91.
தீய பழக்கம் முதலில் யாத்திரிகனாய் வந்து, விருந்தினனாய் தங்கி பின் முடிவில்
அதுவே ஒருவனது எஜமானாகியும் விடுகிறது.
92.
நல்லவன் சத்திரத்தில் தங்கினால் கெடுவதுமில்லை. தீயவன் ஆலயத்தில் தங்கினால்
திருந்தி விடுவதுமில்லை.
93.
நெருப்பிலிருந்து தப்பித்து வந்தவன் வெயிலில் வாடுவதில்லை.
94.
காலிப் பாத்திரமே அதிகமான் ஓசையை உண்டாக்கும்.
95.
சொற்களை எண்ணாதே; எடை போட்டுப் பார்.
96.
கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.
97.
கோபமுள்ளவர் சோகத்தைத் தேட வேண்டியதில்லை.
98.
கழுதையை விருந்துக்கழைத்தால் அது விருந்தில் விறகு சுமக்கத் தான்.
99.
கோபத்தால் போனது சிரித்தால் வராது.
100.
கையினால் தட்டி விட வேண்டியதற்கு கத்தியை உருவுவது மடத்தனம்.
தொகுப்பு:
என்.கணேசன்
Please explain 99th one.
ReplyDeleteகோபத்தினால் பேசியோ செயல்பட்டோ இழந்ததை, கோபம் போய் சிரித்துத் திரும்பப் பெறமுடியாது. எனவே கோபம் வரும் போது மனிதன் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
DeleteSir please explain 95th one
ReplyDeleteஎவ்வளவு பேசினோம் என்பது முக்கியமல்ல, பேசிய ஒவ்வொரு சொல்லும் தரமானதாகவும், பொருள் பொதிந்ததாகவும் இருந்ததா என்பதே முக்கியம். வெற்று வார்த்தைகளாக அவை இருந்து விடக்கூடாது.
Delete