என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Saturday, September 30, 2023

என் இரு ஆன்மீக நூல்கள்-மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மீகம்- மறுவெளியிடு!

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நான் எழுதி தினத்தந்தியில் தொடராகவும், நூலாகவும் வெளிவந்த இரண்டு ஆன்மீக நூல்களின் மறுபதிப்புகள்  இன்று வெளியாகியுள்ளன.

முதலாவது நூல் மகாசக்தி மனிதர்கள். இதன் மூன்றாம் பதிப்பை இன்று என்.கணேசன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.


இரண்டாவது நூல் அமானுஷ்ய ஆன்மீகம். இதன் இரண்டாம் பதிப்பை இன்று என்.கணேசன் புகஸ் வெளியிட்டுள்ளது. 


புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த நூல்கள் உட்பட என்னுடைய எல்லா நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K

இப்படி தொடர்ந்து புதிய நூல்களும், பழைய நூல்களின் அடுத்தடுத்த பதிப்புகளும் வெளியாகிக் கொண்டிருப்பதற்கு வாசகர்கள் காட்டி வரும் பேராதரவே காரணம். நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

Sunday, August 20, 2023

2 புதிய நூல்களும் 1 நூலின் மறுபதிப்பும் இன்று வெளியீடு.

 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


இன்று Attain Success & Retain Peace ஆங்கிலப் புத்தகமும், உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள் என்ற தமிழ் நூலும் வெளியாகியுள்ளன. பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் நூலின் ஐந்தாம் பதிப்பும் வெளியாகியுள்ளது.

                                                 

நூல்களின் விவரங்கள் -

Attain Success & Retain Peace



Do you want to achieve remarkable success without losing peace of mind? If the answer is “yes!” then this book is for you.

Here you’ll find –

Ten Rules to Success & Peace

How to deal with setbacks and Failures?

How to come out of depression?

How to deal with stress & toxic thoughts?

Signs of transformation

Many other tips to achieve success and Peace 

இந்த நூலை அமேசானில் வாங்கலாம்.

https://www.amazon.in/dp/8196319630


உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்

 


உங்களை முன்னேற்றவும், உயர்த்திக் கொள்ளவும் நிறைய படிக்க ஆவல் இருக்கிறது, ஆனால் அதற்கு நேரமில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காகத் தான் இந்தப் புத்தகம். மகத்தான வெற்றி, ஞானம், பேரமைதி, பெருமகிழ்ச்சி பெற வழிகாட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து அறிஞர்களின் மிக முக்கிய வழிகாட்டுதல்களை வடிகட்டி எடுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். 120க்கும் மேற்பட்ட அருமையான வாழ்க்கைக் குறிப்புகளுக்கு எளிமையான விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் படிக்கவும் உங்களுக்கு சுமார் ஐந்து நிமிடங்கள் தான் ஆகும். இந்த ஒரு நூலைப் படித்தால் பல நூல்களைப் படித்தறியும் பலனை நீங்கள் பெறலாம்.

அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8196319649


பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்



உள்ளே உள்ள சில அத்தியாயங்கள்

நள்ளிரவில் பிரமிடுக்குள்

உடலைப் பிரிந்து ஒரு பயணம்

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி

ஆவி பூதங்களை ஆட்கொண்ட மனிதன்

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்

ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும், முடியாததும்.

28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை

ரகசிய தீட்சை- இரண்டாம் பிறப்பு

இறைவனின் மொழியும், இறந்தவர்கள் புத்தகமும்

கர்னாக் கோயிலின் இரகசியக் குறிப்புகள்

பாம்பு, தேள்களை வசியம் செய்தவர்

பாம்பு வசியத்தின் அபாயங்களும் சூட்சுமங்களும்

பால் ப்ரண்டன் கண்ட அதிசய மனிதர்

உலகத்திற்கு ஒரு எச்சரிக்கை


எகிப்தில் பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி பெற்ற சுவாரசிய அனுபவங்களையும், ஆன்மீக ஞானத்தையும், அபூர்வ சக்திகளின் சூட்சுமங்களையும் விளக்கும் இந்த அச்சு நூலையும்என்.கணேசனின் மற்ற நூல்களையும் ஆன்லைனில் அமேசானில்  வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/dp/8196319622


இந்த நூல்களை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


Thursday, October 13, 2022

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினமலர் மதுரைப் பதிப்பில் விமர்சனம்!

 அன்பு வாசகர்களே!


புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு இன்று (13.10.2022) தினமலர் மதுரை பதிப்பில் வந்துள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு -




Sunday, October 9, 2022

தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூல் விமர்சனம்!

 இன்று (9 அக்டோபர் 2022) தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூலுக்கு வந்துள்ள விமர்சனம்.




Thursday, September 22, 2022

விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் - புதிய நூல் வெளியீடு!




 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஆழ்மனசக்தி நூல்கள் வரிசையில் மூன்றாவதாக “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” என்ற புதிய நூல் இன்று வெளியாகியுள்ளது. 

முதலிரண்டு நூல்கள் அபூர்வ சக்திகள் பெற ஆழ்மனதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற வகையில் இருந்தன. 

இந்தப் புதிய நூல் நாம் எப்படியெல்லாம் தவறாக நம் விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதை விளக்கி, விதியைத் திருத்தி எழுத ஆழ்மன சக்திகளை க்வாண்டம் என்னும் பிரபஞ்சக்களத்தில் பயன்படுத்திக் கொள்வது என்பதை விளக்குகிறது. 

மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லா விட்டால் நாம் பெறும் அனைத்து அபூர்வ சக்திகளாலும் நாம் பெறும் பலன் தான் என்ன?  எனவே வாழ்க்கையில் அமைதியையும், ஆரோக்கியத்தையும், மனநிறைவையும், வெற்றியையும் பெற ஆழ்மன சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும், அதற்கான சூழல்களையும், மனிதர்களையும் நம் வாழ்வில் எப்படி ஈர்ப்பது என்பதையும், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுடன் எளிமையாகவும் விரிவாகவும் இந்த நூல் உங்களுக்கு விளக்கும்.

184 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.230/-

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். 


இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


புத்தம் சரணம் கச்சாமி நாவலின் மறுபதிப்பு வெளியீடு!


 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வாசகர்கள் தந்த வரவேற்பு மகத்தானது. ப்ளாக்ஹோல் மீடியா வெளியிட்ட அந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்பனையாகித் தீர்ந்து சில மாதங்கள் ஆகின்றன. இந்த நாவலைப் படிக்காத புதிய வாசகர்கள் இந்த நாவலை வாங்கிப் படிக்க, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே அமானுஷ்யனும், மைத்ரேயனும், லீ க்யாங்கும், மாராவும் சேர்ந்து கலக்கும் இந்த நாவலின் மறுபதிப்பை வெளியிடத் தீர்மானித்து தற்போது என்.கணேசன் புக்ஸில் வெளியிட்டிருக்கிறோம். 

608 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.700/- 

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். 


இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8195612830?ref=myi_title_dp


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Tuesday, September 13, 2022

2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!


 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

நான் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது. 

பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. 

தோல்வி என்பது இடைவேளை -  தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.

என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/- 

அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும்,  புற வாழ்க்கையில் வெற்றியும்,  முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி  உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்

என்.கணேசன்


இந்த நூலையும் அச்சில் உள்ள என் கணேசனின் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Thursday, August 25, 2022

இன்று தினமலரில் சாணக்கியன் நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்!

 இன்று (25.08.2022) தினமலர், மதுரை பதிப்பில் சாணக்கியன் நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்!



 நன்றி: தினமலர்

Wednesday, August 17, 2022

சாணக்கியன் நாவலுக்கு துக்ளக்கில் வந்துள்ள விமர்சனம்!

 இந்த வார துக்ளக் (24.8.2022) இதழில் என் சாணக்கியன் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்-





நன்றி துக்ளக் 

Sunday, April 3, 2022

தினத்தந்தி, தினமலரில் சாணக்கியன் நாவல் மதிப்புரை!

என் வரலாற்று நாவல் சாணக்கியனுக்கு தினத்தந்தி மற்றும் தினமலர் பத்திரிக்கைகளில் வந்துள்ள மதிப்புரை! 






நன்றி தினத்தந்தி மற்றும் தினமலர் (மதுரை பதிப்பு)

Thursday, March 10, 2022

சாணக்கியன் நாவல் இன்று வெளியீடு!




அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

சாணக்கியன் வரலாற்று நாவல் இரண்டு பாகங்களில் இன்று வெளியாகி இருக்கின்றது. இந்த நாவல் சத்ரபதி நாவலையும் விட அதிகப் பக்கங்களில்  நீண்டதால் (மொத்தம் 880 பக்கங்கள்) வாசகர்களுக்கு மிகத் தடிமனான ஒரே நாவலாகக் கையில் வைத்துப் படிக்க சிரமமாக இருக்கும் என்று எண்ணி இரண்டு பாகங்களாக வெளியிட்டு இருக்கிறேன். ஒரே தலைப்பில் இரண்டு பாகங்களாக ஒரே சமயத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நாவல் இது தான்.  

