ஒரேயடியாக
உச்சிக்குப் போய் விட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பெருந்துயருக்குக்
காரணமாய் இருக்கின்றது.
- காபெட்
கடமையும் இந்த நாளுமே
நம்முடையவை. பயன்களும், எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
-
ஹாஸ்லிட்
ஆசிரியராக
விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும்.
-
டிரைடன்
ஒருவர் புன்னகை
புரியும் விதத்தில் இருந்தே அவர் குணத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம். சிலர்
புன்னகைப்பதே இல்லை. ஆனால் இளிக்க மட்டும் செய்வார்கள்.
-
போவீ
பொறாமையுள்ளவன் தன்
தாழ்ச்சியை எப்போதும் உணர்ந்து இருப்பான்.
-
பிளினி
மருந்துக்களில்
முதன்மையானவை ஓய்வும் உபவாசமும்.
-
ஃபிராங்க்ளின்
ஒன்றுக்கும்
பிரயோசனமில்லை என்று தள்ளி விடும் படியானவராக உள்ள எவரையும் இது வரையில் நான்
பார்த்ததில்லை. சரியான சமயம் வாய்த்தால் ஏதாவதொரு வகையில் எவரும் பயன்படக் கூடும்.
-
ஹென்றி ஃபோர்டு
வெறும் பேச்சும்,
பெரும் பேச்சும் பேசி செயல்படாமல் சோம்பிக் கிடப்பவர்கள் வழிகாட்டும் தலைவர்கள்
என்ற மதிப்பினைப் பெறுகின்றனர் என்றால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற வழியில்
நடப்பவர்கள் எத்தகைய லட்சியவாதிகளாகத் திகழ்வர் என்பதைக் கூறவும் வேண்டுமா?
-
மான்செஸ்டர் கார்டியன்
சோம்பேறித்தனம், கர்வத்தால்
மனம் கெடுதல், தடுமாற்றம், கூட்டமாக வீண் அரட்டையடித்தல், முரட்டுப் பிடிவாதம்,
போலித் தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழு கெட்ட தன்மைகளும் நம்மை சுற்றி வளைத்துக்
கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்.
-
விதுர நீதி
ஒரு ஏழையான
முட்டாளுக்கு நிறைய பணம் கிடைத்தால் அவன் பணக்கார முட்டாளாகத் தான் மாற முடியும்.
-
ஆபிரகாம் மில்லர்
தொகுப்பு :
என்.கணேசன்
அனைவருக்கும் என் உளம்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
-என்.கணேசன்
-என்.கணேசன்
அட... ஆமா சார்... அனைத்தும் அனுபவ உண்மை வரிகள்...
ReplyDeleteகுடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி நண்பர்களே! அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete-என்.கணேசன்
அருமையான வரிகள்.
ReplyDeleteதொகுப்புக்கு வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பின்
ReplyDeleteபணம் பொருள் நாம் நினைத்த விதம் கிடைக்கும்..