81. கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்காதே.
உன் பாதையும் வழுக்கல் நிறைந்தது.
82. கவனமில்லாத காவல் கவனமுள்ள பகைவனை
அழைக்கும்.
83. போக்கிரி முத்தமிட்டால் உன் பற்கள்
சரியாக உள்ளனவா என்று எண்ணிப்பார்.
84. தன் குறைகளைக் கவனிப்பவனுக்குப் பிறர்
குறைகளைக் கவனிக்க நேரம் இருக்காது.
85. மரியாதை காட்டினால் பூனைக்கும்
மகிழ்ச்சி தான்.
86. வெளியே வர வழி தெரிந்து கொண்டு உள்ளே
நுழை.
87. அரசன் பிரபுவை உண்டாக்கலாம். ஆனால்
கனவானைக் கடவுளே உண்டாக்க வேண்டும்.
88. நூல்கள் மனதோடும், நண்பர்கள்
இதயத்தோடும், இறைவன் ஆன்மாவோடும், மற்றவர்கள் செவியுடனும் பேசுகிறார்கள்.
89. குதிரையைக் கண்டதும் பிரயாணி
நொண்டியாகி விடுகிறான்.
90. மற்றெல்லாப் பொருள்களும் அதிக மென்மை
அடைந்தால் ஒடிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் அதிக வலிமை அடைந்தால் ஒடிந்து
விடுகிறான்.
தொகுப்பு: என். கணேசன்
அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDelete