தீபக் அன்று அதிகாலை மிக உற்சாகமாக நாகராஜை சந்திக்கக் கிளம்பினான். முந்தாநாள்
கொடிவேரி நீர்வீழ்ச்சிக்குப் போய் விட்டு வந்து நள்ளிரவில் தான் உறங்கப் போனதால் நேற்று
அதிகாலையில் அவனால் எழுந்திருக்க முடியவில்லை. அதனால் அவன் நேற்று காலையும் நாகராஜைச் சந்திக்க முடியவில்லை. அதற்கு
முன்பும் நாகராஜ் விசேஷ பூஜை எதோ ஒன்றில் ஈடுபட்டிருந்ததால் இரண்டு மூன்று நாட்கள்
சந்திக்க முடியவில்லை. நாகராஜை இத்தனை நாட்கள் சந்திக்காமல் இருப்பது ஏதோ ஒரு இழப்பு
போல் ஏன் தோன்றுகிறது என்று அவனுக்கு விளங்கவில்லை…
வழியில் நாகராஜும், சுதர்சனும்
கிடைத்தார்கள். “ஹாய் அங்கிள்…” என்று உற்சாகமாகச்
சொன்னபடியே நெருங்கிக் கை கொடுத்து உரிமையோடு நாகராஜின் கையைப் பிடித்துக் கொண்டே தீபக்
நடக்க ஆரம்பித்தான். அவனைப் பார்த்து நாகராஜும் மகிழ்ச்சியடைந்தது போலிருந்தது.
“நேத்து
காலைல உன்னைப் பார்க்க முடியலையே. என்ன ஆச்சு?” என்று நாகராஜ் கேட்டான்.
“முந்தாநாள்
கொடிவேரி ஃபால்ஸ் போய் வீடு திரும்பறப்ப லேட்டாயிடுச்சு. அதனால காலைல
சீக்கிரம் எழுந்திருக்க முடியலை.. ஏன் அங்கிள் என்னை நீங்க மிஸ் பண்ணினீங்களா?” என்று குறும்பான
குழந்தைத்தனத்தோடு தீபக் கேட்டதும் நாகராஜின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“ஆமா பக்கத்துல
லொட லொடன்னு சத்தம் கேட்காம வாக்கிங் போன மாதிரியே தோணல. ஃபால்ஸ்ல
தண்ணி நிறைய இருந்துச்சா?….”
லொட லொட சத்தம் பற்றி சொன்னதற்குப்
புன்னகைத்தபடியே தீபக் “ஆமா அங்கிள். நானும் என் ஃப்ரண்ட்ஸும்
நேரம் போகறதே தெரியாம குளிச்சோம்…” என்றவன் உடனடியாக நினைவு வந்தவனாகச் சொன்னான். “அங்கே எனக்கு
மயிர்க்கூச்செறியற மாதிரி ஒரு அனுபவம் நடந்துச்சு அங்கிள்…. திடீர்னு
எனக்கு நாங்க எல்லாரும் குளிக்கிறது தெரியல. அதுக்குப்
பதிலா வேற மூனு பசங்க குளிக்கிற காட்சி தெரிய ஆரம்பிச்சுது…. எனக்கு
ஒன்னுமே புரியலை…. அந்த மூனு பசங்களும் எங்கள மாதிரியே அனுபவிச்சு குளிச்சுகிட்டிருந்தாங்க… வேற யாரும்
எனக்குத் தெரியல…. கொஞ்ச நேரம் அப்படியே அந்தக் காட்சி தெரிஞ்சுது. பிறகு அந்தக்
காட்சி மறைஞ்சுடுச்சு. எனக்கு குப்புன்னு வியர்த்துடுச்சு அங்கிள். ஏன் அந்த
மாதிரி நடந்துச்சுன்னு தெரியலை…. அதுக்கு என்ன அர்த்தம் அங்கிள்?”
சுதர்சன் முகம் ஒருவிதமாக மாறியது. நாகராஜையே
கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால் தீபக் அதைக் கவனிக்கவில்லை. நாகராஜ்
யோசிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். “அந்த மூனு
பேர்ல யாராவது உனக்குத் தெரிஞ்சவங்க இருந்தாங்களா?”
“தண்ணிக்கு
நடுவுல மூனு பேர்ல யார் முகமும் தெளிவா தெரியல அங்கிள்.” என்ற தீபக், நாகராஜ்
எதாவது விளக்கம் கொடுப்பான் என்று எதிர்பார்த்தவனாக அவனையே பார்த்தபடி நடந்தான்.
“மூனு பேருமே
உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா இருக்கலாம். அவங்க எப்பவாவது
அங்கே சேர்ந்து குளிக்கப்போயிருக்கலாம். அந்தப் பழைய காட்சி
உனக்கு ஒளிபரப்பான மாதிரி தோணுது…”
தீபக் திகைத்தான். அப்படி
ஏன் ஒளிபரப்பாக வேண்டும் என்று திகைப்பு குறையாமல் யோசித்தவனுக்கு சத்தியமங்கலத்தில்
பிரதான சாலையிலிருந்து திடீரென்று
குறுக்குத் தெருவில் திரும்பி அந்த முதியோர் வீட்டின் முன் தங்கள் கார் நின்று போனதைச்
சொல்லி அதற்கான காரணத்தையும் கேட்கத் தோன்றவே அந்த நிகழ்ச்சியைச் சொல்ல ஆரம்பித்தான்.
