சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 18, 2013

பரம(ன்) ரகசியம் – 53



கேஷ் வந்து சேரும் வரை விஸ்வநாதனுக்கு ஈஸ்வரை அருகில் இருந்து கொண்டு கூர்மையாகக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிக் கவனித்த போது அவரால் ஈஸ்வரை மெச்சாமல் இருக்க முடியவில்லை. குற்ற உணர்வால் அவன் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவன் முழுக் கட்டுப்பாட்டுடனும், ஆளுமைத் திறன் சிறிதும் குறையாமலும் இருந்தான்.

வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த டாக்டரிடம் மீண்டும் சென்று ஈஸ்வர் பரமேஸ்வரனின் உடல்நிலையின் முழு விவரங்களைக் கேட்டு வந்தான். அவரிடம் அந்த விவரங்களைச் சொன்னான். அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் மற்ற ரிப்போர்ட்களையும் நான் பார்க்கணும்னு சொன்னேன், அவர் அனுப்பி வைக்கிறேன்னு சொன்னார்  

அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை ஒரு இளம் நர்ஸ் சிறிது நேரத்தில் கொண்டு வந்து ஈஸ்வரிடம் தந்தாள். அந்த நர்ஸ் ஈஸ்வரால் நிறையவே ஈர்க்கப் பட்டதாக விஸ்வநாதனுக்குத் தோன்றியது. பார்க்க அழகாகவும் இருந்த அந்த நர்ஸ் அடிக்கடி அவன் பார்வையில் படுகிற மாதிரி நடமாடியதையும், அவன் பார்த்த போது கவர்ச்சியாகப் புன்னகை செய்ததையும் விஸ்வநாதன் கவனிக்கவே செய்தார்.

அவள் அவனிடம் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைத் தந்து விட்டு மிக அருகில் நின்ற போது ஈஸ்வர் “தேங்க்ஸ் சிஸ்டர்என்று மரியாதையாகச் சொன்னான். அவன் குரலில் அந்த சிஸ்டருக்கு ஒரு அழுத்தம் இருந்தது. அவள் ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தாள். ஒருவித ஏமாற்றம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு வெல்கம்என்று இனிமையாகச் சொல்லி விட்டுப் போனாள்.

இதில் அவன் தன்னைப் பற்றி உயர்வாகவும் அவளைப் பற்றித் தாழ்வாகவும் நினைக்கவில்லை. அவன் இந்த ஈர்ப்பு இயல்பு என்பதாக எடுத்துக் கொண்டது போல விஸ்வநாதனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவள் அழகாக இருக்கிறாளே என்பதற்காக நிலைமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சிறிது நேர சீண்டல்களைக் கூடச் செய்யாமல், அவளைக் கையாண்ட விதத்தில் தன் கௌரவத்தை நிலை நிறுத்தி, அவளுடைய கௌரவத்தையும் காப்பாற்றி மரியாதையாக நடத்திய நுணுக்கமான விதத்தில் அவன் தனித்தன்மை தெரிந்தது. தாத்தாவின் உடல்நிலையால் ஏற்பட்டிருந்த இந்த கவலை சூழ்நிலையால் மட்டுமல்ல, மற்ற சாதாரண சூழ்நிலைகளிலும் அவன் இப்படியே தான் நடந்து கொண்டிருப்பான் என்று அவருக்குத் தோன்றியது.

அவன் அவரிடம் அந்த ரிப்போர்ட்டுகளைக் காட்டி மேலும் ஏதேதோ விளக்கினான். பரமேஸ்வரன் மிகுந்த அபாயக் கட்டத்தில் தான் இருக்கிறார் என்பதைத் தவிர விஸ்வநாதனுக்கு வேறு எதுவும் விளங்கவில்லை. அவன் திரும்பவும் அந்த நர்ஸிடம் அந்த ரிப்போர்ட்டுகளைத் தந்து விட்டு மறுபடி நன்றி சொல்லி விட்டு வந்தான். அவள் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள். இப்போது அவள் புன்னகையில் கவர்ச்சி போய் கண்ணியம் தெரிந்தது.

