என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Wednesday, February 15, 2012

எந்தக் காதல் எது வரை?


அழகைக் கண்டு
பழகும் காதல்
இளமை முடிந்தால்
விலகிப் போகும்!

மனதைப் பார்த்து
உணரும் காதல்
குணம் மாறினால்
ரணமாய் விடும்!

செல்வம் கண்டு
கொள்ளும் காதல்
செல்வம் போனால்
சேர்ந்தே போகும்!

ஆத்மார்த்தமாய்
பூத்திடும் காதல்
நீத்திடும் உயிர்வரை
நீங்காது வாழ்ந்திடும்!

வந்த காதல்
எந்த நாள்வரை?
இந்தக் கணக்கினில்
அறிந்து கொள்வீர்!


- என்.கணேசன்

5 comments:

 1. எளிமை+அருமை!

  ReplyDelete
 2. அருமையான படைப்பு வாழ்த்துகள்

  http://kathalthesam-vathany.blogspot.com/

  ReplyDelete
 3. ஆத்மார்த்தமாய்
  பூத்திடும் காதல் athu yennanu solunga sir...? unmaiyeliye therinjukkanumnu viruppam...

  ReplyDelete
  Replies
  1. அதை விளக்க முடியாது. இதய ஆழத்தில் உணர மட்டுமே முடியும்.

   Delete
 4. காதலை எப்படி உணர்ந்துகொள்வது ? இது தான் காதல் என்று .
  எனது மனதில் எனக்கு புரியாத பல எண்ணங்கள் தோன்றுகின்றன
  இந்த நேரத்தில் நான் என்ன செய்வது ? எனது வயது 23

  ReplyDelete