என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, June 19, 2014

விரைவில் என் புதிய நாவல் “புத்தம் சரணம் கச்சாமி!”அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம்.

பரம(ன்) இரகசியத்தைத் தொடர்ந்து பல வாசகர்கள் புதிய நாவல் ஒன்றை எழுதச் சொல்லி என்னை வற்புறுத்தி வருகிறார்கள். பரம(ன்) இரகசியம் நாவல் பெற்ற வரவேற்பு அபாரமானது, நான் இந்த அளவில் எதிர்பாராதது. அதற்கு அடுத்ததாக ஒரு நாவல் என்றால் கண்டிப்பாக அது பரம(ன்) இரகசியத்தோடு ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த நாவலைப் படைத்து விட்டு அதை விடச் சிறந்ததாக இல்லா விட்டாலும் ஓரளவு இணையாகவாவது ஒரு நாவலைப் படைக்கா விட்டால் அது சோபை இழந்து விடும் அபாயம் இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டே வாசகர்களின் அன்பான கட்டளைக்கு இணங்க புத்தம் சரணம் கச்சாமி!என்ற புதியதொரு நாவலை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இந்த நாவலிலும் ஆன்மிகம், குடும்பம், காதல், பாசம், சதி, சாகசம், திகில், அமானுஷ்யம், மர்மம், ஆகிய எல்லாமும் உண்டு.

இந்த நாவலின் ஒரு முக்கிய கதாபாத்திரம் என் பழைய வாசகர்களுக்கு மிகவும் பிடித்த, பரிச்சயமான கதாபாத்திரம் தான். அமானுஷ்யன் அக்‌ஷய் தான் அது.  அமானுஷ்யனின் அக்‌ஷய் மற்றும் சில கதாபாத்திரங்கள் இதில் இடம் பிடிக்கிறார்கள். ஆனால் இந்த நாவல் தனிக்கதைக்களம் தான். அதனால் அமானுஷ்யன் படித்து தான் இதைப் படிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தேவைப்படும் ஒருசில இடங்களில் பழைய சம்பவங்கள் புதிய நாவலிலும் சாரம் குறையாமல் சுருக்கமாக சொல்லப்படும் என்பதால் புதிய வாசகர்களுக்கு சிறிதும் சிரமம் இருக்காது.

பரம(ன்) இரகசியத்தைப் போலவே இந்த நாவலும் ஒவ்வொரு வியாழனும் 2014 ஜுலை 3 ஆம் தேதி முதல் இந்த வலைப்பூவில் பதிவிடப்படும். அடுத்தது என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் நாவல் மிக சுவாரசியமாக இருக்கும் என்று மட்டுமல்லாமல் உங்கள் எண்ண அலைவரிசைகளை மேம்படுத்தக்கூடியதாகவும், மேலான உண்மைகளைக் கதை வடிவில் நுட்பமாகக் கற்றுக் கொடுக்கும்படியாகவும் இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன்.

அன்புடன்
உங்கள் (என்) கணேசன்18 comments:

 1. Exciting news Sir. Waiting for July 3

  ReplyDelete
 2. மிகவும் மகிழ்ச்சி ஜி... இனிப்பான செய்திக்கு நன்றி. அதுவும் அமானுஷ்யன் அக்‌ஷயை மீண்டும் தேர்ந்தெடுத்ததது எங்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
  By,
  https://www.facebook.com/groups/nganeshanfans/

  ReplyDelete
 3. விஷ்ணுJune 19, 2014 at 7:53 PM

  வியாழக்கிழமைகளுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது. இந்த செய்தி ஏற்படுத்திய மகிழ்ச்சியை எப்படி தெரிவிப்பது என்றே தெரியவில்லை கணேசன் சார். புத்தம் சரணம் கச்சாமி படிக்க காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  ReplyDelete
 4. Excellent to know Ganesan sir, something was missing on Thursday all these days after Paraman Raghasyam, hope to revive Thursdays again with your story...All the best...Waiting for July 3rd...

  ReplyDelete
 5. It is really exciting news sir. The double treat is this story with Akshay. I am sure its also going to be a great success. Before that, you mention that, there may be a chance of publishing "Amaanushyan" navel. Please publish that as a book sir.

  I can not say all the best but we are all wishing you for this novel sir.

  ReplyDelete
 6. great and waiting for thrusday...

  ReplyDelete
 7. வியாழக்கிழமைக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 8. Great News Sir. Excepting Thursday evening...

  ReplyDelete
 9. Tku very much sir pl revive the Thursdays

  ReplyDelete
 10. Thanks for the good news sir:-)

  ReplyDelete
 11. Without reading the July 3rd properly, refreshed this page for multiple times on Thursday 26th and got disappointed. Later read your announcement and now waiting with anxiety for the next Thursday. :)

  ReplyDelete
 12. வரதராஜன்June 27, 2014 at 8:44 PM

  கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை என்.கணேசன் சார். இனி வாரா வாரம் தங்கள் கதை விருந்தில் நாங்கள் மகிழ்வோம். பரமனுக்கு இணையாக இந்த நாவலும் இருக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 13. ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.ஆசிரியரே !

  ReplyDelete