சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 24, 2019

என் புதிய நாவல் ”விதி எழுதும் விரல்கள்” இன்று வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

இன்று அமேசான் கிண்டிலில் என் புதிய நாவல் “விதி எழுதும் விரல்கள்” வெளியாகியுள்ளது. இது ஒரு த்ரில்லர் நாவல்.


திருடனிடமிருந்து திருடுவதில் தப்பில்லை என்ற சித்தாந்தமுடைய ஒரு இளைஞன், தவறாகச் சொத்து சேர்த்திருக்கும் ஒரு முன்னால் மந்திரியின் மகனிடமிருந்து, 3400 கோடி ரூபாய் சொத்துக்களை அதிசாமர்த்தியமாகத் தன்னுடையதாக்கிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்கப் பலர் நியமிக்கப்பட்டு அவர்கள் அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவும் செய்கிறார்கள்.  அங்கிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் தனி மனிதனாய் அவன் சமாளிக்கும் தந்திரங்களை சூழ்ச்சி, குடும்பம், பாசம், காதல், தேசபக்தி முதலான வலைகளால் பின்னி சுவாரசியமாகச் சொல்கிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை அடுத்தது என்ன என்ற ஆர்வமூட்டி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் இந்த நாவல் படித்து முடித்த பின்னும் வாசகர் நினைவில் நிற்கும். 


நாவல் வாங்கிப்படிக்க லிங்க் - விதி எழுதும் விரல்கள்

முதல் மூன்று அத்தியாயங்களை இந்த லிங்கில் இருக்கும் அட்டைப் படத்தை க்ளிக் செய்து இலவசமாக நீங்கள் படிக்கலாம். 

அமேசான் கிண்டிலில் தமிழ் நூல்கள் அச்சில் வெளியிடுவதில்லை என்பதால் மின்னூலாக மட்டுமே இப்போதைக்கு நீங்கள் படிக்க முடியும். 

இந்த நாவலை வாங்கிப் படித்து உங்கள் கருத்துக்களை அமேசான் தளத்திலேயே ரிவ்யூ பகுதியில் தெரிவித்தால் புதிய வாசகர்களுக்கு உதவியாக இருக்கும், கருத்துகள் தெரிவித்தும் நாவல் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்குத் தெரிவித்தும் ஆதரவு தரும்படி வாசக அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அச்சிலும் இந்த நாவல் வெளியாகி விட்டது.



இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

என்.கணேசன்

10 comments:

  1. ஒரே மூச்சில் படித்து விட்டேன்.நல்ல சுவாரசியமான நாவல்.முடிவு இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.அருமை.நன்றி.
    -சரவணகுமார்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  3. not available for international users?

    ReplyDelete
  4. Paid the amount through my desktop....but unable to read...what to do?

    ReplyDelete
  5. Congratulations sir. I will wait for the hard copy. Thank you.

    ReplyDelete
  6. விக்னேஷ்November 14, 2019 at 3:10 PM

    கிண்டிலில் வாங்கி இரண்டரை மணி நேரத்தில் விதி எழுதும் விரல்கள் படித்து முடித்தேன். பிரமாதமான த்ரில்லர். முதல் வரியிலிருந்து கடைசி வரை ஜெட் வேகத்தில் போகிறது. கீழே வைக்க முடியவில்லை. இதை பிரபல நடிகர் யாரையாவது வைத்து சினிமா எடுக்கலாம். கண்டிப்பாக வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Sir, this book not available for 'Kindle for PC'. Please make available for 'Kindle for PC', so the people reading kindle in PC like me enjoy your novel. Thank you.

    ReplyDelete
  8. Sir is hard copy available for this book?

    ReplyDelete
    Replies
    1. Printed book will be published in January 2020 alongwith illuminati novel

      Delete