பரமேஸ்வரன் பிழைத்துக் கொண்டால் இவனை அலட்சியம் செய்ய முடியாது என்பது விஸ்வநாதனுக்குப் புரிந்தது. அவர் சங்கரை ஒதுக்கினார். சங்கரும் ஒதுங்கிக் கொண்டான். ஆனால் சங்கரின் மகன் ஒதுக்க முடிந்தவனும் அல்ல, ஒதுங்கக் கூடியவனும் அல்ல. புத்திசாலித்தனம், பக்குவம், ஆளுமைத் திறன் இவைகளில் எந்தக் காலத்திலும் மகேஷ் இவனுக்கு இணையாக முடியாது என்பதும் அவருக்குப் புரிந்தது. அந்த நிஜம் அவருக்கு வலித்தது.... கடவுள் பாரபட்சமானவர், சிலருக்கு எல்லாவற்றையும் தந்து விடுகிறார், சிலருக்கோ எதுவும் தருவதில்லை என்று தோன்றியது...

மகேஷ் வந்தான்... அவன் முகத்தில் களைப்பு தெரிந்தது. “எங்கே போயிட்ட நீ?விஸ்வநாதன் கேட்டார்.

“ப்ரண்ட்ஸ் கூட இருந்தேன்... தாத்தாவுக்கு என்ன ஆச்சு?முன்பே விஸ்வநாதன் சொல்லி இருந்தாலும் புதிதாகக் கேட்பவன் போலக் கேட்டான்.

ஹார்ட் அட்டேக் என்றார் விஸ்வநாதன். மகேஷ் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “தாத்தா.... தாத்தாஎன்று அவன் கதறினான். ஐ.சி.யூவிற்கு வெளியே அமர்ந்திருந்த வேறு சிலர் அவனை இரக்கத்தோடு பார்த்தார்கள். விஸ்வநாதன் அவனைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தினார். விஸ்வநாதனுக்கு உள்ளூர ஒரு பெருமை எழுந்தது. ‘இதில் அவர் மகனுக்கு ஈஸ்வர் இணையாக முடியாது’. இந்த ஒன்றிலாவது அவர் மகன் ஈஸ்வரை மிஞ்சுகிறானே!

அவனை அப்படியே வராந்தாவின் எதிர்பக்க ஆளில்லாத மூலைக்கு விஸ்வநாதன் அழைத்துக் கொண்டு போனார்.  அங்கு போனவுடன் மகேஷ் தந்தையிடம் கேட்டான். “அம்மா எங்கே?

வீட்டுக்குப் போயிருக்கா! கிழவி அங்கே தனியா இருக்கறதால துணைக்கு அங்கே போய் இருக்கச் சொல்லி ஈஸ்வர் அனுப்பிச்சிட்டான்

இவனால தான் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்குங்கறதை அம்மாவும், கிழவியும் எப்படி எடுத்துகிட்டாங்க

“உங்கம்மாவுக்கு இவன் மேல இரக்கம் தான் இருக்கு. கிழவி என்ன நினைக்கிறாங்கறதை எப்பவுமே வெளிப்படுத்திக்கிறதில்லையே

“தாத்தா பிழைப்பாரா?

“ஸ்கேன் ரிப்போர்ட்டுகளைப் பார்த்தா அவர் பிழைக்கிறது கஷ்டம் தான்னு தோணுது. ஒரு வேளை அவருக்கு ஏதாவது ஆயிட்டா அப்புறமா கிழவியும் ரொம்ப நாள் இருக்க மாட்டா. அவளுக்கு சின்ன மகன்னா தான் உயிரு

கேட்கவே மகேஷுக்கு இனிமையாக இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... இல்லையில்லை.... ஈஸ்வரையும் சேர்த்தால் மூன்று மாங்காய். உன்னால் தான் இத்தனையும்னு குற்றம் சாட்டி அமெரிக்காவிற்கே துரத்தி விட இது நல்ல வாய்ப்புஎன்று மகேஷ் நினைத்தான்.

மகனின் எண்ண ஓட்டத்தை ஊகித்த விஸ்வநாதன் புன்னகைத்தார். நான் கிளம்பறேன் மகேஷ். நீ இங்கே இரு. ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிஎன்று சொல்லி விட்டுக் கிளம்பினார். மகேஷ் ஈஸ்வரிடம் பேசும் போது அவர் கூட இருந்தால் அவனைக் கட்டுப்படுத்த வேண்டி வரும்... அவர் மகேஷைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை....

விஸ்வநாதன் ஈஸ்வரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார். அவர் போன பின் மகேஷ் ஈஸ்வரிடம் சத்தமாகக் கேட்டான். “இப்ப உனக்குத் திருப்தியா?... இதுக்காக தானே நீ இத்தனை நாள் காத்துகிட்டிருந்தே.