தீபக் பரந்தாமன் – அலமேலு
தம்பதியரைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டே
நாகராஜ் நடந்தான். தீபக்கையும், நாகராஜையும்
மாறி மாறி கூர்ந்து பார்த்துக் கொண்டே சுதர்சனும் நடந்தான்.
“... அங்கிள்
அந்த மாதிரி ஒரு அன்பான தாத்தா பாட்டி நமக்கில்லையேன்னு நானும் என் ஃப்ரண்ட்ஸும் ஏக்கத்தோட
பேசிகிட்டே வந்தோம். இன்னொரு தடவை அவங்களைப் பார்க்கறதுக்காகவே போகணும்னு கூட
பேசிகிட்டோம். ஏன் அப்படி என்னையுமறியாம அந்த ரோட்ல திரும்பினேன், ஏன் அந்த
வீட்டு முன்னாடி சரியா அந்தக் கார் நின்னுச்சுன்னு இப்பவும் எங்களுக்குப் புரியல. இதுக்கெல்லாம்
என்ன அர்த்தம் அங்கிள்?” என்று கேட்டுவிட்டு தீபக் மிகுந்த எதிர்பார்ப்போடு நாகராஜைப்
பார்த்தான்.
நாகராஜ் ஒரு நிமிடம் எதுவும் சொல்லாமல்
நடந்தான். பின் மெல்லச் சொன்னான். “போன ஜென்மத்துல
அவங்க ரெண்டு பேரும் உன் தாத்தா பாட்டியா இருந்திருக்கலாம்...
உனக்கு அவங்களையும், அவங்களுக்கு உன்னையும் காண்பிக்கணும்னு விதி நினைச்சிருக்கலாம்...”
“ஏன் விதி
இத்தனை வருஷமா நினைக்காம இப்ப அப்படி நினைக்குது?” தீபக் யோசனையுடன்
கேட்டான்.
அந்தக் கேள்வி நாகராஜின் முகத்தில்
ஒரு புன்னகையை விரிய விட்டது. “அதை விதி கிட்ட தான் கேட்கணும்”
“நீங்க உங்க
சக்தியை வெச்சு விதி கிட்ட கேட்டு சொல்லக்கூடாதா?”
நாகராஜ் சிரித்து விட்டான். “நான் உனக்கு
அதிகமா இடம் கொடுக்கறேன் போலத் தெரியுது. சுதர்சன், நாம இனிமே
வாக்கிங் போகிற நேரத்தை மாத்திக்கலாம்... இவனோட ஹிம்சை தாங்கல....”
சுதர்சனும் புன்னகைக்க தீபக் எந்தப்
பாதிப்புமடையாமல் சொன்னான். “நீங்க மாத்திகிட்டா நானும் அதுக்குத் தகுந்த மாதிரி வாக்கிங்
வர்ற நேரத்தை மாத்திக்குவேன். அப்படியெல்லாம் நீங்க என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது
அங்கிள்...”
சொல்லி விட்டு நாகராஜின் விரல்களை தீபக்
இறுக்கிப் பிடித்துக் கொள்ள நாகராஜ் அவனை அன்பாக ஒரு முறை பார்த்து விட்டு மவுனமாக நடந்தான். சிறிது
நேரம் மூவரும் எதுவும் பேசவில்லை.
பின் மெல்ல தீபக் சொன்னான். “எங்கம்மாவும்
உங்களை ஒரு தடவை சந்திக்கணும்னு சொன்னாங்க அங்கிள்...”
“ஐயோ உன்னையே
சமாளிக்க முடியலை.... உங்கம்மாவுமா?”
“சேச்சே...
எங்கம்மா என்னை மாதிரியெல்லாம் தொந்திரவு செய்ய மாட்டாங்க. பக்கா டீசண்டு....”
என்று தீபக் சொல்ல நாகராஜ் சிரித்துக் கொண்டே சொன்னான். “அப்ப நீ
டீசண்ட் இல்லைன்னு நீயே ஒத்துக்கறே”
“உங்க கிட்ட
நான் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கறேன் அவ்வளவு தான். நான் நினைக்கிறேன், போன ஜென்மத்தில்
அந்த சத்தியமங்கலத்துப் பாட்டி தாத்தா எனக்கு பாட்டி தாத்தாவா இருந்திருக்கலாம்கிற
மாதிரி நான் உங்க மகனாய் இருந்திருக்கலாம்னு... அதனால தான்
நான் உங்க கிட்ட அதிக உரிமை எடுத்துக்கறேனோ என்னவோ”
நாகராஜ் ஒன்றும் சொல்லாமலிருக்கவே தீபக்
கேட்டான். “என்ன அங்கிள் எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?”
