என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, August 1, 2016

இன்றைய சிந்தனை - 1

"போராட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதங்களுள் ஒன்று என்று நான் திடமாகக் கூற முடியும். அந்தப் போராட்டம் நம்மைப் பிரயோஜனமான மனிதர்களாக, உறுதியும் பொறுமையும் நிறைந்தவர்களாக மாற்றி விடுகிறது. என்னுடைய திடமான நம்பிக்கை உலகில் கேடுகளே இல்லை என்ற எண்ணத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால்

1)உலகில் நல்லவையே பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன என்ற சந்தோஷமான நம்பிக்கையையும்,

2)நல்லவையே உலகில் நிலவும் பொருட்டு அவற்றுடன் ஒத்துழைக்க மனமார்ந்த முயற்சி அவசியம் என்ற கொள்கையையும்

ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரிடத்திலும் மிகச் சிறந்தவற்றையே காண்பதற்கு கடவுள் எனக்கு அளித்துள்ள சக்தியைப் பெருக்கிக் கொள்ள நான் முயற்சிக்கிறேன். அந்தச் சிறந்த அம்சங்களை என்னில் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் நான் முயலுகிறேன்.


-        -  குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று மிகப்பெரிய குறைபாடுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்தும் வெற்றி கண்ட ஹெலன் கெல்லர் கூறியது.1 comment:

  1. ஹெலன் கெல்லரின் அருமையான வரிகள்...

    ReplyDelete