அங்கிருந்தவர்கள் அவர்கள் பக்கம் திரும்ப ஈஸ்வர் “மெள்ள பேசுஎன்றான்.

“நான் எதுக்கு மெள்ள பேசணும்? அவருக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்... ஆமா. சொல்லிட்டேன்மறுபடியும் சத்தமாய் மகேஷ் சொன்னான்.

“தாத்தாவுக்கு ஒன்னும் ஆகாதுஎன்று அமைதியாக ஈஸ்வர் சொன்னான்.

மகேஷிற்குத் தான் கேள்விப்பட்டது தவறோ என்ற சந்தேகம் எழுந்தது. “டாக்டர் வேற மாதிரி சொன்னதாயில்ல அப்பா சொன்னார்

தாத்தா பிழைக்கறதுக்கு முப்பது சதவீதம் சான்ஸ் இருக்கறதா டாக்டர் சொன்னார். நூறு சதவீதம் சான்ஸ் இல்லைன்னு சொன்னா தான் கவலைப்படணும். முப்பது சதவீதம் சான்ஸ் இருக்குன்னா நம்ம எல்லாரோட பிரார்த்தனையும் சேர்ந்து அவரை அந்த முப்பது சதவீதத்துக்கு அவரை இழுத்துகிட்டு வந்துடும்.”  ஈஸ்வர் அமைதியாகச் சொன்னான்.

ஓ பிள்ளையையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவியா நீ. அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துட்டு அவர் பிழைக்கணும்னு நீ பிரார்த்தனையும் செய்வியாமகேஷ் சொல்லி விட்டுத் தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டான். அடுத்த கணம் அவன் குமுறி குமுறி அழுதான்.

அங்கிருந்தவர்கள் மகேஷை இரக்கத்துடன் பார்த்தார்கள். ஓரக்கண்ணால் அதைப் பார்த்த மகேஷிற்குத் திருப்தியாக இருந்தது.

“மகேஷ், அவர் எனக்கும் தாத்தா தான். ஞாபகம் வச்சுக்கோஈஸ்வர் சொன்னான்.

ஈஸ்வர் சொன்ன வாசகமே மகேஷிற்குக் கசந்தது. அவன் பொறுக்க முடியாதவன் போலக் கத்தினான். “ஓ அப்படியா. இத்தனை நாள் நீ ஒரு தடவையாவது அவரை தாத்தான்னு கூப்பிட்டிருப்பியா? ஒரு நாள் அவர் கிட்ட நீ அன்பா பேசியிருப்பியா?....மகேஷ் மறுபடி கத்தினான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வருக்கு அவன் எண்ணம் புரிந்தது. அமைதியாய் தாழ்ந்த குரலில் உறுதியாய் சொன்னான். இத்தனை நாள் வரைக்கும் ஒரு மாசத்துல அமெரிக்கா திரும்பிப் போயிடணும்னு தான் நினைச்சிருந்தேன். இன்னொரு தடவை நீ கத்திப் பேசினேன்னா நான் நிரந்தரமா இங்கேயே தங்கிடுவேன். தாத்தாவுக்கு என்ன ஆனாலும் சரி .... எனக்கு வர வேண்டிய சொத்தை வாங்காமல் இங்கிருந்து நகர மாட்டேன்... எப்படி வசதி?  

மகேஷ் ஈஸ்வரையே திகிலுடன் பார்த்தான். அவன் விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பதை அவன் முகபாவனை சொன்னது. யோசித்துப் பார்த்த போது இனி வாயைத் திறக்காமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று மகேஷின் அறிவு எச்சரித்தது. “என்ன மாதிரி ஆளு நீஎன்று வெறுப்புடன் மெல்ல சொன்னவன் அதன் பிறகு மௌனமானான்.

ரமேஸ்வரன் மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தார். விழிப்புணர்விற்கு வரும் போதெல்லாம் இதயத்தில் பெரிய பாரத்தை அவர் உணர்ந்தார். ஐசியுவின் உள்ளே நர்ஸ்களின் நடமாட்ட சத்தமும் பேச்சுச் சத்தமும் கேட்டது. மயக்க நிலைக்குச் செல்லும் போதோ திரும்பத் திரும்ப ஈஸ்வர் அவரைத் தாத்தா என்றழைப்பது போல் கேட்டது. அத்துடன் அவன் சொன்னதும் திரும்பத் திரும்ப காதில் விழுந்தது. “நான் இனிமே கண்டிப்பா எங்கப்பா பத்தி பேச மாட்டேன் தாத்தா. சாரி. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்கப்பா என்னை மன்னிக்க மாட்டார் தாத்தா. ப்ளீஸ் எனக்காக குணமாயிடுங்க தாத்தா”.

