என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, August 30, 2014

தினத்தந்தியில் என் புதிய தொடர் “மகாசக்தி மனிதர்கள்”


அன்பு வாசகர்களே, 

வணக்கம்.

மனித கற்பனைகளுக்கெட்டாத அபூர்வ சக்திகள் படைத்தவர்கள் யோகிகள். அவர்களுடைய சக்திகளை விஞ்ஞானத்தாலும் விளக்கி விட முடியாது.

திருமூலரும், பதஞ்சலியும் யோகிகள் அஷ்டமகாசக்திகள் பெற முடிந்தவர்கள் என்று அக்காலத்திலேயே பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். அக்காலத்தில் அப்படி மகாசக்திகள் பெற்ற மனிதர்கள் அதிகம் இருந்தார்கள். காலப் போக்கில் அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வந்து அதற்கு பதிலாக அந்த யோகிகளின் போர்வையில் போலிகள் நிறைய வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்.


போலிகள் அதிகம் என்பதாலேயே அந்த மகாசக்திகளையும், உண்மையான மகாசக்தி மனிதர்களையும் கற்பனை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. அப்படிப்பட்ட மகாசக்தி மனிதர்கள் குறித்து ஆதாரபூர்வமான சுவாரசியமான தகவல்களை விவரிக்கும் விதமாக நான் எழுதும் ”மகாசக்தி மனிதர்கள்” என்ற தொடர் தினத்தந்தியில் அடுத்த வாரம் 5.9.2014 முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வெளியாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்குத் தெரிந்த வரை தமிழில் இது போன்றதொரு தொடர் இது வரை வந்ததில்லை. இது போன்ற விஷயங்களில் ஆர்வமுள்ள வாசக அன்பர்கள் இந்த வித்தியாசமான தொடரைத் தொடர்ந்து படித்து மகிழலாம்.

அன்புடன்

என்.கணேசன்


12 comments:

 1. தொடரைத் தாங்கள் இங்கும் பதிவு செய்வீர்களா..? வெளிநாட்டில் இருப்போர் படித்து மகிழ...

  தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ஆர்வமாக இருக்கிறேன் படிப்பதற்கு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சிறிது இடைவெளி விட்டு இந்த வலைப்பூவிலும் பதிவாகும்.

   Delete
 2. சூப்பர் சார்.!!!! வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 3. Meendum..... ungalai Thinathanthil santhikka kathirukirom.....

  ReplyDelete
 4. வாழ்க வளமுடன்! வெற்றி பெற வாழ்த்துக்கள்! உஙளுடைய இந்தத் தொடர் ஒரு தூண்டுதலாக அமைந்து அதிகமதிகம் பேரை யோக‌ வழிக்கு அழைத்து வரவேண்டும்!

  ReplyDelete
 5. Sir,

  As you informed this article is not published on 05.09.2014 in daily thanthi

  Pls u publish this in ur blog too, its my request

  ReplyDelete
  Replies
  1. Today the article is published in daily thanthi. Please go through the daily once again. The article will be published in my blog next month.

   Delete