இந்த வரலாற்று நாவல் இன்னொரு புதிய வரலாறையும் உருவாக்கி இருக்கிறது. இந்த நாவல் என்.கணேசன் புக்ஸ் (N.Ganeshan Books) என்ற புதிய பதிப்பகத்தின் மூலமாக வெளியாகியுள்ளது. இனி வரும் புதிய நூல்களும், பழைய நூல்களின் அடுத்த பதிப்புகளும் இந்தப் புதிய பதிப்பகத்தாலேயே வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் புதிய பதிப்பகத்தின் துவக்கத்திற்கு உறுதுணையாக இருந்த என் பழைய பதிப்பாளர் யாணன் (ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்) அவர்களுக்கு இந்த நாவலை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.


இந்த வலைப்பூவில் இல்லுமினாட்டி முடிவடைந்த பின் ஏப்ரல் 21 முதல் ஒவ்வொரு வாரமும் சாணக்கியன் நாவலின் அத்தியாயங்கள் அப்டேட் ஆகும். மொத்தம் 195 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவல் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை வெளியாகும். 

இப்படி மூன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்து சிறிது சிறிதாகப் படிப்பதற்குப் பதிலாக இந்த சுவாரசியமான, கருத்தாழம் மிக்க  நாவலை நீங்கள் உடனடியாகவும்  வாங்கிப் படிக்கலாம். 

சாணக்கியன் இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ900/-


நாவலின் குறிப்பு: 


தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல் தடுத்து, முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மாணவன் சந்திரகுப்தனை மகத அரியணையில் அமர்த்தி, பின் ஒன்றிணைந்த பாரதம் உருவாக்குவது என்று ஒரு ஏழை ஆசிரியன் முடிவெடுத்தது கற்பனையிலும் சாத்தியமாக வாய்ப்பில்லை தான். ஆனால் எண்ணத்தில் வலிமையும், அறிவில் உச்சமும் கொண்டிருந்த சாணக்கியன், இது வரை உலகில் யாரும் சாதித்திராத சரித்திரம் படைத்தது எப்படி? ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியது எப்படி? விறுவிறுப்புக்காகவும், சுவாரசியத்திற்காகவும் மட்டுமல்லாமல், மகத்தான வெற்றியைப் படிப்படியாக அடைவது எப்படி என்பதை அறியவும் சாணக்கியனைப் படியுங்கள்!


நாவலை  ஆன்லைனில் வாங்கலாம். 

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அன்புடன்
என்.கணேசன்


Friday, January 14, 2022

அமேசான் கிண்டிலில் ‘வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூல் வெளியீடு!

 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


என் ’வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ நூல் நான்காவது பதிப்பு நூல்களும் விற்றுத் தீர்ந்த நிலையில் இந்த நூல் பொங்கல் வெளியீடாக அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. லிங்க் - 


https://www.amazon.in/dp/B09QCVG2HY


இன்றைய மனிதன் தேடும் நிறைவான வாழ்க்கைக்கு என்று சில பாடங்கள் இருக்கின்றன. அந்தப் பாடங்களைக் கற்று மனதில் பதித்துத் தேர்ச்சி பெற்றால் ஒழிய வாழ்க்கைப் பரிட்சையில் அவன் தேறி விட முடியாது. அந்தப் பாடங்கள் சொல்லித்தர இங்கு தனிப் பல்கலைக்கழகம் இல்லை. அந்தப் பாடங்களை வாழ்ந்தே படிக்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கைப் பாடங்களில் பொதுவான பரிட்சைகள் முன்பே அறிவிக்கப்படுவதில்லை. நடந்த பிறகு முடிவுகளும் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் பரிட்சைகள் வாழ்வில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. பரிட்சை முடிவுகள் மன ஆழத்தில் உணரப்படுகின்றன.


எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லித் தர முடியாத, வாழ்ந்து படிக்கும் பாடங்கள் இவை. இவற்றைக் கற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் வாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி பெற முடியாது. இவற்றைக் கற்றுத் தேர்பவனே வெற்றி வாகை சூடுகிறான், வாழ்வில் நிறைவைக் காண்கிறான், காலமணலில் தன் காலடித் தடத்தை விட்டுச் செல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், குழம்பியும் வாழ்ந்து மடியும் போது இந்தப் பாடங்களை அறிந்து தெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து முழுமையாக வாழ்ந்து மனத்திருப்தியுடன் விடை பெறுகிறான்.