அந்த வார்த்தைகள் அவர் இதயத்தை அறுப்பது போல அவர் உணர்ந்தார். அவனுடைய கோபமான வார்த்தைகளை விட அதிகமாக இந்த வார்த்தைகள் அவரைக் காயப்படுத்தின. சொல்ல முடியாததொரு சோகம் அவரை ஆட்கொண்டது. கோபத்திலும் சரி துக்கத்திலும் சரி பேரன் பயன்படுத்தும் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. ஒருவனின் இதய ஆழம்  வரைக்கும் பயணிக்க வல்லவையாக இருக்கின்றன....

திடீரென்று திருநீறின் மணம் அவரை சூழ்ந்தது. அந்த மணம் அவருக்கு மிகவும் பரிச்சயமானது. தோட்ட வீட்டில் அண்ணனைப் பார்க்கச் செல்கிற போதெல்லாம் அந்த மணத்தை அவர் சுவாசித்திருக்கின்றார். மெல்ல அவர் கண்களைத் திறந்து பார்த்தார்.

பசுபதி ஒளிவெள்ளத்தின் நடுவே நிற்பது தெரிந்தது. இறந்து விட்டோமா என்ன, அண்ணனிடம் வந்து சேர்ந்திருக்கிறோமே என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அண்ணாஎன்றழைத்தார்.

பசுபதி தம்பியைப் பார்த்து புன்னகை செய்தார். காயப்பட்ட மனதில் அண்ணனைப் பார்த்ததும் அமைதிப்படுத்தும் ஆறுதலை பரமேஸ்வரன் உணர்ந்தார். அண்ணனிடம் தெரிவிக்க அவருக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. முக்கியமாய் முதலில் ஈஸ்வரைப் பற்றி அண்ணனிடம் சொல்லத் தோன்றியது. “அண்ணா என் பேரன் ஈஸ்வர் பார்க்க அப்படியே நம் அப்பா மாதிரியே இருக்கான்... பார்க்க மட்டும் தான் அவர் மாதிரி, குணத்தில் அப்பா மாதிரி சாதுவாக எல்லாம் இல்லை.... ரொம்பவே நல்லவன் தான்.... பிடிச்சவங்க கிட்ட நம்ம அப்பா மாதிரியே மென்மையா நடந்துக்குவான்.... ஆனா கோபம் யார் மேலயாவது வந்துட்டா பேச்சு எல்லாம் நம்ம அம்மா மாதிரி கூர்மையாய் தயவு தாட்சணியம் இல்லாமல் இருக்கும்....

அம்மா பேச்சு பற்றி சொன்னதும் அண்ணன் புன்னகை மேலும் விரிந்ததாகப் பரமேஸ்வரனுக்குத் தோன்றியது. அவரும் புன்னகை செய்தார். திடீரென்று அண்ணனிடம் சிவலிங்கம் திருட்டுப் போன விவரம் பற்றிப் பேசவில்லை என்ற நினைவு வர அது பற்றிப் பேச அவர் வாயைத் திறந்தார். ஆனால் அதற்கு முன் பசுபதி தம்பியின் உடலைத் தொட்டார். அண்ணனின் கைகள் அவர் உடலைத் தொட்டவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல பரமேஸ்வரன் உணர்ந்தார். அவர் சொல்ல வந்த வார்த்தைகள் வாயிலேயே தங்கி விட்டன. பரமேஸ்வரன் நினைவிழந்தார்.

சியுவில் இருந்து வெளியே நர்ஸ் ஓடி வந்த போது தாத்தாவின் நிலைமை மோசமாகப் போய் விட்டது என்பது மகேஷிற்குப் புரிந்தது.

எழுந்து நின்று “என்ன ஆச்சு?என்று மகேஷ் நர்ஸைக் கேட்டான். ஆனால் அவனுக்குப் பதிலேதும் சொல்லாத அவள் ஓடிப்போய் டியூட்டி டாக்டரிடம் ஏதோ சொல்ல அவர் ஐசியூவிற்கு விரைந்து செல்ல நர்ஸ் பெரிய டாக்டருக்குப் போன் செய்து பேச ஆரம்பித்தாள். பேசி விட்டு அவளும் ஐசியூவிற்கு ஓட மகேஷ் அவளை வழி மறித்து கேட்டான். “என் தாத்தாவுக்கு என்ன ஆச்சு?

