வணக்கம் வாசக நண்பர்களே!
கதோபநிஷத்தில் “ஈஷா சுப்தேஷூ ஜாக்ரதி” என்ற வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தமானது. உறங்கிக் கொண்டிருப்பவரிடத்திலும்
விழித்திருக்கும் ஈசன் (இறைசக்தி) என்று
அதற்குப் பொருள்.
மூன்றரை
வருடங்களுக்கு முன்பு (ஜூலை 2012) விசேஷ மானஸ லிங்கம் என்ற சிவலிங்கத்தை இந்த
மூலக்கருத்தை அடிப்படையாக வைத்து தான் நான் பரம(ன்) இரகசியம் என்ற நாவலில் உருவாக்கினேன்.
நம் ஒவ்வொருவருக்குள் உறைந்திருக்கும் சக்தி வாய்ந்த விசேஷ மானஸ லிங்கத்தை அந்த
நாவல் அடையாளம் காட்டக்கூடும் என்றும் எழுதினேன். எத்தனை பேருக்கு அந்த நாவல்
விசேஷ மானஸ லிங்கத்தை அடையாளம் காட்டியது என்று நான் அறியேன். ஆனால் நாவலின்
இறுதிக்கட்டத்தில் எனக்கு அந்த விசேஷ மானஸ லிங்கம் ஆத்மார்த்தமாகவே அறிமுகமாகியது.
நான் விசேஷ மானஸ
லிங்கம் குறித்து ஏற்கெனவே முடிவு செய்திருந்த இறுதிக்காட்சி பல நாட்கள் பலவிதமாக
எழுதியும் எனக்குத் திருப்தியைத் தராத போது நாவலின் இறுதிக்காட்சி ஒரு நாள்
அதிகாலைக் கனவாய் வந்து மறைந்தது. இதை நான் நாவல் புத்தகமாக வெளி வந்த போது அதன் முன்னுரையில்
தெரிவித்துமிருக்கிறேன். பலப்பல முறைகளில் எழுதி சலித்த எனக்கு என் ஆழ்மனமே
தன்வழியில் அந்தக் காட்சியை உருவாக்கித் தந்திருக்கலாம். ஆழ்மனதின் அற்புத சக்திகள்
எழுதிய நான் அதை மறுக்கவும் முடியாது.
ஆனால் பரம(ன்)
இரகசியம் எழுதி முடித்து இரண்டு வருட காலம் ஓடி விட்ட பின்பும் விசேஷ மானஸ லிங்கம்
அந்த நாவலின் கற்பனைக் கதாபாத்திரமாக என்னை விட்டு நகர்ந்து விடவில்லை. அதை இன்றும்
சில நேரங்களில் என்னுள்ளே உணர்கிறேன். குழப்பமான நேரங்களில், மனம் சோர்ந்த
சமயங்களில், எது நல்லது என்பதை அறிந்த பிறகும் அதன் வழி போக மனம் முரண்டு
பிடிக்கும் தருணங்களில் எல்லாம் மனதை விசேஷ மானஸ லிங்கத்தில் லயிக்க விட்டு தெளிவு,
மனபலம், அமைதி ஆகியவற்றை அசாத்திய அளவில் பெற்றிருக்கிறேன்.
ஆன்மிக, ஆழ்மன
மார்க்கத்தில் கிடைக்கும் என் தனி அனுபவங்களைப் பகிர்வதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படிச்
செய்வது அந்த மார்க்கத்தில் உண்மையான
வளர்ச்சியைத் தடுத்து விளம்பரப் பாதைக்கு நம்மை மாற்றி விடும் என்ற அச்சம்
எனக்குண்டு. ஆனால் விதிவிலக்காக இந்த மகாசிவராத்திரி நாளில் என் அன்பு வாசகர்களும்,
ஈசன் அருளுக்குத் தயாரான நிலையில் இருக்கும் ஆன்மிக அன்பர்களும் நான் பெற்ற பேற்றை
பெற வேண்டும் என்ற பேராவலில் இந்த விசேஷ மானஸ லிங்கம் குறித்து எழுதுகிறேன்.
