என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, December 24, 2012

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 5


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.

-      
  -   தொகுப்பு: என்.கணேசன்


11 comments:

 1. //பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.//
  இன்றைய எனது மனநிலைக்கு ஏற்ற பழமொழி.

  ReplyDelete
 2. பழமொழிகள் அருமை.

  ReplyDelete
 3. தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.
  அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.
  ////
  கணேசன் சார்.......இதை மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்.....

  ReplyDelete
  Replies
  1. ஆளாளுக்கு அதிகாரம் செய்து கடைசியில் உலையில் போட அரிசி கூட இல்லாத நிலைமை என்கிறார்கள்.

   வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நிறைய செலவு ஆகும், செலவாவதே தெரியாது என்பதைத் தான் வீடு அசையாமல் தின்னும் என்கிறார்கள்.

   Delete
  2. ரொம்ப நன்றிங்

   Delete
 4. கடுங்காற்று மழைக் கூட்டும். கடும் சினேகம் பகைக் கூட்டும்

  கணேசன் சார்.......இதை மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்.....

  ReplyDelete
  Replies
  1. கடுமையான காற்று மழையை அதிகரிகரிக்கச் செய்யும். அதே போல அளவுக்கு அதிகமான சினேகமும் ஒரு நாள் பகையில் முடியும். எனவே எதிலும் ஒரு அளவு இருப்பது நல்லது என்று இந்தப் பழமொழி எச்சரிக்கிறது.

   Delete