“சீஃப் டாக்டர் இப்ப வந்துடுவார். அது வரை எதுவும் சொல்ல முடியாது என்று சொல்லி விட்டு நர்ஸ் ஐசியூவினுள் நுழைந்தாள்.

மகேஷ் ஈஸ்வரிடம் கேட்டான். “இப்ப உனக்கு திருப்தியா?”. வெறுப்புடன் கேட்ட போதும் அவன் குரல் தாழ்ந்தே இருந்தது.

“பொறுமையா இருஎன்று ஈஸ்வர் சொன்னான்.

அவர் தோள்ல வளர்ந்தவன் நான். என்னால் பொறுமையாய் இருக்க முடியாதுஎன்று குரலில் பெரும் துக்கத்தை வரவழைத்த மகேஷ் உடனடியாகத் தந்தைக்குப் போன் செய்தான்.

“அப்பா, தாத்தா நிலைமை சீரியஸ் போலத் தெரியுது. சீஃப் டாக்டர் வராமல் எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க. எதுக்கும் நீங்க அம்மாவையும், பாட்டியையும் இப்பவே கூட்டிகிட்டு வர்றது நல்லதுன்னு நினைக்கிறேன்

விஸ்வநாதன் அப்போது தான் வீடு போய் சேர்ந்திருந்தார். உடனே அவர்களை அழைத்து வருவதாக மகனிடம் சொன்ன அவர் மனைவியிடம் மகேஷ் சொன்னதைச் சொன்னார்.

மீனாட்சி அதிர்ந்து போனாள். அவள் காலின் கீழுள்ள நிலம் திடீரெனப் பிளந்து விட்டது போல உணர்ந்தாள். கண்கள் கடலாக அப்படியே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

விஸ்வநாதன் மனைவியை சிறிது நேரம் தேற்றி விட்டுச் சொன்னார். “நீயே இப்படி தளர்ந்துட்டா உன் பாட்டியை நாம் எப்படி சமாதானப்படுத்தறது? முதல்ல அவங்களைக் கூட்டிகிட்டு கிளம்பு. பெரிய டாக்டர் இனிமேல் தான் வரணுமாம். அவங்களால முடிஞ்சதை அவங்க செய்யாமல் இருக்க மாட்டாங்க. தைரியப்படுத்திக்கோ

மீனாட்சி தன்னை ஓரளவு சுதாரித்துக் கொண்டு மெல்ல பாட்டி அறைக்குப் போனாள். “மகேஷ் போன் செஞ்சான். நம்மளை எல்லாம் வரச் சொன்னான். ஒரு தடவை போயிட்டு வந்துடலாமா பாட்டி

ஆனந்தவல்லி பேத்தியையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். பின் மூத்த மகனின் புகைப்படத்தை சிறிது முறைத்துப் பார்த்து விட்டு எழுந்தாள். பேத்தி கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள ஆனந்தவல்லி இளைய மகனைப் பார்க்கக் கிளம்பினாள்.

காரில் போகும் போது மீனாட்சியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆனந்தவல்லி கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கிளம்பவில்லை.

அதைக் கவனித்த விஸ்வநாதன் ஆச்சரியப்பட்டார். மகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் கிழவி தாங்க மாட்டாள், நிறைய நாள் இருக்க மாட்டாள் என்று மகேஷிடம் சொன்னதை மானசீகமாக விஸ்வநாதன் வாபஸ் வாங்கிக் கொண்டார்.

கிழவி இன்னும் பல பேரை அனுப்பாமல் சாக மாட்டாள் போல இருக்கிறதே!

(தொடரும்)

-          என்.கணேசன்


21 comments:

  1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. கண்ணன்July 18, 2013 at 5:37 PM

    அற்புதம். கண் முன் நிகழ்ச்சிகள் நடப்பது போல் உணர்கிறேன். பாராட்டுக்கள். (பரமேஸ்வரன் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம்.)

    ReplyDelete
  3. காயப்பட்ட மனதில் அண்ணனைப் பார்த்ததும் அமைதிப்படுத்தும் ஆறுதலை பரமேஸ்வரன் உணர்ந்தார்.

    ஆறுதலாக அவர் குணமடைந்து வரட்டும் ..!

    ReplyDelete
  4. அழகான நடையில் கண் முன்னே நடப்பது போல் எழுதியிருக்கிறீர்கள்... பரமேஸ்வரன் பிழைத்துக் கொள்வார் என்று நம்புகிறோம்...

