என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Friday, June 21, 2013

துக்ளக்கில் ’ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ விமர்சனம்


அன்பு வாசகர்களே,
இந்த வார (26-06-2013) துக்ளக்கில் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் குறித்து கீழ்கண்ட விமரிசனம் வந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் 
என்.கணேசன்
புத்தக விமர்சனம்: ஆழ்மனதின் அற்புத சக்திகள் 
ஆசிரியர்: என்.கணேசன்
வெளியீடு: ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் லிமிடெட், சென்னை-83 செல்:9600123146
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மகத்தான ஆழ்மனசக்தி உண்டு. முறையான பயிற்சிகளின் மூலம் அத்தகைய சக்தி கைவரப்பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியவர்களைச் சித்தர்கள், மகான்கள் என்று அழைக்கிறோம். வெளிநாடுகளிலும் இத்தகையவர்கள் உண்டு.
இவர்கள் புரியும் அற்புதங்கள் சில சமயம் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றாது. ஆனால் அவை உண்மை. அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை என்றார் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த அற்புதங்கள். ஆழ்மன சக்தியில் ஓரளவு பரிச்சயம் பெற்றுள்ள இந்நூலாசிரியர், இது குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார்.
1960களில் அமெரிக்காவில் வாழ்ந்த ஜோசப் டிலூயிஸ் என்பவர், அங்கு நடந்த பல விபத்துக்களை முன்கூட்டியே அறிவித்த நிகழ்ச்சிகள். அற்புதங்களை நம்பாத ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினையே வியக்க வைத்த வாசிலிவ் என்பவரின் ஆழ்மன சக்திகள்.
ஆவியுலகத் தகவல்கள், மறுபிறவிநினைவுகள், ஆழ்மன சக்திகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஆல்ஃபா அலைகள், யோகா, தியானம் பற்றிய குறிப்புகளும் பயிற்சிகளும், நோய் தீர்க்கும் ஆழ்மன சக்திகள்.
உடலை விட்டு ஆத்மா எப்படி வெளியேறுகிறது, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பன போன்ற ஆய்வுகள், பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது போன்ற பல விஷயங்களை 60 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் திகிலும் திகைப்புமாக இருக்கிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 26/6/2013.

12 comments:

 1. அன்பருக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. வரதராஜன்June 22, 2013 at 6:43 AM

  தங்களின் ஆழ்மனதின் அற்புத சக்தி நூல் ஒவ்வொருவரும் தங்கள் கையில் வைத்திருக்க வேண்டிய நூல் தான். துக்ளக் போன்ற பத்திரிக்கைகள் கூட மதிப்புரை எழுதி பாராட்டுவது இதை உறுதிப்படுத்துகிறது. வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 4. உங்கள் நூல்களுக்கான தகவல்களை எங்கேயிருந்து திரட்டுகிறீர்கள். இரண்டு நூல்களையும் (பிரம்ட் மற்றும் ஆழ்மனம்) படித்தேன். அற்புதம்.

  ReplyDelete
 5. யோகம் ராஜயோகம்
  அனுமன் தாயும் தந்தையும் இணைந்த நீமிஷத்தில்
  கணபதி ராயன் வலம் சுழிக்க
  ஆனந்த யோகம் ஆரம்பம் .................

  ReplyDelete
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள் கணேசன் சார்......

  ReplyDelete
 7. மனமார்ந்த வாழ்த்துகள் கணேசன் சார்

  ReplyDelete
 8. Is it available in Landmark or any famous bookshops, Kindly let me know, how and where I can get your books, I would like to have a copy.

  ReplyDelete
  Replies
  1. You may contact the publisher regarding the bookshops where the books are available in your city through phone no. 9600123146 of the publisher.

   Delete
 9. Thanks I got the book near to my home. I would like to buy other book too once I complete this. I have read few pages from it, very interesting lot of things to discuss and debate.

  ReplyDelete
 10. is it available in the flipkart or any online store ???

  ReplyDelete