சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 20, 2017

இருவேறு உலகம் – 39



றுநாள் க்ரிஷ் கல்லூரிக்குப் போகவில்லை. அவள் முகத்தின் வலியைப் பார்க்கும் தெம்பை அவன் பெற்று விடவில்லை. திரும்பத் திரும்பப் பயிற்சிகள் மனதில் எடுத்துக் கொண்டு, சொல்லப் போனால் மனம் மரத்துப் போகும்படி செய்து கொண்டு, இரண்டு நாள் கழித்து தான் அவன் கல்லூரிக்கே போனான்.  ஒவ்வொரு நாளும் முதல் முறை சந்திக்கும் போது எப்போதுமே இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொள்ளும். எத்தனையோ தகவல்கள் பரிமாறிக் கொள்ளும். சில வினாடிகள் கழிந்த பிறகு தான் மெல்ல விடுபடும். ஆனால் அன்று கல்லூரியில் அவளைப் பார்த்த போது அவன் மேலோட்டமாகவே பார்த்தான். இரண்டு நாட்கள் முன்பாவது ஆராய்ச்சியில் அவன் தன்னை மறந்து போனதாக அவள் நினைத்திருந்தாள். இன்று அதை நினைக்கவும் அவளுக்கு வழியில்லை. திகைப்புடன் ஒன்றும் புரியாமல் அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையை படிக்காதது போல அவன் நகர்ந்தான்.  பிறகு அவன் பேசிய போது அவள் இறுக்கமான முகத்துடன் பதில் அளித்தாள். அவன் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இயல்பாகவே இருந்தான். அவள் வலியுடன் ‘என்ன ஆயிற்று உனக்கு?என்பது போல அவனைப் பார்த்த போது உள்ளே அவன் பெரும் சித்திரவதையை அனுபவித்தான். அந்தப் பார்வைக்குப் பதில் சொல்லாமல் இருப்பதை விட செத்தே போகலாம் என்று கூட அவனுக்குத் தோன்றியது. ஆனால் முகத்தை மிக இயல்பாக வைத்துக் கொண்டு மற்ற எல்லோரையும் போல் தான் அவளும் என்பது போல் நடந்து கொண்டான்.

வீட்டிற்கு வந்த பின் பல முறை அவள் படத்தைப் பார்த்து “என்னை மன்னிச்சுடு ஹரிணி. என்னை மறந்துட்டு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு ஹரிணிஎன்று அழுதிருக்கிறான். சில நாட்கள் இரவு அவனால் உறங்க முடியவில்லை. அவன் சரியாகப் பேசவில்லை என்றானவுடன் ஹரிணி சற்று அதிகமாக மணீஷிடம் பேசினாள். மணீஷ் அவளுக்கு நல்ல கணவனாவான் என்று கூட க்ரிஷுக்குத் தோன்றியது. மணீஷுக்கு அவள் மீது அதிக ஈர்ப்பு இருந்ததை க்ரிஷ் கவனித்திருக்கிறான். ஆனால் இப்போதும் ஹரிணி எத்தனை அதிகம் பேசினாலும் அவனிடம் நண்பன் என்ற எல்லையை என்றுமே தாண்டத் தயாராக இருக்கவில்லை என்பது தூரத்திலிருந்து கவனிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. அவன் மனம் மேலும் ரணமானது. கடைசியில் ‘எல்லா மனக்காயங்களையும் காலம் ஆற்றி வைக்கும்என்ற ஒரு நம்பிக்கையில் தான் அவன் சிறிதாவது ஆறுதல் அடைந்தான்.

அதிகமாகக் கடவுளைக் கும்பிடாதவன் தினமும் “கடவுளே என் ஹரிணிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுஎன்று மானசீகமாக வேண்டுவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை.....

வேற்றுக்கிரகவாசி அவனிடம் அடுத்த அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை தொடர்பு கொள்ளவில்லை. அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பு க்ரிஷின் லாப்டாப்பில் கேள்வி மின்னியது. “முடிவெடுத்து விட்டாயா?

அவன் மனப்போராட்டத்தையும், முடிவையும் கண்டிப்பாக வேற்றுக்கிரகவாசியால் அறிய முடிந்திருக்கும். ஆனாலும் கேட்கிறான் என்று நினைத்தவனாக க்ரிஷ் பதிலளித்தான். “முடிவெடுத்து விட்டேன். சம்மதம்

“மகிழ்ச்சி. அமாவாசை அன்று அதே மலையில் சந்திப்போம்என்ற பதில் மின்னியது.