    ReplyDelete

  5. Really very good and interesting one.

    ReplyDelete
  6. "கோபத்திலும் சரி துக்கத்திலும் சரி பேரன் பயன்படுத்தும் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. ஒருவனின் இதய ஆழம் வரைக்கும் பயணிக்க வல்லவையாக இருக்கின்றன...."

    உங்கள் எழுத்து எங்கள் இதய ஆழம் வரைக்கும் பயணிக்க வல்லவையாக இருக்கின்றன. Very nice and interesting. please continue.

    Kannan

    ReplyDelete
  7. நர்சை கண்ணியமாக ஹேண்டில் செய்ததிலும் மகேஷை சொத்து பற்றி புத்திசாலித்தனமாகப் பேசி அடக்கியதிலும் ஈஸ்வர் சூப்பர் ஸ்டாராக நம் மனதில் நிற்கிறான். ஆனந்தவல்லியும் வித்தியாசமான, ஸ்ட்ராங்கான கேரக்டர். மொத்தத்தில் தொடரின் ஒவ்வொரு சேப்டரும் சூப்பர்.

    ReplyDelete
  8. ##திடீரென்று திருநீறின் மணம் அவரை சூழ்ந்தது. அந்த மணம் அவருக்கு மிகவும் பரிச்சயமானது. தோட்ட வீட்டில் அண்ணனைப் பார்க்கச் செல்கிற போதெல்லாம் அந்த மணத்தை அவர் சுவாசித்திருக்கின்றார். மெல்ல அவர் கண்களைத் திறந்து பார்த்தார்.பசுபதி ஒளிவெள்ளத்தின் நடுவே நிற்பது தெரிந்தது##
    When i read these lines i feel something... cant convert by words. Thank you...
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  9. Very nice and Interesting, please try to post twice a week :)

    ReplyDelete
  10. how many chapters more? Can't be patient...

    somebody asked to post twice a week. I do vote for it.

    ReplyDelete
  11. Replace Putthisaalitthana by Putthisaalitthanam

    ReplyDelete
  12. விஷ்ணுJuly 20, 2013 at 9:25 AM

    இப்போது தான் தங்கள் அமானுஷ்யன் கதையை நிலாச்சாரலில் படித்து முடித்தேன். அற்புதம். அற்புதம். அற்புதம். இதைப் படிக்கும்படி இணையத்தில் சிபாரிசு செய்த திரு சரவணகுமார் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

    பரமன் ரகசியத்தையும் அப்படி ஒரே மூச்சாகப் படித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். வியாழன் தோறும் காந்தமாக இங்கே இழுக்கும் படி அருமையாக எழுதும் தங்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. Welcome and thanks for your comments.
      இதை நாவலாக படிக்க ஆரம்பித்தேன் முடிவில் அதை வாழ்கையின் புத்தகமாக கருதுகிறேன். ஒரு சில நிலையான உண்மைகளையும், சத்தியங்களையும் பெரியோர்களும், ஞானி களும், சித்தர்களும் சொல்லி இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கு சில புரிதல்கள் தேவைபடுகிறது. எழுத்தாளர் திரு.என்.கணேசன் அவர்கள் இந்த நாவலில் பொருத்தமான இடங்களில், சரியான சூழ்நிலைகளில் அந்த புரிதல்களை விதைத்துவிடுகிறார். அவருடைய எழுத்துக்கள் படிபவருக்கு தெளிவையும் ,விழிப்புணர்வையும் உருவாக்குகிறது.
      இதனால் பலரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய படைப்புக்களான அமானுஷ்யன்,
      ஆழ்மனதின் அற்புதசக்திகள்
      https://www.facebook.com/AalmanathinArputhasakthikal பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
      https://www.facebook.com/pramidukalthesaththilinganaththedal
      மற்றும் BLOG இல் வெளியான பதிவுகளை https://www.facebook.com/groups/nganeshanfans/
      மூலமாக பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

      Delete
    2. உண்மை உண்மை சக்தியமான வார்த்தைகள் திரு சரவணக் குமார் ..,

      மனிதர்களில் எத்தனை நிறங்கள் ., அருமையான ஒரு நாவல் .[கடைசியில் வாசகர்களின் நச்சரிப்பால் அவசரமாக முடித்தாலும் அற்புதமான ஒரு முடிவு ], ., கடந்த 20 நாட்களாக தான் வலைப்பூவை வாசித்து வருகிறேன் .., ஜென் கதைகள் , சிறு கதைகள் என அனைத்தும் அற்புதம் ., ஆழமான கருத்துகள் ..,

