பிழைக்கத் தெரியாதவன்: நாம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் அயோக்கியத்தனங்களைச்
செய்து பிழைக்காதவன்.
தலைக்கனம் பிடித்தவன்: ஒருவன் நம்மை விட
அதிக புத்திசாலியாக இருந்து அதை நம்மிடமே
வெளிப்படுத்துபவன்.
நண்பன்: நமக்குத் தேவைப்படும் உதவிகளை
எல்லாக் காலங்களிலும் செய்து கொண்டே இருப்பவன்.
எதிரி: அந்த உதவிகளை ஏதாவது
சந்தர்ப்பத்தில் செய்யாதவன் (அல்லது) நிறுத்துபவன்.
அறுவை: நாம் பேசி அவன் கேட்க வேண்டும்
என்று நினைக்கையில் அவன் பேசி நம்மைக் கேட்கச் செய்பவன்.
தேசபக்தி: அடுத்த வீட்டுக்காரன் மேல் வரும்
‘கொலை வெறி’ அண்டை நாட்டுக்காரன் மேல் வருமானால் அது தேசபக்தி.
தரமான பொருள்:
அமிஞ்சிக்கரையில் தயாராகும் பொருள் மீது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாய்
முத்திரை இருக்குமானால் அது தரமான பொருள்.
துன்பத்தில் இன்பம்:
நமக்குத் துன்பம் வரும் போது அடுத்தவனுக்கு இரு மடங்கு துன்பம் வருமானால் அது
துன்பத்தில் இன்பம்.
ஆத்திகவாதி: தனது
ஒவ்வொரு துன்பத்திற்கும் இறைவனைத் திட்ட முடிந்த பாக்கியசாலி.
பொறுமைசாலி: நாம்
திட்டுவதன் அர்த்தம் புரிந்து கொள்ளாததால் அமைதியாக இருப்பவன்.
என்ன நண்பர்களே
எல்லாம் சரிதானே!
-என்.கணேசன்
உண்மையிலேயே புன்னகைக்க வைத்தது , தேச பக்திக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் .
ReplyDeleteநன்றி கணேசன்
First one is 100% true....
ReplyDeleteசரியே அண்ணா. . .
ReplyDeleteawesome...awesome...
ReplyDeleteDear Thalaivaa...
ReplyDeleteI feel in some of the explanation ...en ganeshan ..touch is missing...
Even in the last sentence you had asked is it correct?
G.Ganesh
100% சரி😄😄😄
ReplyDelete