சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, December 22, 2020

பரம(ன்) இரகசியம் நாவலின் மூன்றாம் பதிப்பு வெளியீடு!



 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.


தங்களுடைய பேராதரவின் காரணமாக பரம(ன்) இரகசியம் நாவல் இரண்டு பதிப்புகள் முடிந்து மூன்றாவது பதிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பே இரண்டாம் பதிப்பும் விற்றுத் தீர்ந்து போனாலும், கொரானா முதலான சில சூழ்நிலைகளால் மூன்றாம் பதிப்பு சற்று தாமதமாக வெளி வந்திருக்கிறது. 


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்லப்படும் இந்தச் சூழலில் பரம(ன்) இரகசியம் போன்ற பெரிய நாவல் மூன்று பதிப்புகளைச் சந்திப்பது என்பது பெரிய விஷயமே. தங்கள் ஆதரவினால் அது சாத்தியமாகி இருக்கிறது. விசேஷ மானசலிங்கம், ஈஸ்வர், குருஜி, கணபதி, ஆனந்தவல்லி , அக்னிநேத்திர சித்தர் கதாபாத்திரங்கள் இப்போதும் மனதில் நிழலாடுவதாகச் சில வாசகர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள் என்பதை நெகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 


முதலிரண்டு பதிப்புகளில் இருந்த சில எடிட்டிங் தவறுகள் இந்த மூன்றாம் பதிப்பில் சரிசெய்யப்பட்டு கூடுதல் பக்கங்களுடன் (696) வந்திருக்கின்றன.  விலை ரூ750/-. ஆறு மாதங்களாக நாவல் வாங்க விசாரித்துக் கொண்டிருந்தவர்கள் பதிப்பாளரைத் தொடர்பு கொண்டு இதை வாங்கிக் கொள்ளலாம்.


நூலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது blackholemedia@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


அன்புடன் உங்கள்

என்.கணேசன்



5 comments:

  1. Great novel. I have read it five times.

    ReplyDelete
  2. இந்த நாவல் உங்கள் மாஸ்டர்பீஸ் என்றே சொல்ல வேண்டும். என்னிடமிருந்து இந்தப் புத்தகம் வாங்கிப் படித்து விட்டு பக்கத்து வீட்டுப் பெரியவர் சொன்னார். “அருமையான நாவல். இந்த எழுத்தாளரே நினச்சாலும் இந்த மாதிரி இன்னொரு கதை எழுத முடியாது”. அந்த அளவு அவருக்குப் பிடித்து விட்டது. இப்போதும் வருடத்துக்கு ஒரு முறையாவது படிக்க வாங்கிப் போவார் சார்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார்...
    மிகவும் அருமையான நாவல்....

    ReplyDelete
  4. எனக்கு மிக பிடித்த நாவல்... இதில் உள்ள சில காதாபாத்திரங்களை பார்த்து என்னுடைய பழக்கவழக்கங்களை நானே மாற்றிக்கொண்டேன்...

    ReplyDelete