ஜுலை 21 முதல் 31 வரை சென்னை இராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 159ல் எனது நூல்களை சிறப்புத்தள்ளுபடியுடன் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

Monday, February 27, 2012

அட ஆமாயில்ல! 2மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து.  
- பாரதியார்ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.
                                  -  டால்ஸ்டாய்


உயர்ந்த பொருள்களையே புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை.
                               - பி. எஃப். பெய்லி


நாமே நமக்குச் சொல்ல முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை மதிக்க முடியாத நண்பனாவான்.
-         எமர்சன்


நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தையே காட்டுகின்றனர்.
-         கதே


நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும். ஆனால் நாம் அப்படிக் கருத வேண்டும்.
-         லாங் ஃபெல்லோ


மனிதனை எது அடிமையாக்குகிறதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
                                   - போப்


அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவது போலாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால் அது ஏதோ அலையின் ஓசை போல், அதில் பயம் தெளிந்து விடும்.
-         கோல்பெர்ட்


மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம்.
                              - தாம்சன்


முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து எடுக்கும் போது பயங்கரமான வேதனை ஏற்படும். அப்படி எடுக்கா விட்டாலோ அது அழிவையே ஏற்படுத்தி விடும்.
-         ஜெரிமி டெய்லர்


உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
-         ஷேக்ஸ்பியர்


ஓர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டாலும் அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாக நீ பற்றிக் கொண்டிருந்தாயானால் உண்மையை விட நீயே மேலானவன் என்று கருதுவதாகும்.
                             - வென்னிஸ்


8 comments:

 1. உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
  - ஷேக்ஸ்பியர்
  அருமையான கருத்துகள் பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
  Replies
  1. நல்ல பதிவ,

   வாழுதுகள்!

   தன் முன்னே நிற்பவர்கலயும் தாம் தான் என்று நிநைதால் எந்த பிரச்சனியும் தோன்றது.

   - இராமனுசர்.

   Delete
 2. அட ! உண்மை சார் ! சிறப்பான பதிவு !

  ReplyDelete
 3. மிக மிக அருமை........

  ReplyDelete
 4. அருமையான தேர்வு... வாழ்த்துகள் .

  ReplyDelete
 5. 'நித்திலம்' அறிமுகத்தில் இங்கே வந்தேன். பிரமித்துப் போய் விலக மனமில்லாமல் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.//
  - ஷேக்ஸ்பியர்

  உண்மை.

  தேவையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 7. super sir! Pls continue Mr. Ganesh

  ReplyDelete