வாழ்ந்து படிக்கும் சிறந்த 32 பாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக மிக எளிமையாகவும், வலிமையாகவும் இந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்! வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்த நூலை வாங்குவது நல்ல மூலதனமாக இருக்கும். உங்கள் வசம் வைத்திருக்கவும், நீங்கள் அன்பும், அக்கறையும் காட்டும் மனிதர்களுக்கு நல்ல உபயோகமான பரிசளிக்கவும் தகுதியான சிறப்பான நூல் இது.  சில வருடங்களுக்கு முன் ஒரு பள்ளி தங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இந்த நூலை வாங்கிப் பரிசாகத் தந்திருக்கிறது. 

சுய முன்னேற்றத்திலும், வெற்றிகரமான வாழ்க்கையிலும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் படித்துப் பயனடைய வேண்டிய நூல் இது!

இது வரை இந்த நூலைப் படிக்காதவர்கள் அமேசான் கிண்டிலில் படிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

Tuesday, December 14, 2021

அமேசான் கிண்டிலில் புத்தம் சரணம் கச்சாமி நாவல் வெளியீடு!

 


அன்பு வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!


என் நாவல்களில் பலரும் பாராட்டும் “புத்தம் சரணம் கச்சாமி” நாவல் அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகியுள்ளது. 


அமானுஷ்யன் அக்‌ஷயும், புத்தரின் அவதாரக் குழந்தையான மைத்ரேயனும் சேர்ந்து கலக்கும் இந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்பனையாகி தீர்ந்துள்ளது. பல காலமாக என் வாசகர்கள் உங்கள் நாவல்கள் அமேசான் கிண்டிலில் மின்புத்தகமாக வந்தால் வெளிநாடுகளில் வசிக்கும் வாசகர்களுக்கும், மின் புத்தகங்களுக்குப் பழகிப் போன இளைஞர்களுக்கும் பயன் தருவதாக இருக்கும் என்று சொல்லி வருகிறார்கள். அதனால் இந்த நாவலை அச்சில் இரண்டாம் பதிப்பாக வெளிக் கொண்டு வருவதற்குப் பதிலாக அமேசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன். 


மன அமைதி கிடைப்பதற்கும், வாழ்வில் பொருளை உணர்வதற்கும் இந்த நாவலை அடிக்கடி படிப்பதாக என் வாசகர்களில் சிலர் கூறுவார்கள். 


இந்த நாவலுக்கு நல்ல வரவேற்பிருந்தால் மற்ற நாவல்களில் சிலவற்றையும் அமேசான் கிண்டிலில் கொண்டு வர உத்தேசித்திருக்கிறேன். பார்ப்போம். 


புத்தன் சரணம் கச்சாமி நாவலின் அமேசான் கிண்டில் லிங்க் -


https://www.amazon.in/dp/B09NMHSGR3


நன்றி.


அன்புடன்

என்.கணேசன்

Tuesday, August 10, 2021

ஆழ்மனசக்தி அடையும் வழிகள் மூன்றாம் பதிப்பு வெளியீடு!


 


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தங்களுடைய பேராதரவின் காரணமாக ”ஆழ்மனசக்தி அடையும் வழிகள்” நூலின் மூன்றாம் பதிப்பு வெற்றிகரமாக  வெளியாகியுள்ளது. விலை ரூ.250/-


ஆழ்மனசக்தி நூல்கள் இரண்டுமே என் அதிக உழைப்பையும், படிப்பையும் எடுத்துக் கொண்டவை. வெறுமனே அறிவுரைகள், வழிமுறைகள் கூறுவதை விட உலக அளவில் ஆழ்மனசக்தி குறித்து நடக்கும் ஆராய்ச்சிகள், இன்றைய மருத்துவம் அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடித்திருக்கும் உண்மைகள் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக எழுதி பின் அந்த உண்மைகளின் அடிப்படையில் வழிமுறைகளைக் கூறுவது சரியாக இருக்கும் என்று நான் எண்ணி எழுதிய நூல்கள் தான் எட்டாவது பதிப்பைச் சந்தித்திருக்கும் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூலும், தற்போது மூன்றாம் பதிப்பைச் சந்தித்திருக்கும் “ஆழ்மனசக்தி அடையும் வழிகள்” நூலும். 


