சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 20, 2013

அட ஆமாயில்ல! – 9




உங்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் தேவை இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சுடுகாடு தான். அந்த இடத்தில் தான் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது.
                   -மேக்ஸ்வெல் மால்ட்ஸ்


நேரம் என்பது திரும்பி வராத அம்பு.
                    -ஜோஷுவா லோத் லிப்மென்


அனைவரிடமும் கர்வம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பிச்சைக்காரன் கூட திருடுவதில்லை என்று கர்வம் கொள்கிறான்.
                     -ஜப்பான் நாட்டுப் பழமொழி


செய்து வரும் வேலையை இடையில் நிறுத்தி விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது.
                     -ஹெர்பெர்ட் கேஸன்


மக்களுடைய பிரதிநிதிகளுடன் பழகியதிலிருந்து நான் நாய்களை மதிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
                      -கேம்ரடீன்


கோபத்துடன் கொதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அருமையான பிரசங்கம் ஒன்றை உங்களால் செய்ய முடியும். ஆனால் நீங்கள் செய்த அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்.
                      -ஸ்டேன்லி ஜோன்ஸ்


தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான்.
                    -லில்லியன் வைட்டிங்


இந்த உலகில் நல்ல முறையில் அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு சிறுபகுதி நிச்சயம் இருக்கிறது. அந்த சிறுபகுதி நீங்கள் தான்.
                     -ஹக்ஸ்லீ

பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெரும்பாலான நேரத்தை வீணடித்து விடுவது தான்.
                   -பெர்னார்டு ஷா


நீங்கள் நினைத்தபடி மற்றவர்களை மாற்ற முடியவில்லையே என்று வருந்தாதீர்கள். ஏன் என்றால் நினைத்தபடி நீங்கள் உங்களையே மாற்றிக் கொள்ள முடிவதில்லை.
                    -தாமஸ் கெம்பிஸ்



தொகுப்பு – என்.கணேசன்



5 comments:

  1. அனைத்தும் அருமை...

    மிகவும் ரசித்தவை : முடிவான முதலும், முதலான முடிவும்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆஹா ஆஹா அருமை...!

    பிரச்சினை இல்லாத இடம் சுடுகாடா ஹா ஹா ஹா ஹா அங்கேயும் வந்து பிளாட் போட்டுட்டு இருக்கானுக அரசியல்வியாதிகள்.

    ReplyDelete
  3. நல்ல தொகுப்புகள்........வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அனைத்துமே ரசிக்கும்படியாக, சிந்தனையைத் தூண்டுபவையாக இருந்தது. பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. எல்லாமே நன்று. அதில் எனக்குப் பிடித்த ஒன்று...

    தன்னைப் பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் எவன் கொடுக்கிறானோ அவன் தான் உண்மையாக வாழ்ந்து வருகிறான்.
    -லில்லியன் வைட்டிங்

    ReplyDelete