சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 3, 2019

எனது புதிய வரலாற்று நாவல் “சத்ரபதி” வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வலைப்பூவில் நீங்கள் திங்கள் தோறும் படித்து வரும் வரலாற்று நாவல் “சத்ரபதி” இன்று அச்சில் வெளியாகியுள்ளது.

பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து ராஜ்ஜியம் ஆளும் நிலைக்கு உயர்ந்த ஒரு மகத்தான வீரனின் சாகசக் கதை இது! ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டிய சரித்திரம் இது.  வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆபத்தையும், சூழ்ச்சியையும், வஞ்சனையையும், சோதனையையும் சந்தித்து வந்த போதும் மனம் தளராமல், வீரத்துடனும், துணிச்சலுடனும், தந்திரத்துடனும், தொலைநோக்குடனும், கூரிய அறிவுடனும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறிய சிவாஜியின் இந்த சாகசக்கதையில் சுவாரசியத்திற்கும், திடீர்த் திருப்பங்களுக்கும், பிரமிப்புக்கும், மனநெகிழ்வுக்கும் பஞ்சமில்லை. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடனும், திகிலுடனும் கடைசி வரை நகரும் இந்த  நாவல் 145 அத்தியாயங்கள், 704 பக்கங்கள் கொண்டது.  இந்த நாவலின் விலை ரூ.700/-

சென்னை புத்தகக்காட்சியில் வாங்கினால் 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு.  நாவலை வேண்டும் வாசகர்கள் பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ,  blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


வலைப்பூவில் 2020 அக்டோபர் முதல் வாரம் வரை வழக்கம் போல் சத்ரபதி ஒவ்வொரு திங்களும் தொடர்ந்து வெளிவரும்.

அன்புடன்
என்.கணேசன்

18 comments:

  1. வாழ்த்துக்கள் கணேசன் சார். முதல் தடவையாக உங்கள் நாவல் 700 பக்கங்களைக் கடக்கிறது என்று நினைக்கிறேன். இதிலும் புதிய வரலாறு படைத்து விட்டது இந்த நாவல்.

    ReplyDelete
  2. Yes Ji. Every Indian should know the history of Sivaji. Hope and wish this novel creates a history in Tamil Literary world. Congrats for your sincere efforts.

    ReplyDelete
  3. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
    Replies
    1. intha thirattikkum athey nilamai thaan yerpadum endru ninaikkiren. Eppodhu podhu sindhanaiyai thaandi idam-valam endru saivu irunthaal kandippaaga atharkku aadharavu kidaikkathu. Ungal nalla nokkangal niraivera vaazhthugal!!

      Delete
  4. வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஜி...

    ReplyDelete
  6. Can i order it from amazon.in ?
    Thank you

    ReplyDelete
    Replies
    1. In a few days you can order in amazon also. Thank you.

      Delete
    2. இப்போது அமேசானிலும் கிடைக்கிறது. லிங்க்
      https://www.amazon.in/Chhatrapati-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-N-Ganeshan/dp/9381098425/ref=sr_1_6?qid=1556807410&refinements=p_27%3AN.Ganeshan&s=books&sr=1-6

      Delete
  7. இராமகிருஷ்ணன்January 8, 2019 at 6:30 PM

    சென்னை புத்தகக் கண்காட்சியில் சத்ரபதியை வாங்கிப் படித்து இப்போது தான் முடித்தேன் சார். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அருமை. உங்கள் மற்ற நாவல்களைப் போல் இதை வேகமாகப் படித்துக் கொண்டு போக முடியவில்லை. நிதானமாகப் படித்தால் தான் சிவாஜியின் திட்டங்களையும், தந்திரங்களையும் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. நாவலில் கடைசிப்பகுதிகள் பிரமாதம். உண்மையாக அறிய வேண்டிய மகத்தான மனிதனை உங்கள் எழுத்தில் அருமையாக செதுக்கிக் காட்டி இருக்கிறீர்கள். இன்னொரு முறை நிதானமாகப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. சங்கர சுப்பிரமணியன்January 25, 2019 at 7:14 PM

    ஐயா தங்களுடைய தீவிர ரசிகன் நான். அமானுஷ்யனில் ஆரம்பித்து இருவேறு உலகம் வரை ஒவ்வொரு நாவலையும் ரசித்துப் படித்தவன். ஆனால் தங்களுக்கு நான் கருத்து தெரிவித்ததில்லை. சத்ரபதியைப் படித்து முடித்த பின் உடனே நான் உணர்ந்ததைச் சொல்லும் ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் சிவாஜியை அவன் பிறப்பிலிருந்து நேரில் பார்த்து அவன் வாழ்க்கையோடு பயணம் செய்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. நாவல் அருமையிலும் அருமை.