பயன்படுத்தும் சரியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த இரண்டு நூல்களுமே பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். விளம்பரமே இல்லாமல் வேகமாக அடுத்தடுத்த பதிப்புகளை இந்த நூல்கள் சந்தித்து வருவது வாசகர்கள் தரும் அமோக வரவேற்பினால் என்றே நான் நம்புகிறேன்.  வாங்கிப் படித்தும், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தும், இந்த நூல்களைப் பரிசாக அளித்தும் இந்த நூல்களின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.


இந்த நூலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்,

என்.கணேசன் 

Thursday, December 24, 2020

பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்



இந்த இரு நாவல்களின் மகத்தான வெற்றிக்கு நன்றி வாசகர்களே.

அன்புடன்
என்.கணேசன்

இந்த நாவல்கள் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

Tuesday, December 22, 2020

பரம(ன்) இரகசியம் நாவலின் மூன்றாம் பதிப்பு வெளியீடு!



 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தங்களுடைய பேராதரவின் காரணமாக பரம(ன்) இரகசியம் நாவல் இரண்டு பதிப்புகள் முடிந்து மூன்றாவது பதிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பே இரண்டாம் பதிப்பும் விற்றுத் தீர்ந்து போனாலும், கொரானா முதலான சில சூழ்நிலைகளால் மூன்றாம் பதிப்பு சற்று தாமதமாக வெளி வந்திருக்கிறது. 


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்லப்படும் இந்தச் சூழலில் பரம(ன்) இரகசியம் போன்ற பெரிய நாவல் மூன்று பதிப்புகளைச் சந்திப்பது என்பது பெரிய விஷயமே. தங்கள் ஆதரவினால் அது சாத்தியமாகி இருக்கிறது. விசேஷ மானசலிங்கம், ஈஸ்வர், குருஜி, கணபதி, ஆனந்தவல்லி , அக்னிநேத்திர சித்தர் கதாபாத்திரங்கள் இப்போதும் மனதில் நிழலாடுவதாகச் சில வாசகர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள் என்பதை நெகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 


முதலிரண்டு பதிப்புகளில் இருந்த சில எடிட்டிங் தவறுகள் இந்த மூன்றாம் பதிப்பில் சரிசெய்யப்பட்டு கூடுதல் பக்கங்களுடன் (696) வந்திருக்கின்றன.  விலை ரூ750/-. ஆறு மாதங்களாக நாவல் வாங்க விசாரித்துக் கொண்டிருந்தவர்கள் பதிப்பாளரைத் தொடர்பு கொண்டு இதை வாங்கிக் கொள்ளலாம்.


நூலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது blackholemedia@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


அன்புடன் உங்கள்

என்.கணேசன்



Monday, December 21, 2020

யாரோ ஒருவன்? நாவல் இன்று வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த யாரோ ஒருவன்? நாவல் இன்று அச்சில் வெளியாகியுள்ளது. 142 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.650/- 


நூலின் பின்னட்டைக் குறிப்பு:


22 வருடங்களுக்கு முன் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தில் தமிழக இளைஞன் ஒருவன் இறக்கும் அதே சமயத்தில் ஒரு சர்வதேசத் தீவிரவாதியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ரா அதிகாரி தலைமறைவாகிறார். உண்மை அறிய அவரது மகனும் ஒரு ரா அதிகாரியாகி தந்தை ஈடுபட்டிருந்த கடைசி வழக்கைத் தூசி தட்டி எடுக்கும் அதே சமயத்தில், அந்த தமிழக இளைஞனின் நண்பனாகச் சொல்லிக் கொண்டு ஒரு மர்ம மனிதன் தமிழகம் வருகிறான். இளம் ரா அதிகாரி அந்தப் பழைய வழக்கில் பின்னப்பட்ட சதிவலை, சூழ்ச்சிகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட, இறந்த தமிழக இளைஞனின் நண்பர்கள் வாழ்வில் பரபரப்பான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள பின்னணியின் மர்மத்தை, காதல், நட்பு, பாசம், தீவிரவாதம், நாகசக்தி, அமானுஷ்யம் முதலான அம்சங்களுடன் விவரிக்கும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால் உங்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொள்ளும்.

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நாவல் வலைப்பூவில் வழக்கம் போல் திங்கள் தோறும் வெளியாகும். ஜுன் 2023ல் முடிவடையும்.


அன்புடன்

என்.கணேசன்


Monday, August 10, 2020

அமானுஷ்யன் நாவலின் இரண்டாம் பதிப்பு இன்று வெளியீடு!



