பாவ புண்ணியக் கணக்குகள் மறந்து போய், சுயநலமும் அலட்சியமுமே பிரதானமாய் மாறி விட்ட இந்தக் காலத்தில் துக்கமும், நிம்மதி இன்மையும் தான் எல்லா இடங்களிலும் கோலோச்சுகிறது. அதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் வள்ளலார் போல் தங்களையே கேட்டுக் கொண்டு, திருத்தியும் கொண்டால் ஒழிய நிம்மதிக்கு வாய்ப்பில்லை.
இதோ வள்ளலாரின் பாவப் பட்டியல் -
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
வேலையிட்டுக் கூலிலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
கோள்சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனோ!
தவஞ்செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ!'
- என்.கணேசன்
Very nice Ganeshan sir. I am regular reader of all your posts. I gives immense confidence and act as a booster to lead a life comfortable.
ReplyDeleteவணக்கம் நண்பர். வள்ளலார் கூறும் பாவப் பட்டியலை மிக அருமையாக பட்டியலிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் இதில் குறிப்பிட்டுள்ளவைகளை புறந்தள்ளி வாழ்வோமானால் அதுவே சிறந்த வாழ்வாக அமையும். நன்றி நண்பர். - கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி, துபாய் [பெரம்பலூர்]
ReplyDeleteiin tamilnadu thirukkural is popular
ReplyDeletebut VALLALARS SAYINGS have not reached many..
let all of us take steps to probagate...