அஞ்ஞான உறக்கத்தில்
ஆழ்ந்து போயிருக்கும் நம்முள்ளே எப்போதுமே விழித்திருக்கும் அந்த ஈசனை இந்த
மகாசிவராத்திரி நாளில் உங்கள் இதய சிம்மாசனத்தில் உணருங்கள். உள்ளே அந்த மகாசக்தி
வீற்றிருக்கிறது என்ற நினைவே உங்களைத் தவறான பாதையிலிருந்து விலக்கும். எதையும் சந்திக்கவும்,
சாதிக்கவும் பெரும் வலிமையைத் தரும். அதைத் தொடர்ந்து உங்களுக்குள் உணர முடிந்தால்
பின் நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அதுவே உங்களை இயக்க ஆரம்பிக்கும். அதன்
பின் எல்லைகள் உங்களுக்கு இல்லை. தொல்லைகளும் உங்களுக்கில்லை.
விசேஷ மானஸ லிங்கம்
உங்களுக்குள் விழித்திருக்கிறது. இந்த சிவராத்திரியில் உங்களுக்குள் அதை உணர்ந்தபடி
நீங்களும் சிறிது நேரமாவது விழித்திருங்கள். ஒரு தொடர் விழிப்புணர்வு உங்களுக்குள்
தங்கி விட இது நல்ல ஆரம்பமாகட்டும்!
மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
என்.கணேசன்
Hi,
ReplyDeleteNan Rasithu paditha Paraman Ragasiyan Novalin Ezhuthapadaatha mudivai ariya verumbukiren.
neengal mamrroru mudivai ezhuthiyathagavum aanal athai vida entha mudivu siranthathu enna neenagal ninaithathagavunm padithathaga ennakum ninaivu
nennudiaya viruppam niraiveruma??
Hi,
DeleteI am waiting for your answer, if don't like to release hear, pls send by mail my id sivalk87@gmail.com
கணபதியே அந்த சிவலிங்கத்தைப் பூஜை செய்வது அல்லது அக்னி நேத்ர சித்தர் அதை கைலாசத்திற்குக் கொண்டு போய் விடுவது இரண்டில் ஒன்றை முடிவு செய்திருந்தேன். இரண்டுமே திருப்தி தரவில்லை. பின் தான் அந்தக் காட்சி, அந்த முடிவு.
DeleteThanks
Deleteகணேசன் சார்.. உண்மையிலும்... உண்மை... பரம(ன்) ரகசிய.. நாவல் தொடர்கள்.. வந்த அந்த ஒவ்வோரு.. குருவாரமும்.... குருகுலவாசம் தான்....,
ReplyDeleteபரம(ன்) ரகசியத்தோடு. பயணித்த அந்த நாட்களை... பல சமயம் அசைபோட்டு சுவைத்துக் கொள்வேன்....,
பரம(ன்) ரகசியத்தின் முடிவை சரியாக உண்ர்வோர்க்கு. பிரம்ம ஞானம் தான்...
தானாயிருக்கும் பிரமத்தின்
தன்செயல் தன்னை அறிந்தாக்கால்
வானாகி நின்று மறைபொருள்
ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ?
அருமை. நன்றி சார்.
ReplyDeleteஅன்பு ஸ்ரீ கணேசன் அவர்களுக்கு,
ReplyDeleteதங்களுடைய பரம(ன்) ரகசியம் "நாவல்" என்றே எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொரு வியாழனன்றும் பரமன் ரகசியம் படிக்கும் பொழுது ஆழ்ந்த தியானத்தில் அனுபவிக்கும் உணர்வை உணர முடிந்தது. இந்த படைப்பு ஏதோ முக்கிய நோக்கத்திற்காகவே உங்கள் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன் (விசேஷ மானஸ லிங்கத்தை போல). இந்த இறுதிகாட்சியை தவிர வேறு எந்த விதமான இறுதி காட்சியும் பரமன் ரகசியத்தை முழுமை பெற செய்திருக்காது என்பது என்னுடைய கருத்து.
அன்புடன்,
சரவணகுமார்.பா
தங்களின் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும், தங்களுடைய வழிகாட்டுதலுக்கும் வாசகர் குழுவின் சார்பாக எங்களது மேலான நன்றியை தெரிவித்துகொள்கிறோம். தங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Fans Group
https://www.facebook.com/groups/nganeshanfans/
மிக அருமை கணேசன். உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை. தொடரட்டும் உங்கள் நற்பணி!
ReplyDeleteSuperb
ReplyDeleteஆன்மீக அனுபவங்களை எல்லோருடன் பகிர்ந்து கொள்ளுவதில்லை.அது விளம்பரங்களுக்கு அடிகோடிடும். சூப்பர். (தெளிவான மனநிலை)
ReplyDelete