என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, June 20, 2016

பரம(ன்) இரகசியம்! இரண்டாம் பதிப்பு வெளியீடு


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

தங்கள் பேராதரவினால் பரம(ன்) இரகசியம் நாவல் இரண்டாம் பதிப்பைச் சந்தித்திருக்கிறது. விசேஷ மானஸ லிங்கம் மட்டுமல்லாமல், கணபதி, ஆனந்தவல்லி, குருஜி போன்ற கதாபாத்திரங்களும் வாசகர்கள் மனதில் தங்கிப் போனதை என்னால் தொடர்ந்து அறிய முடிகிறது. எத்தனையோ வாசகர்கள் என்னிடம் அந்தக் கதாபாத்திரங்களை நிஜ மனிதர்கள் போலவே பாவித்து என்னிடம் சிலாகித்திருக்கிறார்கள். கதைக்களத்தோடு, அந்தக் கதாபாத்திரங்களுடன் தோன்றியிருந்த அன்னியோன்னியம் பலரையும் அந்த நாவலை வாங்க வைத்து, பலருக்கு சிபாரிசும் செய்ய வைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பே ஸ்டாக் தீர்ந்து விட்ட போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வர தாமதமாகி விட்டது. பலர் தொடர்ந்து போன் செய்து பரம(ன்) இரகசியம் நாவலைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியிலும் கேட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பதிப்பாளர் தெரிவித்தார். இன்று இரண்டாம் பதிப்பு வெளியாகி விட்டதால் இனி
வழக்கம் போல் கடைகளிலும், பதிப்பாளரிடமும் கிடைக்கும்.

அன்பு வாசகர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

பதிப்பாளரின் அலைபேசி 9600123146 மின்னஞ்சல் blackholemedia@gmail.com


அன்புடன் உங்கள்
என்.கணேசன்

5 comments:

 1. சரோஜினிJune 20, 2016 at 7:19 PM

  உங்கள் நாவல்கள் ஒரு முறை படித்து விட்டெறிகிற நூல்களாக இல்லை. பலமுறை படிக்க தூண்டுபவை. பரம(ன்) ரகசியத்தையும், அமானுஷ்யனையும், எத்தனை முறை படித்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது. பரமன் ரகசியம் நாவல் இன்னும் பல பதிப்புகள் காண வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் கணேசன். பரமன் இரகசியம் அருமையான நாவல். நான் ஆனந்தவல்லி கணபதி ரசிகை. என் மகன் குருஜி, ஈஸ்வர் ரசிகன். இப்போதும் சில இடங்களை படித்து மகிழ்கிறோம். அலமாரியில் இருந்து அதிகம் எடுக்கப்படும் நூல் அது தான்.

  ReplyDelete
 3. A lovable one... the characters of this novel really folds my life and my attitude in the best possible way. Thank you Ganeshan sir for the wonderful book:-)))

  ReplyDelete
 4. I ordered yesterday for my copy after a complete reading here:-)))
  I love each and every sentence framed in this novel. It must be destiny for me to read this novel.!

  ReplyDelete