131. மனிதன் தனக்குத் தெரிந்ததை மட்டும்
பேசுவானானால் உலகில் பூரண அமைதி நிலவும்.
132. கப்பலின் சிறுதுளை கப்பலையே சாய்த்து
விடும்.
133. தங்கத்தை விட்டெறிபவன் நாளை செம்பைப்
பொறுக்குவான்.
134. ஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்க
சிறந்த வழி, அது ரகசியமான விஷயம் என்பதை ரகசியமாக வைத்திருப்பது தான்.
135. தவறான லாபங்கள் உண்மையில் நஷ்டங்கள்.
136. தன்னை எதிரி வென்று விடுவானோ என்று
அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான்.
137. நாயிடம் கடன்பட்டால் அதை ஐயா
என்றழைக்க வேண்டும்.
138. நல்லவர்கள் இறைவனை இழந்துவிடக்கூடாது
என்று அஞ்சுகிறார்கள். தீயவர்கள் இறைவனைக் கண்டு கொள்ளக்கூடாதே என்று என்று
அஞ்சுகிறார்கள்.
139. ஒருவரிடம் காட்டும் அன்பு அவர்கள்
குறையை மறைக்கும் போர்வையாக இருந்து விடக்கூடாது.
140. சொர்க்கத்தின் வாயில்கள் அரசர்களது
அரண்மனை வாயில்கள் போல உயரமாய் இருப்பதில்லை. அங்கு நுழைபவர் குனிந்து பணிந்து
செல்ல வேண்டியிருக்கிறது.
தொகுப்பு: என்.கணேசன்
Please explain about 139
ReplyDeleteஅன்பு மற்றவர் குறையை மறைக்கும் அளவு கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது.
Delete