சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 1, 2012

அட ஆமாயில்ல! – 6



கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும். 
              -           போப்


எந்த மனிதனும் தவறு செய்யக் கூடும். ஆனால் முட்டாளைத் தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான்.
                                         - சிஸரோ


செல்வத்தை வீட்டுக்குள் அனுமதிக்கலாம். ஆனால் இதயத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
-         கோல்டன்


உண்மையான அழகின் அளவுகோல் எதுவென்றால் ஆராய ஆராய அந்த அழகு கூடிக் கொண்டிருக்க வேண்டும். போலியாக இருந்தால் அழகு குறைந்து கொண்டே இருக்கும்.
-           கிரெவில்லி

உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது அறிவு வெளியே போய் விடும்.
                                         - எம்.ஹென்றி

சொற்கள் சுருங்கினால் பயன் வீணாவதில்லை.
-           ஷேக்ஸ்பியர்   

உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள்.
-         ஃபெனிலன்
         

தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
-         போப்

நாம் விரும்புவதையெல்லாம் பெற முடியாததால், நாம் பெற முடிந்ததில் திருப்தி கொள்வோம்
                               - ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
        

நடக்க முடியாதவர்கள் குதிரைகள் மீதேறிச் செல்வது போல சொற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் பலவீனமாக இருந்தால் அப்போது தான் காரசாரமாய் பேசுவார்கள்.
-         சிஸரோ   

சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள். ஏனென்றால் அதற்கு இன்று ஒரு நாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.
-         குரோக்வில்

எது நடந்தாலும் நான் எப்போதும் திருப்தியாக இருக்கிறேன். ஏனெனில் நான் தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தேர்ந்தெடுப்பது மேலானது என்பதை நான் அறிவேன்.
-         எபிக்டிடஸ்

தொகுப்பு: என்.கணேசன்
          

8 comments:

  1. நல்ல பொன்மொழிகள்.

    ReplyDelete
  2. நல்ல பழமொழிகள்!

    ReplyDelete
  3. அருமையான சிந்தனைகள்.

    நல்லதொரு பகிர்வு நண்பரே.

    ReplyDelete
  4. நல்ல கருத்துள்ள பொன்மொழிகள்...

    ReplyDelete
  5. “முடிவைவிட முறையே முக்கியம்!” -- மாகாத்மா காந்தி.
    http://teachersalem.blogspot.in/2012/10/blog-post.html#more

    ReplyDelete
  6. sir, today is thursday. Paraman ragasiyam engenga sir...


    Sakthi
    Tiruppur

    ReplyDelete