அதோடு மாஸ்டருக்குக் கிடைத்திருந்த நிகழ்வலைகள் முடிந்து போயின. எதிரி அதற்கு மேல் இருந்த நிகழ்வலைகளை அழித்து விட்டிருந்தான். வேற்றுக்கிரகவாசி என்ற போர்வையில் எதிரி வந்ததால் தான் க்ரிஷ் எதிரி வலையில் விழுந்திருக்கிறான் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. எந்தப் புது அறிவையும் பேரார்வத்துடன் வரவேற்கும் க்ரிஷுக்கு ஒரு ஏலியனுடன் நட்பை விடக் கவர்ச்சிகரமான தூண்டில் வேறு இருக்க முடியாது. பூமி அழிவு, நல்லவர்கள் பொறுப்பு என்று கூடுதல் செண்டிமெண்டுகளையும் சேர்த்து எதிரி தன் வலையில் இழுத்து விட்டான். இனி எதிரி என்ன செய்வான்?.... பறவை வடிவம் எடுப்பது, வழக்கமான முறைகளில் அல்லாமல் கம்ப்யூட்டரில் தொடர்பு கொள்வது, பழைய தடய அலைகளை அழிப்பது மட்டும் அல்லாமல் இனி என்ன வித்தைகள் எல்லாம் எதிரி வைத்திருக்கிறானோ?

திடீர் என்று தன்னுடைய ஜாதகத்தை யாரோ ஒரு முதியவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி ஒன்று மாஸ்டரின் மனத்திரையில் வந்து போனது. மாஸ்டர் திகைத்தார்...  அந்த முதியவரை இதற்கு முன் எப்போதும் பார்த்த நினைவில்லை..... யாரந்த ஆள்? ஏன் என் ஜாதகத்தைப் பார்க்கிறார்?


ஜாதக பலன்களை நான் உங்க முதலாளி கிட்ட நேரடியாய் தான் சொல்வேன். சம்மதமா?என்று கேட்ட சதாசிவ நம்பூதிரியிடம் மனோகரால் உடனே சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. “என் முதலாளியைக் கேட்டுச் சொல்கிறேன்என்று சொல்லி விட்டு வெளியே வந்து மர்ம மனிதனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னான்.

விலையைக் கூட்டிப் பாரேன்

“கோடி கொடுத்தாலும் அந்த ஆள் சொன்னதில் இருந்து மாறும் ரகம் அல்ல. இப்பவே பணத்துக்காக பார்க்க அந்த ஆள் ஒத்துக்கலை. விசேஷ விசித்திர ஜாதகம்னு படம் போட்டு பின் தான் ஒத்துக்க வெச்சிருக்கேன்

மறுமுனை பெருமூச்சு விட்டது. “நீ படம் போடவில்லை. உண்மையாகவே அந்த ரெண்டு ஜாதகமும் விசேஷ விசித்திர ஜாதகம் தான். அது சரி, நீ என்ன நினைக்கிறாய்? அந்த ஆள் என்னை நேரில் பார்த்து விட்டால் பின்னால் நமக்குப் பிரச்னை வர வாய்ப்பிருக்கா?

“அப்படி வர வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். அந்த ஆள் திங்கக்கிழமை சிவன் கோயிலுக்கும், சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கும் போறதைத் தவிர வேறெங்கேயும், யார் வீட்டுக்கும் போகிற ஆள் அல்ல. கோயில்லயும் யார் கிட்டயும் பேச மாட்டார். வீட்டுலயும் அவர் பேசறது குறைவு. ஆன்மீக புஸ்தகம் படிச்சுட்டு காலத்தை ஓட்டறவர்....

உன் முதலாளின்னு வேற யாரையாவது அனுப்பினா?

“என் முதலாளி ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சவர்னு அவர் கிட்ட சொல்லியிருக்கேன்... அதனால ஜோதிடத்துல நல்ல ஞானம் இருக்கற ஆளை அனுப்பறதானா அனுப்பலாம். ஏன்னா அவர் ஜாதக சம்பந்தமான நுணுக்கங்கள் எதாவது பேசினா பதிலுக்கு சரியா  சொல்லத் தெரிஞ்ச ஆளா இருக்கிறது நல்லது....

ஒரு நிமிடம் யோசித்து விட்டு மறுமுனை சொன்னது. “வேண்டாம். நானே போறேன்....

மனோகர் மறுபடி சதாசிவ நம்பூதிரியிடம் வந்து பவ்யமாக நின்றான். “என் முதலாளி சரின்னு சொல்லிட்டார்...

சரி போய்ட்டு வியாழக்கிழமை சாயங்காலம் அவரைக் கூட்டிகிட்டு வாங்கோ

பணிவுடனே தலையாட்டி விட்டு இருபதாயிரம் ரூபாயை அவன் அவரிடம் நீட்டினான். அவர் அதை வாங்கவில்லை. “என் பிள்ளை கிட்டயே குடுத்துட்டுப் போங்கோ.என்றார்.

