151.
மனிதனின் கடமை பிரபஞ்சத்தின் பிரச்னையைத் தீர்த்து வைப்பதல்ல. தான் செய்ய
வேண்டியதைச் சரியாய் செய்வதே.
152.
அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
153.
ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள்
மாய்ந்தொழிந்திருக்கின்றன.
154.
சில சமயங்களில் இழப்பதே பெரிய ஆதாயம்.
155.
உன்னைத் தாழ்த்திப் பேசுகையில் அடக்கமாய் இருப்பதை விட, புகழ்ந்து பேசுகையில்
அடக்கமாய் இருப்பதே வெற்றி.
156.
தீயவனை விட புத்தி கெட்டவன் ஆபத்தானவன். தீயவன் தன் பகைவனைத் தான் தாக்குவான்.
புத்தி கெட்டவன் நண்பர், பகைவர் இருவரையும் தாக்கக்கூடியவன்.
157.
பனிக்கட்டியில் சிலைகள் செய்து அவை கரைந்து போவதைக் கண்டு கண்ணீர் விடுகிறோம்.
158.
ஆலோசனைகளும், கண்டனங்களும் மிகவும் மென்மையாய் இருக்க வேண்டும். வருத்தம்
அளிக்கும் உண்மைகளையும் இதமான சொற்களில் கூற வேண்டும். பலன் அளிக்க வேண்டிய
அளவுக்கு மேல் எதுவும் கூறலாகாது.
159.
ஆத்மார்த்தமாய் உபதேசம் செய்ய பேரறிவு தேவையில்லை. உயிர்த்துடிப்புள்ள ஒரு மனம்
போதும்.
160.
சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஆனால் மௌனம் பேரறிவின் பள்ளிக்கூடம்.
தொகுப்பு:
என்.கணேசன்
No comments:
Post a Comment