      முதலில் அமானுஷ்யன் .நாவல் , படிக்கையில் பல பல இடங்களில் கண்கள் கலங்கியிருக்கின்றன ..., ஆனால் மனிதர்களில் எத்தனை நிறங்கள் படிக்கையில் ., நன்றாக சுவாரசியமாக இருந்தாலும் .., கதை முக்கால் பாகம் செல்லும் வரை ., எந்த ஒரு இடத்திலும் ., கண்கள் கலங்கவில்லை .., மிறகு மெல்ல மெல்ல அதுவும் கடைசியில் ,அருமையோ அருமை கண்கள் குளமாயின .., .., ஒரு வேண்டுகோள் அவசரமாக முடித்தமையால் பல சுவாரசியமான் சில பகுதிகளை.கொண்டு.., மீண்டும் ஒரு முறை "மனிதர்களில் எத்தனை நிறங்கள்" repair செய்து ., இங்கு வலைப்பூவில் pdf வில் அளித்தால் புதியதாக படிப்பவர்களுக்கு ., நன்றாக இருக்கும் என நினைக்கிறன்

      பரம (ன்) ரகசியம் ஒவ்வொரு பகுதியும் ., சிலிர்ப்புடன் .பிரமாதமாக நகருகின்றன ., வாழ்த்துக்கள் .,

      திரு .என் கணேசன் ., அவர்கள் அற்புதமான ., பரிபுரணமான .சத்தியமான மனிதராக இருப்பதால் தாம் .., அமானுஷ்யனில் ஒரு அக்ஷய் .., மனிதர்களில் எத்தனை நிறங்களில் சொலில் வடிக்க இயலா ஓர் அற்புத பாச , நேச உணர்வுகளுடன் சிவகாமி போன்ற படைப்புகளை உருவாக்க முடிகிறது ..., திரு.என் கணேசன் அவர்களுடன் அந்த உணர்வுகள் வாழ்வதால் தாம் இது போன்ற உணர்வுகளுடன் கூடிய பாத்திரங்களை வடிக்கமுடிகிறது ..,

      திரு .என் கணேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .!!!

      Delete
    3. சுந்தர்July 20, 2013 at 6:09 PM

      அமானுஷ்யன் பற்றி பேச ஆரம்பித்ததால் நானும் இங்கு சொல்ல ஆசைபடுகிறேன். அமானுஷ்யனை எத்தனை தடவை படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. சரவணகுமார் சொல்லி, புலிப்பாணியும் ஒத்துகிட்டது போல அது சுகமான அனுபவம். நான் அதற்கு முன் மனிதரில் எத்தனை நிறங்களின் சிவகாமி கேரக்டரின் ரசிகன். நல்ல அழுத்தமான கேரக்டர் அது. கடைசி கடைசியில் அழ வைத்து விட்டார் கணேசன். அந்த நாவல்களும் சரி இந்த பரம ரகசியமும் சரி புத்தகமாகவோ, சீரியலாகவோ, திரைப்படமாகவோ வந்தால் நன்றாக இருக்கும். நிறைய பேருக்கு போய் சேரும்.

      யூத்ஃபுல் விகடனில் ஆழ்மனதின் அற்புதசக்திகள் தொடராக வந்த போது என்னைப் பொன்றவர்கள் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தோம். அது நிறைவேறி விட்டது. இந்த ஆசையும் நிறைவேறுமா. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.



      Delete
    4. # அந்த நாவல்களும் சரி இந்த பரம ரகசியமும் சரி புத்தகமாகவோ, சீரியலாகவோ, திரைப்படமாகவோ வந்தால் நன்றாக இருக்கும். நிறைய பேருக்கு போய் சேரும் #

      அந்த ஆசையில் சிறு முயற்சி எடுத்துள்ளேன். அமானுஷ்யன் நாவலை (PDF,E-book )Director AR Murugadoss அவர்களின் e-mail ID க்கு அனுப்பியுள்ளேன். just a try...
      ஆழ்மனதின்அற்புதசக்திகள் அதற்கான நேரம் அமையும்பொழுது புத்தகமாக வந்ததுபோல் ஒருநாள் இந்த நாவல்களும் படமாக வரலாம் அல்லவா ?