    உங்கள் மற்ற நாவல்கள் போல் மளமளவென்று படித்து நகர முடியவில்லை. நிறைய வரலாற்றுத் தகவல்கள் இடையிடையே நிறைய கொடுத்திருப்பதால் நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. புரிந்து கொண்டபின் அந்தக் காலத்தில் பயணம் செய்வது போலவே உணர முடிந்தது.

    உயிருக்குப் பயந்து சிவாஜியின் பெற்றோர் ஓடி வரும் கட்டத்தில் ஆரம்பிக்கும் நாவல் சிவாஜியின் முடிசூட்டு விழாவில் முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும் அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பதால் அந்தக் கதாபாத்திரங்களையும் சரித்திரத்தையும் இயல்பாய் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஷாஹாஜி, ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ், சிவாஜியின் நண்பர்கள், ஆதில்ஷா சுல்தான்கள், அப்சல்கான், செயிஷ்டகான், ஔரங்கசீப், ஜஹானாரா, ஜெப் உன்னிசா கேரக்டர்கள் மனதில் தங்கி விட்டார்கள். சிவாஜிக்கு ரொட்டி கொடுத்த பாட்டி போன்ற சின்னச் சின்ன கேரக்டர்களும் சூப்பர்.

    சின்ன எடிட்டிங் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன என்றாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மகாபுருஷனைப் பிரம்மாண்டமாய் செதுக்கி வைத்திருக்கிறீர்கள். அவனோடு வாழ்வது போலவே உணர வைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  9. சங்கர சுப்பிரமணியன்January 25, 2019 at 8:37 PM

    நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள்:

    ஜீஜாபாய் அயூப்கான் என்ற ஏமாற்றுக் கோட்டைத் தலைவனைப் பழி வாங்கும் இடம்.

    ஜாவ்லி அரசனை சிவாஜியின் ஆட்கள் நன்றாய் கலாய்த்து விட்டுக் கொல்லும் இடம்

    செயிஷ்டகான் மீதான தாக்குதலில் நகைச்சுவையும் அதற்குப் பின் சிவாஜியின் குழு தப்பித்த விதமும்.

    சிவாஜி ஆக்ரா சென்று சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து தப்பித்து வருவது வரை நிகழ்ச்சிகள் நல்ல விறுவிறுப்பு. திட்டமிட்ட விதமும், அதன் பின் ஔரங்கசீப் போலத்கானை விசாரித்து உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அருமை..

    சாலேர் கோட்டையைத் தக்க வைக்க சிவாஜி செய்த யுத்த யுக்திகளால் மும்முனையில் வெற்றி பெற்ற சம்பவம்.

    ஔரங்கசீப்பின் பழைய காதலை அறிந்து அவன் மகள் ஜெப் உன்னிசா தந்தையைச் சந்தித்துப் பேசும் இடம். முடிவில் ஔரங்கசீப் மீது அவளைப் போலவே நமக்கும் பச்சாதாபம் ஏற்படுகிறது. (உங்கள் நாவல்களில் என்னால் வில்லன்களைக் கூட வெறுக்க முடிந்ததில்லை. அப்படி அவர்களைச் சித்தரிப்பீர்கள். இந்த நாவலிலும் ஔரங்கசீப் கேரக்டரின் அந்த குறிப்பிட்ட இடம் சூப்பர்)

    ஆக்ராவிலிருந்து தப்பித்து வரும் சிவாஜி ஒரு மூதாட்டி வீட்டில் தங்கும் நிகழ்வு. அந்த மூதாட்டியின் மனமும், சிவாஜியின் பதில் பரிசும் நெகிழ வைத்த இடங்கள்.

    நாவலில் என்னால் ரசிக்க முடியாத விஷயங்கள்:

    மராட்டியப் பெயர்கள் ஒரே போல் இருப்பது போலவே தெரிகின்றன. சில இடங்களில் குழப்பமாக இருக்கிறது.

    - சங்கர சுப்பிரமணியன்

    ReplyDelete
    Replies
    1. மதிவதனிFebruary 2, 2019 at 7:25 PM

      அருமையான ஆழமான விமர்சனம். பாராட்டுக்கள். நீங்கள் ரசித்த இடங்களை நானும் ரசித்தேன். ஆனால் கூடுதலாக நான் ரசித்த இடங்கள் இரண்டு.

      1. சிவாஜி தாதாஜி கொண்டதேவ் இருவருக்கிடையே இருந்த அன்பு. தாதாஜி கொண்டதேவ் கேரக்டரை அருமையாக ஆசிரியர் சித்தரித்திருக்கிறார்.

      2. பன்ஹாலா கோட்டையிலிருந்து சிவாஜி தப்பிக்கும் விதம்.

      Delete
  10. Hi Ganesan sir, How to get it from US?

    ReplyDelete
    Replies
    1. Please Contact the publisher at his mobile 9600123146 for details

      Delete