கீழே வந்து சங்கர நம்பூதியிரிடம் அந்த ஆள் அந்தப் பணத்தைத் தந்தான். “உங்கப்பா ஒத்துகிட்டார். இந்தப் பணத்தை உங்க கிட்டயே தரச் சொன்னார்.....

சங்கர நம்பூதிரி திகைப்புடன் பணத்தை வாங்கிக் கொண்டார். ‘இந்த ஆள் நிஜமாவே கைதேர்ந்த வியாபாரி தான். அவரையே ஒத்துக்க வெச்சுட்டானே!’


செந்தில்நாதன் இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் அந்த மலைப்பாதைக்குப் பிரிகிற தெருமுனையில் இருட்டில் நின்று கொண்டிருந்தார். மலையடிவாரத்தில் இப்போதும் அவர்கள் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இந்த இடத்தில் சில மணி நேரங்கள் தடுப்புகள் வைத்து விலக்கிக் கொண்ட மனிதர்கள் பற்றி ஏதாவது புதிய தகவல் கிடைக்கும் வரை அவரால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

அந்த வழியாகப் போகிறவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அவ்வப்போது தெரு விளக்கின் வெளிச்சத்துக்கு வந்து அவர்கள் தினமும் இந்த நேரத்தில் இந்த வழியாகப் போகிறவர்களா என்று கேட்டு, ஆமென்றால் அமாவாசை இரவு அன்று இங்கே ஏதாவது வித்தியாசமாகப் பார்த்தார்களா என்று விசாரித்தார். பழைய பதில்களே கிடைத்தன.

திடீரென்று வேறு ஒரு யோசனை வந்தவராய் அருகே இருந்த தொழிற்சாலைக்கே சென்று லேட் நைட் ஷிஃப்டிலிருந்து அந்த மலைப்பாதைப் பிரிவுப் பகுதியைத் தாண்டிச் செல்பவர்கள், லேட் நைட் ஷிஃப்டுக்கு அந்த வழியாக தொழிற்சாலைக்கு வருபவர்கள் யாரெல்லாம் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர்களிடமும் அந்தப் பகுதியில் அமாவாசை இரவு ஏதாவது வித்தியாசமாய் பார்த்தார்களா என்று கேட்டார்.

அங்கும் பழைய பதில்களே கிடைத்தன என்றாலும் ஒரே ஒருவன் மட்டும் வித்தியாசமான தகவல் சொன்னான். “நான் இந்த லேட் நைட் ஷிஃப்டுக்கு வந்திட்டிருந்தப்ப வண்டிய ஒரு இடத்துல நிறுத்திட்டு தம்மடிச்சுட்டுப் போலாம்னு நினைச்சு பைக்க நிறுத்தினப்ப ஒருத்தன் வேகமா கார்ல க்ராஸ் பண்ணிட்டுப் போனான்.  என்ன இந்த வேகத்துல போறானேன்னு நினைச்சா ஒரு ரெண்டு நிமிஷத்துல இன்னொரு  காரும் அப்படியே வேகமா க்ராஸ் பண்ணிப் போச்சு...

“அந்த ரெண்டு காரையும் விவரிக்க முடியுமா?

“அத அவ்வளவு சரியா கவனிக்கல.....

அந்தக் கார்ல இருந்தவங்க பத்தி ஏதாவது சொல்ல முடியுமா?

“முதல் கார்ல ஓட்டிகிட்டுப் போனவன் மட்டும் தான் இருந்தான். இரண்டாவது கார்ல ரெண்டு பேர் இருந்தாங்க. ரெண்டு கார்ல போனவங்க முகமும் சரியா தெரியல. ஆனா டிரைவருக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்தவர் முடி வெள்ளையா இருந்துச்சு. இந்தியன் சினிமால கமல் வெச்சிருந்தாரே. அந்த மாதிரி வெள்ளைமுடி...

“அந்த ஆளை நேர்ல பார்த்தா அடையாளம் காமிக்க முடியுமா?

“இல்லை சார். முடி தான் பளிச்சுன்னு தெரிஞ்சுதே தவிர முகம் அந்த இருட்டுல சரியாத் தெரியல....

செந்தில்நாதன் அந்த ஆளையே கூர்ந்து பார்த்துக் கேட்டார். “நீங்க இன்னைக்கு அந்த வழியா இங்கே வந்த மாதிரி தெரியலையே...

