என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, February 29, 2016

உலகப் பழமொழிகள் – 11101. உண்மை என்ற பாணத்தை விடும் முன் அதன் முனையைத் தேனில் தோய்த்துக் கொள்.


102. உன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாக நினைக்க வேண்டுமென்று நீ விரும்பினால் மௌனமாயிரு.


103. பூமி தழலாய் கொதித்தாலும் நாம் அதன் மீது தான் நடக்க வேண்டி இருக்கிறது.


104. அவமரியாதைகளையும் மாத்திரைகளையும் சுவைத்து ருசி பார்த்துக் கொண்டிருக்காமல் அப்படியே முழுங்கி விட வேண்டும்.


105. பிச்சைக்காரனுக்கு நீ எதுவும் போடாவிட்டாலும் பரவாயில்லை. அவன் பையைக் கிழிக்க வேண்டாம்.


106. மனிதர்கள் மலை தடுக்கி விழுவதில்லை. கல் தடுக்கியே விழுகிறார்கள்.


107. அதிசாமர்த்தியம் வேண்டாம். உன்னை விட அதிக சாமர்த்தியசாலிகள் சிறையில் இருக்கிறார்கள்.


108. தூக்க முடியாத கல்லை உருட்டு.


109. நல்லது போனால் தெரியும். கெட்டது வந்தால் தெரியும்.


110. அறிவின்மை கேவலம். அதை விடக் கேவலம் அறிய மனமில்லாமை.-         தொகுப்பு: என்.கணேசன்4 comments:

  1. Sir, I have read your Nee Nan Thamirabharani novel two days back. It is superb novel. Since last two days I am still thinking about the story and its characters, it affects me a lot. Thank you.

    ReplyDelete
  2. அருமையாக உள்ளது!

    ReplyDelete