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

இன்று அமானுஷ்யன் நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

இக்காலத்தில் பொதுவாக நாவல்கள் இரண்டாம் பதிப்பைச் சந்திப்பது அரிதாக இருக்கிறது. வாசிப்பு பழக்கம் குறைந்து வருவது, மின்னூல்களின் ஆதிக்கம் போன்ற காரணங்களை இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். மிக நீண்ட நாவல்கள் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லாத சூழலே நிலவுகிறது. ஆனால் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பில் பரம(ன்) இரகசியத்தைத் தொடர்ந்து இரண்டாம் பதிப்பு காணும் நாவலாக அமானுஷ்யன் நாவல் வெற்றி பெற்றுள்ளது. (பரம(ன்) இரகசியம் இரண்டாம் பதிப்பும் முழுவதுமாக விற்பனையாகி விட்டது இன்னொரு மகிழ்ச்சிகரமான தகவல்)

இந்த வெற்றிக்குக் காரணமான வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  

நூல்கள் வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


அன்புடன்
என்.கணேசன்

Friday, April 10, 2020

அமேசான் கிண்டிலில் “கீதை காட்டும் பாதை” வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்!


நான் இந்த வலைப்பூவில் இடைவெளிகளில் எழுதிவந்த “கீதை காட்டும் பாதை” அமேசான் கிண்டிலில் மின்னூலாக இன்று வெளியாகியுள்ளது.


ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.  

நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது. மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.


காந்தியடிகள் சொன்னது போல் கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள்.  இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் முக்கியமான அனைத்துச் சுலோகங்களையும் சொல்லி அதற்கான விளக்கங்களை என் அறிவுக்கு எட்டிய அளவில் விவரித்திருக்கிறேன். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன்.

இதை எந்திரத்தனமாய் படித்துக் கொண்டே போவதை விட சிறிது நேர வாசிப்புக்குப் பின் அது குறித்து சிந்தியுங்கள். முக்கியமாக படிப்பினூடே உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிற  சிந்தனைகள், மாற்றி யோசிக்கத் தூண்டும் மெய்ஞான உண்மைகள், ஆமாயில்ல என்று பிரமிக்க வைக்கும் பொறி தட்டும் சத்தியங்கள் படிக்க நேர்ந்தால் கண்களை மூடிக் கொண்டு மனதில் சிறிது நேரமாவது அதை ஊறப்போடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இந்த நூல் உங்களுக்குப் பயன்படுவது அந்த வகையிலேயே முழுமையாக இருக்கும். பின் மறுபடி தொடருங்கள்

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீதை புதுப்புது ஆழங்களை உணர்த்திய வண்ணம் இருப்பதை அடியேன் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நமது ஞானமும், பக்குவமும், விரிவடைய விரிவடைய பகவத் கீதை புதுப்புது அர்த்தங்களுடன் மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதனால் இது ஒரு முறை படித்து விட்டு மூடிவைத்து விடக்கூடிய நூல் அல்ல.
               
சந்தேகமும், குழப்பமும், துக்கமும் நிரம்பியிருந்த அர்ஜுனன் இந்த பகவத்கீதையைக் கேட்டு முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும் பெற்றான். அதே போல வாழ்க்கையில் எந்த நேரத்தில் குழப்பமும், சந்தேகமும், துக்கமும் நம்மை ஆட்கொண்டாலும் தெளிவுக்கும், நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் நாம் ஒவ்வொரு முறையும் இந்தப் பகவத் கீதையை நாடுவோமாக! அந்த நேரங்களில் முழு கீதையையும் மறுபடி நாம் படிக்க வேண்டுமென்பதில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக் கொண்டு ஏதோ ஒருசில பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம் அப்போதைய நிலைமைக்கான உபதேசம் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும் என்பதையும், இறைவனால் வழிநடத்தப்படுவோம் என்பதையும் நான் என்  சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எந்தவொரு உபதேசத்தின் நோக்கமும் பயனும் ஆகும். மகத்தானதொரு புனிதநூலின் மெய்ஞான உண்மைகளை எனக்குப் புரிந்த அளவு நானும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த  நூல்  படிப்பவர்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்களைச் சிறிதேனும் ஏற்படுத்தினால் எழுதிய பயன் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சி அடைவேன்.

நூலை அமேசானில் வாங்கிப் படிக்க லிங்க் -

அன்புடன்

என்.கணேசன்