“மூணு நாளா நான் என் சகலை வீட்ல இருந்து வேலைக்கு வர்றேன் சார். அதனால அந்தப் பக்கமா வராமல் இந்தப்பக்கமா வந்துட்டுருக்கேன்....

இந்தியன் தாத்தா மாதிரி வெள்ளைமுடி இருக்கிற ஆட்கள் யாராவது தனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று அவர் யோசித்துப் பார்த்தார். சடாரென்று நினைவுக்கு வந்தது சகுனி தான். மந்திரி மாணிக்கத்தின் மாமன்!...

(தொடரும்) 
என்.கணேசன்
(ஜுலை 21 முதல் 31 வரை சென்னை, இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 159 ல் என் நூல்கள் சிறப்புத் தள்ளுபடியுடன் கிடைக்கும். - என்.கணேசன்)

15 comments:

  1. சுஜாதாJuly 20, 2017 at 6:27 PM

    புதிருக்கு மேல் புதிர். சுவாரசியமாய் போகிறது நாவல். க்ரிஷ் என்ன சார் ஆவான்? அவனை சந்தித்தது ஏலியனா ஏமாற்றுக்காரனா?

    ReplyDelete
  2. The way you take care of every aspect and every character of the novel is really amazing sir. Hats off!

    ReplyDelete
  3. “மகிழ்ச்சி. அமாவாசை அன்று அதே மலையில் சந்திப்போம்”என்ற பதில் மின்னியது.
    அதோடு மாஸ்டருக்குக் கிடைத்திருந்த நிகழ்வலைகள் முடிந்து போயின. எதிரி அதற்கு மேல் இருந்த நிகழ்வலைகளை அழித்து விட்டிருந்தான்.....ithu part 39....

    But....part 34...la....சங்கரமணியும், வாடகைக் கொலையாளியும் எதிர்பாராத விதமாக இதில் பங்கெடுத்தது வேண்டுமானால் விதிவசமாக இருக்கலாம். ஆனால் அதையும் எதிரி தன் மதியால் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டதை மாஸ்டரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.......ippadi solliyirukingale....?

    ReplyDelete
    Replies
    1. க்ரிஷின் நினைவலைகளில் படித்தது தான் முடிந்து போயின. மாஸ்டர் சங்கரமணி, வாடகைக் கொலையாளி பற்றி அறிந்தது சங்கரமணி மற்றும் மணீஷ் நினைவலைகள் மூலமாக அவர்களின் சந்திப்பின் போது அறிந்தது.

      Delete
  4. Part 15..la....''மாயமாகும் தன்மை பற்றி நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வேறு அவன் படித்திருக்கிறானே...'' nu vanthuchi..!

    but... ''Mayamakum Thanmai''... Pathi... Ithula varave illai..sir

    ReplyDelete
    Replies
    1. க்ரிஷ் மாயமாகும் தன்மை பற்றி ஆய்வுக்கட்டுரைகள் படித்து இருந்தான் என்பதற்கு முரணான எந்தக் கருத்தும் இந்த அத்தியாயத்தில் இல்லையே.

      Delete
  5. 1.Ohoo...ok...ok....''மணீஷ் நினைவலைகள் மூலமாக அவர்களின் சந்திப்பின் போது அறிந்தது''.....itha nan maranthutten....
    2.senthilnathan and manish...meeting...la.....மாயமாகும் தன்மை....pathi azhuthamaha solliyirunthunga..... But,,,athu anumanam thane....ok,....ok

    ReplyDelete
  6. super romba interesting ah pothu suspense thangamudiyala andha marma manithan thannoda jadhagathaium krish oda jadhagathaium thana paka solli kuduthu anupunan ana master avaroda jadhagatha pakramathiri therinjatha solli irukingale ithula ethana twist irukutha

    ReplyDelete
  7. is your books avaialable in Coimbatore book fair at discount?

    ReplyDelete
    Replies
    1. This time Publisher has not come to Coimbatore book festival because of chennai book fair at same dates. You may try Vijaya pathipagam book stall.

      Delete
    2. Okay sir. thank you.

      Delete
  8. நாவல் உச்சஸ்தாயில்... அருமை சார்..!!!
    சூக்குமத்துடன்... சூட்சமத்தை.... கலந்து..... காவியமாய் படைத்து எண்ண அலைகளில் கரைய வைத்து விட்டீர்கள் ...சார்....
    a great value wisdom path to real divine path…!!

    ReplyDelete
  9. Good novel with spiritual ethics.

    ReplyDelete
  10. சக்தி,அலைவரிசை,அதிர்வுகள் .......எளிய எழுத்து நடையில்,அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் நாவலை சுவராஸ்யமாக கொண்டு போகிறீர்கள்....
    நன்றி.....வாழ்த்துகள்...

    ReplyDelete