என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, March 4, 2013

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 6
உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.

ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்

இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.

உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


தொகுப்பு: என்.கணேசன்

5 comments:

 1. நல்ல பழமொழிகள்... நன்றி...

  ReplyDelete
 2. பதிவு மிகவும் அருமை . எப்போதோ கேட்ட பழமொழியானாலும் மீண்டும் அசை போடுவதில் தனி சுகமே.வாழ்த்துக்கள்.
  <<>> கோ.மீ.அபுபக்கர்,
  கல்லிடைக்குறிச்சி

  ReplyDelete
 3. நல்ல பதிவுகள், ஆனால் விளக்கமுடன் இருந்தால் மிகவும் நன்றாய் இருக்கும்.

  ReplyDelete
 4. SANKARA NARAYANAN RARAKAL MANGALAMJune 2, 2013 at 10:10 AM

  மிக அற்புதமான பழமொழிகள். தொகுத்து வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.


  ReplyDelete