· இருவேறு உள்ளங்களாய்
தனித்தனியாய் இருந்தவர்கள் திருமணத்தால் ஒன்றாகி விடுகிறார்கள். எந்த ஒருவன் ஆவது
என்று அவர்கள் தீர்மானிக்க முடியாத போது தான் தொல்லையே தொடங்குகிறது
- - ஆன்வில் கோரஸ்
·
தீர்க்கதரிசிகள்
தங்களுடைய நாக்கினால் பேசுவதில்லை. அவர்கள் வாழ்க்கையின் மூலமாகவே பேசுகிறார்கள்.
-
மகாத்மா காந்தி
·
அவனால்
உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் முடியும் போது அக்கலைஞனுக்கு ஒரு சின்ன
அதிருப்தியாவது தோன்றத்தான் செய்கிறது. அப்படித் தோன்றுவது மிகவும் நல்லதாகும்.
ஏனென்றால் அடுத்த படைப்புக்கான கருவினை அது தான் உற்பத்தியாக்குகின்றது.
-
பெதோல்டு ஆபக்
·
இந்த உலகில் நாம்
செய்து விட்ட தவறுகளுக்குத் தருகின்ற கௌரவமான பெயர் தான் அனுபவம்.
-
ஆஸ்கார் ஒயில்டு
·
ஆயிரமாயிரம் பணம்
கொடுத்து ஒரு உயர்ந்த ரக நாயை வாங்கி விடலாம். ஆனால் அன்பு ஒன்றால் தான் அதன் வாலை
அசைக்க முடியும்.
-
நில் ஒஷிரா
·
எந்த வேலையையும்
செய்யாமல் உண்டு உறங்கி வாழ்பவன் மட்டும் சோம்பேறி அல்ல. தற்போது செய்து
கொண்டிருக்கும் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து முடிக்க தன்னிடம் திறமை இருந்து,
வசதி வாய்ப்புகள் காணப்பட்டாலும் அதனைச் செய்யாமல் இருக்கின்றானே அவனும் சோம்பேறி
தான்.
-
சாக்ரடீஸ்
·
இந்த உலகமானது பலவித
பயிற்சிகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிற பயிற்சிசாலை. நம்மை
வலிமையுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் இங்கு வந்து பிறந்திருக்கிறோம்.
-
விவேகானந்தர்
*தன்னை விட சிறந்த அறிவாளி உலகத்தில்
யாருமில்லை என்று எண்ணுபவன் முட்டாளின்
முதல் தரம் மட்டுமல்ல. மிக மிக ஆபத்தானவனும் கூட.
- டைதர்
·
ஆயிரம் நன்றி கெட்ட
மனிதர்களுக்குக் கூட நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன், அதன் மூலம் ஒரு
நன்றியுள்ளவனை எனக்குக் கண்டு பிடிக்க முடியும் என்றால்.
-
செனகா
தொகுப்பு: என்.கணேசன்
No comments:
Post a Comment