      Delete
    5. சுந்தர்July 20, 2013 at 8:39 PM

      அமானுஷ்யனின் தீவிர ரசிகன் என்ற முறையில் ஆயிரம் நன்றிகள் தலைவா.

      Delete
    6. வாசக நண்பர்களே! தங்கள் அன்பு மழையில் நனைந்து விட்டேன். எழுதி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான பின்னரும் அமானுஷ்யன் நாவல் இத்தனை பேசப்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. திரு.சரவணகுமாரின் அன்பு கலந்த முயற்சிகளுக்கு என் பிரத்தியேக நன்றிகள்.

      Delete
  13. விஷ்ணுJuly 21, 2013 at 10:03 AM

    பரமன் ரகசியத்தை ரசித்து வரும் ரீடர்ஸ் யாராவது அமானுஷ்யன் படிக்கவில்லை என்றால் படிக்க திரு சரவணகுமார் தந்த லிங்க் பயன்படுத்தி படியுங்கள். ஒரே ஒரு வார்னிங். லீவு நாள்களில் படித்தால் ஒரே மூச்சாய் படித்து முடிக்கலாம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் -விஷ்ணு

    அமானுஷ்யன்
    மிகவும் அற்புதமான, விறுவிறுப்பு நிறைந்த, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, அனைவரும் படிக்க வேண்டிய நாவல். முதல் பக்கம் முதல் முடிவுறும் பக்கம் வரை உங்களை முழுமையாக ஆட்கொள்வான் இந்த அமானுஷ்யன்.
    கீழே உள்ள link மூலம் அமானுஷ்யன்(1), அமானுஷ்யன்(2) ....என்று select செய்து முழு இந்த நாவலையும் படிக்கலாம். இதை முன்னமே படித்து முடித்தவர்கள் தங்கள் கருத்துக்களை Comment செய்யவும்.
    http://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Ganesan

    ReplyDelete
  14. hi vishnu,
    Thanks for sharing.
    ஒரு சிலரால் மட்டுமே அவரது எழுத்துக்களில் உள்ள ஈர்ப்பை உணர்ந்துகொள்ள முடியும் . அதன் ஈர்ப்பை உணர்ந்து கொள்ளவும் அதைப்பற்றி கமெண்ட் செய்யவும் அவர்களின் ஆன்மா உயரும் நிலையிலும் , உயர்ந்த நிலையுலும் இருந்ததால் மட்டுமே சாத்தியம் எனபது என்னுடைய கருத்து. இதுவரை வெளியான எல்லாருடைய Comment லும் post படித்தவர்கள் சொல்லுவது என்னவென்றால் படிக்கும் பொழுது ஏற்படும் உணர்வுகள் நேரில் நடப்பது போன்றே உ ள்ளது என்பதுதான். இந்த உணர்வு மாற்றத்தை ஒரு சாதாரண எழுத்தாளரால் உருவாக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து. இதைப்பற்றி இங்கு விரிவாக பகிர்ந்துகொள்ள காரணமான விஷ்ணுவிற்கும் பகிர்ந்துகொண்ட புலிப்பாணி சித்தர் அடிமை மற்றும் சுந்தர் அவர்களுக்கும் என் நன்றிகள்.
    திரு.என். கணேஷன் அவர்களுக்கு,
    இதுவரை உங்களிடம் இருந்து வெளிப்பட்ட எழுத்துக்கள் கருத்தும், கதையும் மட்டுமல்ல. ஒவ்வொன்றும் விதைகள். காலபோக்கில் இவைகள் கண்டிப்பாக செடியாகவும், மரமாகவும், விழுதாகவும் படர்ந்து செல்லும். இறுதிவரை அதன் உரமாக, வாசகர்களாகிய நாங்கள் இருப்போம். இறுதிவரை அதன் உரமாக, வாசகர்களாகிய நாங்கள் இருப்போம்.
    இப்படிக்கு அன்புடன்
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  15. I accept everyone's comment. Manitharil ethanai nirangal and Amanusyan rendu novelsm romba great novels.

    Full novella muthal muthalil padkia petravargal very lucky guys.

    Maheshku eppadi konjam kuda pasamilamal pochu? Parameswaranku athu eppadi theriyama pochu...

    Sivakami and Akshai characters nanga maraca ninicha kuda maraca mudiyathu Ganesan Sir. Manathil pathinthu vitathu.

    Majestic,beautiful and loving good character ethanai perai naama lifela parkraom? Sivakami mathiri innum oru character vara mudiyumnu thonala.

    ReplyDelete