நாகராஜ் பேசிய போது அவன் குரல் கரகரத்தது. “ஒரு காலத்துல
இருந்த ஒருத்தன் ஞாபகம் வந்துச்சு... அவனும் உன்னை மாதிரி
தான் இருந்தான்....”
"யாரவன், அவனுக்கும்
உங்களுக்கும் என்ன உறவு" என்று கேட்க தீபக் வாயெடுப்பதற்குள் அவர்கள் நாகராஜின் வீடு
வந்து சேர்ந்து விட்டார்கள்.
காளிங்க சுவாமியின் உக்கிர பூஜை நடந்து இரண்டு நாட்கள் கழிந்து
விட்டன. விசேஷ நாகரத்தினம் இப்போது நாகராஜ் மகராஜிடம் இருக்கின்றது என்பதையும், அந்த
விசேஷ நாகரத்தினம் நீண்ட நாட்கள் அவனிடம் இருக்காது என்று மாகாளி சொல்லியிருப்பதையும்
அவர் தன் இரண்டு சிஷ்யர்களிடமும் தெரிவித்திருந்தார். அடுத்து என்ன செய்யப் போகிறார்
என்பதை அவர் அவர்களிடம் இன்னும் சொல்லாததால் இரண்டு சீடர்களும் தவிப்பில் இருந்தார்கள்.
ஆயிரம் வருடங்களுக்கு
ஒரு முறை வரக்கூடிய அதிர்ஷ்ட காலத்தில் பிறந்திருப்பதே நம் பாக்கியம் என்று காளிங்க
சுவாமி அவர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறார். அந்தக் காளி கோயிலில் குறைந்த பட்சமாக
ஆயிரம் பாம்புகளாவது இருக்கும். அத்தனை பாம்புகளும் காளிங்க சுவாமியின் மந்திரசக்திக்குக்
கட்டுப்பட்டவை. அவை
இது வரை அவருக்கோ, அந்தச் சீடர்களுக்கோ எந்தத் தீங்கும் விளைவித்தது கிடையாது. அனைத்து
பாம்புகளும் அவர் சொன்னபடி நடந்து கொள்ளக் கூடியவை. இரண்டு பாம்புகள் இது வரை இரண்டு
நாகரத்தினங்களை அவருக்குத் தந்திருக்கின்றன. அதனால் அந்த விசேஷ நாகரத்தினம்
தரும் பாம்பும் அங்கே வந்து சேரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
ஆனால் அது நாகராஜ் மகராஜிடம் போய்ச் சேர்ந்து அந்த விசேஷ நாகரத்தினம் இப்போது நாகராஜ்
வசம் இருப்பது அவர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவர்களை விட அதிகமாக அவர் ஏமாற்றத்தை
உணர்ந்திருப்பார் என்று அறிந்திருந்ததால் அந்த விசேஷ நாகரத்தினத்தைக் கைப்பற்ற அவர்
எதாவது உடனடி முயற்சி எடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்த்து இருவரும் ஏமாந்து போனார்கள்.
ஒரு சீடன் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு கேட்டான். “சுவாமிஜி. அந்த விசேஷ நாகரத்தினத்தைக் கைப்பற்ற நாம்
எதாவது செய்ய வேண்டாமா?”
காளிங்க சுவாமி
சொன்னார். “அதை எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் தரக்கூடிய ஆட்கள் சீக்கிரமே நம்மிடம்
வருவார்கள். அடுத்த அமாவாசை இரவில் அது நடக்கும். அதனால் கவலைப்படாதே. காத்திருப்போம்”
(தொடரும்)
I think Deepak is Madhavan's son. Nagaraj might have known Madhavan somehow. Very interesting.
ReplyDeleteS., I also thought in that like way.. Deepak is madhavan son and I think madhavan is nagaraj
DeleteIf Madhavan is Nagaraj, how his parents and friends fail to recognize him?
DeleteThat's the twist I think! Or madhavan and nagaraj may be friends..
Deleteசுவாரஸ்யம் தாங்கலை
ReplyDeleteஇந்ந வாரம் நாகராஜ் மற்றும் நரேந்திரன் சந்திப்பு வரும் என்று நினைத்தேன்... அடுத்த வாரம் தான் வரும் போல...
ReplyDeleteMaadavan and Nagraj are best friends and Maadavan was killed by his other friends for greed of nagarathnam. Ranjani and Maadavan were lovers and Deepak is their son. Sarath loved Ranjani and married her.. he supported killing maadavan to marry her and Kalyan killed for want of nagaratham which will give him money! this is my assumption when i read Deepak was introduced to Maharaj.Thank you
ReplyDeleteSit I completed yaro oruvan book...Awe...omg...what a book sir...my mother becomes great fan of you..lots of thanks for you...it's a awesome book...splendid...superb.. fantastic finally no words sir....
ReplyDeleteHi sir, are you writing new novel after saanakkiyan? If yes what kind and when will publish it?
ReplyDeleteName is yet to be finalized. It will be a spiritual thriller/mystery. It will be published in this year end.
Delete