41) கடவுள் பேரால் பிச்சை எடுப்பவன் இரண்டு
பேருக்கு பிச்சை எடுக்கிறான்.
42) கவலை பரிகாரமல்ல.
43) இரத்தத்தில் கையை நனைத்தவன் அதைக்
கண்ணீரால் தான் கழுவ வேண்டும்.
44) தன் பாவங்களைப் பற்றி பெருமையாய்
பேசுபவன் இரண்டு பாவங்கள் செய்தவனாகிறான்.
45) செயல் தான் மிகச் சுருக்கமான அழகான
பதில்.
46) நாம் இழைக்கும் தீங்குகளும், நமக்கு
இழைக்கப்படும் தீங்குகளும் ஒரே தராசில் நிறுத்தப்படுவதில்லை.
47) சொற்ப கவலை பேசும். பெருங்கவலை மௌனமாக
இருக்கும்.
48) ஏழைக்கு தான் செல்வந்தனாவோம் என்ற
நம்பிக்கையும், செல்வந்தனுக்கு ஏழையாகி விடுவோமோ என்ற பயமும் எப்போதும் இருந்து
கொண்டே இருக்கும்.
49) மலர்ந்த முகம் சாதாரண உணவையே
விருந்தாக்கி விடும்.
50) சுறுசுறுப்பான தேனீக்கு துக்கப்பட
நேரமில்லை.
-
தொகுப்பு :
என்.கணேசன்
நல்ல தொகுப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
எல்லாமே நன்றாய் இருக்கிறது. ஏழைக்கு தான் செல்வந்தனாவோம் என்ற நமிக்கையை விட ஏக்கம்தான் அதிகம் இருக்கும்! :)))
ReplyDeleteஆஹா.... நமிக்கை என்று டைப் செய்து விட்டேனா... மன்னிக்கவும்! நம்பிக்கை என்றுபடிக்கவும்! :)))))))
ReplyDelete#47 - very true
ReplyDeleteஅருமை. அருமை
ReplyDelete