the book, thank you
    Geetha

    ReplyDelete
  9. paraman ragasiyamum ithe mathiri thana..? pathi inge pathi puthagam..?

    ReplyDelete