·
நித்தம் சாவாருக்கு
அழுவார் உண்டோ?
·
நில்லாத காலடி
நெடுந்தூரம் போகும்.
·
நெருப்பு சிறியதென்று
முந்தானையில் முடியலாமா?
·
பிச்சைக்காரனுக்குப்
பயந்து அடுப்பு மூட்டாமல் விடுவதா?
·
பல மரம் கண்ட தச்சன்
ஒரு மரத்தையும் வெட்ட மாட்டான்.
·
நெருப்பைக் கண்டு
மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
·
போன மாட்டைத் தேட
மாட்டான், வந்த மாட்டைக் கட்ட மாட்டான்.
·
பருத்திக்கு உழும்
முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
·
படிப்பது திருவாசகம்,
இடிப்பது சிவன் கோயில்.
·
மரத்திலிருந்து
விழுந்தவனை மாடும் மிதித்தது போல.
·
பாதி சுரைக்காய்
கறிக்கும், பாதி சுரைக்காய் விதைக்குமா?
தொகுப்பு: என்.கணேசன்
சிலவற்றிற்கு அர்த்தம் புரிகின்றது. சிலவற்றிற்கு புரிய வில்லை. இம்மொழிகளின் அர்த்தத்தையும் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்
ReplyDelete" நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
ReplyDeleteபோன மாட்டைத் தேட மாட்டான், வந்த மாட்டைக் கட்ட மாட்டான்."
Very powerful , Ganesan, thanks for bringing these, Seems your service is very useful for spiritual seekers!